Published:Updated:

`சிறு வயது முதலே லட்சியம்!’ - உக்ரைன் ராணுவத்தில் இணைந்த தமிழக மாணவர்!

உக்ரைன் ராணுவத்தில் தமிழக மாணவர்

கோவையைச் சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவர் உக்ரைன் ராணுவத்தில் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

`சிறு வயது முதலே லட்சியம்!’ - உக்ரைன் ராணுவத்தில் இணைந்த தமிழக மாணவர்!

கோவையைச் சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவர் உக்ரைன் ராணுவத்தில் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Published:Updated:
உக்ரைன் ராணுவத்தில் தமிழக மாணவர்

உக்ரைன் - ரஷ்யா போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. இந்நிலையில், கோவையைச் சேர்ந்த 21 வயது மாணவர் ஒருவர் உக்ரைன் துணை ராணுவத்தில் இணைந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் போர்
உக்ரைன் போர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோவை, துடியலூர் பகுதியைச் சேர்ந்த அந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கோவையில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, கார்கிவ் நேஷனல் ஏரோஸ்பேஸ் பல்கலைக்கழகத்தில் விமானவியல்துறையில் படித்துவருகிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உக்ரைனிலிருந்து மாணவர்கள் வெளியேற மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகள் எடுத்துவரும் நிலையில், கோவை மாணவர் குறித்து எந்தத் தகவலும் தெரியாமல் இருந்துவந்தது. இதற்கிடையே, அவர் போர் காரணமாக அந்த நாட்டின் துணை ராணுவப் பிரிவில் இணைந்திருப்பது உளவு அமைப்புகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாணவர்
மாணவர்

சிறு வயது முதலே ராணுவத்தில் சேர வேண்டும் என்பது அந்த மாணவரின் லட்சியம். இதற்காக இரண்டு முறை இந்திய ராணுவத்தில் விண்ணப்பித்திருக்கிறார். உயரம் குறைவு என்பதால், அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

அமெரிக்க ராணுவத்தில் சேர வாய்ப்பிருக்கிறதா என்று பார்த்து, அதற்கும் அவர் முயன்றிருக்கிறார். அங்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. போர் காரணமாக, உக்ரைன் ராணுவத்தில் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்திருகிறது. கடைசியாக கடந்த ஆண்டு கோவை வந்தவர், போருக்கு முன்புவரை குடும்பத்துடன் தொடர்பில் இருந்திருக்கிறார்.

உக்ரைனில் தமிழக மாணவர்
உக்ரைனில் தமிழக மாணவர்

நீண்ட முயற்சிக்கு பிறகு அவரின் பெற்றோர், இந்தியத் தூதரகம் மூலம் மகனுடன் பேசியுள்ளனர். உளவுத்துறையினர் கோவையில் உள்ள மாணவரின் வீட்டுக்குச் சென்றபோது, அங்கு ராணுவம் சம்பந்தப்ப்பட்ட படங்களே சுவர்களில் அதிகம் ஒட்டப்பட்டிருப்பதைக் கண்டுள்ளனர்.

மகன் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்துள்ள தகவலால் பெற்றோர் மிகவும் வேதனையாக உள்ளனர். நாம் அவர்களைத் தொடர்புகொண்டபோது பேச மறுத்துவிட்டனர். தொடர்ந்து தங்களுடைய மகனை மீட்க மத்திய, மாநில அரசின் உதவியை நாடவிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.