Published:Updated:

கொரோனா: `தமிழ்நாட்டில் தொற்று குறைவாகக் காணப்பட்டாலும்...’-விழிப்புடன் இருக்க வலியுறுத்தும் முதல்வர்

முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துவருவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.

கொரோனா: `தமிழ்நாட்டில் தொற்று குறைவாகக் காணப்பட்டாலும்...’-விழிப்புடன் இருக்க வலியுறுத்தும் முதல்வர்

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துவருவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் உயர்ந்துவரும் கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இதையொட்டி, இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, அதிகாரிகளிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்தார்.

கொரோனா மரணங்கள்
கொரோனா மரணங்கள்
Representational Image

இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் , `` கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளான முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். கொரோனா பரிசோதனைகள், தொடர் கண்காணிப்பு, சிகிச்சை மற்றும் தடுப்பூசி ஆகியவற்றை முறையாகப் பின்பற்ற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைவாகக் காணப்பட்டாலும், அது உயராமல் இருக்குமாறு கட்டுப்படுத்த வேண்டும். சிகிச்சை வசதிகளைத் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.

கொரோனா கட்டுப்பாட்டுப் பணிகளில் சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, நகராட்சி நிர்வாகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை போன்ற துறைகளை ஈடுபடுத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், பணி செய்யும் இடங்கள் திருவிழாக்கள், திருமணங்கள் போன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் மக்களிடையே ஒரு சிலர் பாதிக்கப்படும்போது, இவர்கள் அனைவரையும் பரிசோதனை செய்து, தொடர் கண்காணிப்பு செய்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். தடுப்பூசி ஒன்றே கொரோனாவை வெல்லும் ஆயுதம் என்பதால் மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. தடுப்பூசியின் முக்கியத்துவம் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism