Published:Updated:

Tamil News Today: காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்; சென்னையில் விடிய விடிய கனமழை!

கனமழை
Live Update
கனமழை

11-11-2021 | இன்றைய மழை நிலவரம் மற்றும் முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

11 Nov 2021 6 AM

சென்னையில் விடிய விடிய கனமழை!

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்துவருகிறது.

தி.நகர், திருவான்மியூர், தரமணி, சைதாப்பேட்டை, ராயபுரம் அடையாறு உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்துவருகிறது.

சென்னை மழை
சென்னை மழை

வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் இயல்புநிலை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. இரவு முழுக்கப் பெய்த கனமழையால் பல்வேறு சாலைகள் மற்றும் சுரங்கப் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அதி கனமழையால் நுங்கம்பாக்கத்தில் 13 செ.மீ மழை பதிவாகியிருக்கிறது.