Published:Updated:

Tamil News Today 'ஹெச்.ராஜா மீதான புகார் குறித்து விசாரணை செய்யப்படும்' - எல்.முருகன்

எல்.முருகன்
எல்.முருகன்

Tamilnadu live news Updates on 26-06-2021

26 Jun 2021 4 PM

+2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை அறிவிக்கப்பட்டது

26 Jun 2021 1 PM

'ஹெச்.ராஜா மீதான புகார் குறித்து விசாரணை செய்யப்படும்' - பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன்

இன்று கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க - வின் மாநிலத் தலைவர் எல்.முருகன், பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக-வுடன் கூட்டணி வைப்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றும், தேர்தல் செலவுக்கான பணத்தை முறைகேடு செய்ததாக ஹெச்.ராஜா மீது பாஜக நிர்வாகிகள் அளித்துள்ள புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் கூறினார்.

26 Jun 2021 12 PM

மக்கள் நீதி மய்யம்: களமிறக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் யார்?

தேர்தல் தோல்வி்க்குப் பின் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளை கமல்ஹாசன் பதவி விலகச் சொன்னார். கட்சியை மறுகட்டமைப்பு செய்யப்போவதற்காகத்தான் இந்த முடிவு எனச் சொல்லப்பட்டது. அந்தச் சமயத்தில், மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவராக இருந்த மருத்துவர் மகேந்திரன் உட்பட கட்சியிலிருந்தே சிலர் விலகினர். அப்போது கமல்ஹாசனும் அறிக்கை வழியாக தனது கருத்தைத் தெரிவித்தார். இந்தநிலையில், இன்று கமல்ஹாசன் தனது கட்சி நிர்வாகிகளுடன் இன்று இணையவழிக் கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில் தனது கட்சியின் புதிய நிர்வாகிகளை அறிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியில் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் தன்னை இணைத்துக்கொண்ட நிலையில், அதன் நிர்வாகிகள் சிலருக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது உறுதி. உள்ளாட்சிக்கு தன்னாட்சி என்கிற நோக்கத்துக்கான முதல் நகர்வு எனவும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். பழ.கருப்பையா மற்றும் பொன்ராஜ் வெள்ளைச்சாமி இருவரும் அரசியல் ஆலோசகர்களாகவும், ஏ.ஜி.மெளரியா துணைத் தலைவராகவும் (கட்டமைப்பு), தங்கவேலு துணைத் தலைவராகவும் (களப்பணி மற்றும் செயல்படுத்துதல்) நியமிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் நீதி மய்யம்  கட்சியின் புதிய நிர்வாகிகள்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய நிர்வாகிகள்
புதிய நிர்வாகிகளுடன் கமல்
புதிய நிர்வாகிகளுடன் கமல்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் தன்னை இணைத்துக்கொண்ட நிலையில், அதன் நிர்வாகிகள் சிலருக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் சிவ.இளங்கோவுக்கு மாநிலச் செயலாளர் (கட்டமைப்பு) பதவி வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு