Published:Updated:

தஞ்சை: இரண்டு சிறுவர்களைக் காப்பாற்றிய மூதாட்டி; சான்றிதழ் வழங்கி, பாராட்டிய மாவட்ட ஆட்சியர்!

சரோஜாவை வாழ்த்திய மாவட்ட ஆட்சியர்
News
சரோஜாவை வாழ்த்திய மாவட்ட ஆட்சியர்

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு சிறுவர்களைக் காப்பாற்றிய 60 வயது மூதாட்டிக்கு வீர தீரச் செயலுக்கான சான்றிதழ் வழங்கி, பாராட்டினார் ஆட்சியர்.

தஞ்சை: இரண்டு சிறுவர்களைக் காப்பாற்றிய மூதாட்டி; சான்றிதழ் வழங்கி, பாராட்டிய மாவட்ட ஆட்சியர்!

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு சிறுவர்களைக் காப்பாற்றிய 60 வயது மூதாட்டிக்கு வீர தீரச் செயலுக்கான சான்றிதழ் வழங்கி, பாராட்டினார் ஆட்சியர்.

Published:Updated:
சரோஜாவை வாழ்த்திய மாவட்ட ஆட்சியர்
News
சரோஜாவை வாழ்த்திய மாவட்ட ஆட்சியர்

இந்தியா முழுவதும் இன்று 73-வது குடியரசு தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தேசியக்கொடியை ஏற்றி, பல்வேறு சாதனைகள் புரிந்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இதில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு சிறுவர்களைக் காப்பாற்றிய 60 வயது மூதாட்டிக்கு வீர தீரச் செயலுக்கான சான்றிதழ் வழங்கி, பாராட்டினார்.

இதேபோல, தொடர்ந்து சமூக செயல்களில் ஈடுபட்டு, அடிதட்டு மக்களின் வளர்ச்சிக்குப் பல்வேறு உதவிகளை செய்துவரக்கூடிய சமூக ஆர்வலரான பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஆதி.ராஜராம் என்பவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தன் உடலை தானமாகக் கொடுத்திருக்கிறார். அவரின் சேவையை பாராட்டி மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

வீர தீர செயலுக்கான பாராட்டு பெறும் சரோஜா
வீர தீர செயலுக்கான பாராட்டு பெறும் சரோஜா

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள அலவந்திபுரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் சரோஜா (60). இவர் கணவர் சந்தானம். சரோஜா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளை தினமும் மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம். வழக்கம்போல் கடந்த 13-ம் தேதி கபிஸ்தலம் அருகே உள்ள கங்காதரபுரம் காவிரி ஆற்றுக்கு அருகே ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.

அப்போது, சுமார் 4 மணியளவில் 13 வயது மதிக்கத்தக்க மூன்று சிறுவர்கள் குளிக்கச் சென்று ஆற்றுக்குள் இறங்கியுள்ளனர். ஆழத்தை அறியாத சிறுவர்கள் ஆழமான பகுதிக்குச் சென்றுவிட்டனர். இதில் ஒரு சிறுவன் ஆற்று நீருக்குள் மூழ்க அவனைக் காப்பாற்ற மற்ற இரண்டு பேரும் ஒவ்வொருவராகச் சென்றுள்ளனர். ஆழம் அதிகமாக இருந்ததால் அந்தச் சிறுவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அதையடுத்து, `ஐயோ காப்பாத்துங்க...’ எனக் கத்திக் கதறியுள்ளனர். சிறுவர்களின் சத்தம் கேட்டு ஓடிவந்த சரோஜா, தத்தளித்துக்கொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்துப் பதற்றமடைந்தார். பின்னர் சற்றும் யோசிக்காமல் தனது சேலையை அவிழ்த்து சிறுவர்கள் இருந்த இடத்தில் வீசினார். சேலையைப் பிடித்துக்கொண்டு இரண்டு சிறுவர்கள் மெல்ல கரைக்கு வந்து சேர்ந்தனர்.

அதற்குள் மற்றொரு சிறுவன் முழுவதுமாக மூழ்கி மாயாமாகிவிட்டான். பின்னர் அவன் சடலமாக மீட்கப்பட்டான். 60 வயதில் இரண்டு சிறுவர்களைக் காப்பாற்றிய சரோஜாவின் செயல் பெரும் பாராட்டைப் பெற்றது. இதையறிந்த திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி பாலகிருஷ்ணன் அப்போதே சரோஜாவை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி வாழ்த்தினார்.

இது தொடர்பாக சரோஜாவிடம் பேசினோம். ``ஆடு மேய்த்துக்கொண்டிருந்த நான் சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டதுமே ஆடுகளை அப்படியே விட்டுட்டு ஓடினேன். மூன்று சிறுவர்கள் தத்தளிச்சிக்கிட்டு இருந்தாங்க. எனக்கு என்ன செய்றதுன்னே தெரியலை. டக்குனு என் சேலையை அவிழ்த்து ஒரு முனையை நான் பிடித்துக்கொண்டு மற்றொரு முனையை ஆற்றுக்குள் வீசினேன். அதைப் பிடிச்சுக்க சொல்லி ரெண்டு பேரை ஒருவழியாகக் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்து காப்பாத்தினேன்.

குடியரசு தின விழா கலெக்டரிடம் பாராட்டு சன்றிதழ் பெறும் ஆதி.ராஜாராம்.
குடியரசு தின விழா கலெக்டரிடம் பாராட்டு சன்றிதழ் பெறும் ஆதி.ராஜாராம்.

மற்றொரு சிறுவன் ஆழமான பகுதிக்குள் சென்று மூழ்கிட்டான். அந்த ஒத்த உசுரையும் காப்பாத்தியிருந்தா என் மனசு முழுக்க நெறஞ்சுருக்கும். ஆனா, என்னால முடியாமபோச்சு, அவன் மூச்சும் அடங்கிப்போச்சு. கலெக்டர் சார், சிறுவர்களை காப்பாற்றியதற்காக என்னை அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டியிருக்கிறார். மனிதாபிமானத்தோடு செஞ்ச இந்த சேவையை பலரும் பாராட்டுறது சந்தோஷமா இருக்கு" என்றார்.