Published:Updated:

இலங்கையில் கொள்ளையடித்துவிட்டு தமிழ்நாட்டில் தஞ்சம்! - அகதிகள் இருவர் கைது

கைதுசெய்யப்பட்ட இலங்கை கொள்ளையர்கள்

இலங்கையில் நகைக்கடையில் கொள்ளையடித்துவிட்டு தமிழ்நாட்டுக்குள் அகதிகளாக நுழைந்த இருவரை போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் கொள்ளையடித்துவிட்டு தமிழ்நாட்டில் தஞ்சம்! - அகதிகள் இருவர் கைது

இலங்கையில் நகைக்கடையில் கொள்ளையடித்துவிட்டு தமிழ்நாட்டுக்குள் அகதிகளாக நுழைந்த இருவரை போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published:Updated:
கைதுசெய்யப்பட்ட இலங்கை கொள்ளையர்கள்

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அங்கிருந்து மக்கள் வாழ வழியின்றி தமிழ்நாட்டுக்கு தஞ்சமடைந்து வருகின்றனர்.‌ இந்த நிலையில், கடந்த மாதம் 21-ம் தேதி குழந்தைகள் உட்பட இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த எட்டு பேர் அகதிகளாக தனுஷ்கோடியை அடுத்த மணல் தீடையில் தஞ்சமடைந்தனர். தகவலறிந்து இந்திய கடலோரக் காவல் படையினர் அவர்களை மீட்டு கடலோர காவல் குழும போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் இலங்கை போலீஸாருக்கு அனுப்பிவைக்கப்பட்டு, பின்னர் மண்டபம் அகதிகள் முகாமில் அவர்கள் தங்கவைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இலங்கை போலீஸார் கடந்த 21-ம் தேதி அகதிகளாக வந்த 8 பேரில் இருவர் இலங்கையில் நகைக்கடை உரிமையாளரைத் தாக்கி நகைகளைக் கொள்ளையடித்து வந்தவர்கள் எனத் தெரிவித்திருக்கின்றனர்.

மண்டபம் காவல் நிலையம்
மண்டபம் காவல் நிலையம்

இலங்கை போலீஸார் கொடுத்த தகவலின் அடிப்படையில் மண்டபம் போலீஸார் அகதிகள் போர்வையில் வந்து முகாமில் தங்கியிருந்த இலங்கை யாழ்ப்பாணம் கோப்பை வடக்கு பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் கிருபாகரன், கிளிநொச்சி ஊற்றுப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் சந்திரகுமார் ஆகிய இருவரையும் அகதிகள் முகாமிலிருந்து கைதுசெய்து மண்டபம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைதுசெய்யப்பட்டிருக்கும் இருவரையும் அவர்கள் சொந்த நாட்டுக்கே அனுப்புவதா? அல்லது இங்கேயே வழக்கு பதிவுசெய்து சிறையில் அடைப்பதா? என்பது விசாரணைக்கு பிறகு முடிவு செய்யப்படும் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.