Published:Updated:

`படிப்புடன் விளையாட்டும் அவசியம்; எம்.எல்.ஏ பந்துவீச, பேட் செய்த விளையாட்டுத்துறை அமைச்சர்!'

அமைச்சர் மெய்ய நாதன்
அமைச்சர் மெய்ய நாதன்

அமைச்சர் மெய்ய நாதன் பேட் செய்ய, எம்.எல்.ஏ பழனியாண்டி பந்து வீசினார். எம்.எல்.ஏ வீசிய பந்துகளை எல்லாம் அமைச்சர் அடித்துப் பறக்கவிட்டார். இதையடுத்து, எம்.எல்.ஏ பேட் செய்ய அமைச்சர் பந்துவீசியும் அசத்தினர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தடுப்பூசி முகாம், சாலைப்பணிகளைத் துவக்கி வைத்தல், புதிய அங்கன்வாடி கட்டிட அடிக்கல் நாட்டு விழா எனப் பல்வேறு பணிகளைச் சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் துவங்கி வைத்தார். இந்த நிலையில்தான், கீரமங்கலம் அருகே செரியலூர் இனாம் கிராமத்தில் கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தது. இதனைக் கேள்விப்பட்ட அமைச்சர் மெய்யநாதன், ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ பழனியான்டி மற்றும் கட்சி நிர்வாகிகள் கிரிக்கெட் மைதானத்திற்கு ஒரு விசிட் அடித்தனர். மைதானத்தின் ஓரத்தில் மரக்கன்றை நட்டனர்.

அமைச்சர் மெய்யநாதன்
அமைச்சர் மெய்யநாதன்

தொடர்ந்து மைதானத்திற்குள் களமிறங்கிய அமைச்சர் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பேட்டை வாங்கிக்கொண்டு சென்று கிரிக்கெட் விளையாடினார். அமைச்சர் மெய்யநாதன் பேட் செய்ய, எம்.எல்.ஏ பழனியாண்டி பந்து வீசினார். எம்.எல்.ஏ வீசிய பந்துகளை எல்லாம் அமைச்சர் அடித்துப் பறக்கவிட்டார். இதையடுத்து, எம்.எல்.ஏ பேட் செய்ய அமைச்சர் பந்துவீசியும் அசத்தினர். அமைச்சரின் ஆட்டத்தைப் பார்த்து உற்சாகமடைந்த இளைஞர்கள் அமைச்சருடன் சேர்ந்து ஆர்வமாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, "அங்கிருந்த இளைஞர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன்,

" அனைவரும் பள்ளிப் படிப்புடன், விளையாட்டிலும் கவனம் செலுத்தணும். ஒவ்வொருவரும் விளையாட்டு வீரராகி நம் நாட்டிற்குப் பெருமை சேர்க்கணும். இதேபோல், ஒவ்வொரு இளைஞர்களும் மரக்கன்றுகளை நடுவதுடன் அதனைப் பாரமரித்த்துச் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டும்"என்று கூறிவிட்டுக் கிளம்பினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு