Published:Updated:

பணத்தைத் தொலைத்த இளைஞன்; டிரைவர் கர்ணனின் நேர்மை; பாராட்டிய தஞ்சாவூர் போலீஸ் எஸ்.பி!

தவறவிட்ட பணம்

சாலையில் 500 ரூபாய் நோட்டுகள் சிதறிக்கிடப்பதைப் பார்த்த அந்தப் பகுதியினர் ஓடிச் சென்று பணத்தை எடுத்துள்ளனர்.

பணத்தைத் தொலைத்த இளைஞன்; டிரைவர் கர்ணனின் நேர்மை; பாராட்டிய தஞ்சாவூர் போலீஸ் எஸ்.பி!

சாலையில் 500 ரூபாய் நோட்டுகள் சிதறிக்கிடப்பதைப் பார்த்த அந்தப் பகுதியினர் ஓடிச் சென்று பணத்தை எடுத்துள்ளனர்.

Published:Updated:
தவறவிட்ட பணம்

கும்பகோணம் மடத்துத் தெருவைச் சேர்ந்தவர் ரேணுகா- ராமராஜன் தம்பதியரின் மகன் சூர்யா. இவர்களுக்குச் சொந்தமான வீட்டில் ஒத்திக்கு குடியிருந்தவர்கள் வீட்டைக் காலி செய்வதாகக் கூறினர். எனவே, ஒத்திப் பணம் 3.5 லட்சம் ரூபாயை அவர்களிடம் கொடுப்பதற்காக சூர்யா எடுத்துச் சென்றிருக்கிறார். கும்பகோணம் பகுதியிலிருந்து தஞ்சாவூர் சாலையில் வரும்போது பாபநாசம் திருப்பாலத்துறை மெயின் ரோட்டில் மஞ்சள்பையில் வைத்திருந்த பணம் கீழே விழுந்துள்ளது. இதில் 500 ரூபாய் நோட்டுக்கட்டாக இருந்த பணம் சாலையில் சிதறியுள்ளது. சூர்யா இதை கவனிக்காமல் சென்றுவிட்டார்.

போலீஸ் விசாரணை
போலீஸ் விசாரணை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சாலையில் 500 ரூபாய் நோட்டுகள் சிதறிக்கிடப்பதைப் பார்த்த அந்தப் பகுதியினர் ஓடிச் சென்று பணத்தை எடுத்துள்ளனர். சூர்யா டூ வீலரில் செல்லும்போது அவரின் பின்னால் சென்ற திருக்காட்டுப் பள்ளியை சேர்ந்த அரசு பேருந்து டிரைவரான கர்ணன் என்பவர் இதை கவனித்திருக்கிறார்ர். உடனடியாக அவர் வந்த வாகனத்தைவிட்டு இறங்கி கீழே கிடந்த பணத்தை எடுத்டிருக்கிறார். அத்துடன் பணத்தை எடுத்த சிலரிடம் பணத்தைப் பெற்று பாபநாசம் காவல் நிலையத்துக்குச் சென்று நடந்த விவரத்தைக் கூறி பணத்தை ஒப்படைத்திருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பணம் காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த சூர்யா பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பிறகு கீழே விழுந்த பணம் அவருடையதுதானா என்று இன்ஸ்பெக்டர் அழகம்மாள் விசாரணை மேற்கொண்டதில் அந்தப் பணம் சூர்யாவுடையது என்பது உறுதியானது. இந்த விவகாரம் தஞ்சாவூர் எஸ்.பி ரவளிப் பிரியாவிடம் விசாரணைக்குச் சென்றது.

பாராட்டு பெற்ற டிரைவர் கர்ணன்
பாராட்டு பெற்ற டிரைவர் கர்ணன்

சம்பவத்தை விசாரித்த எஸ்.பி., சூர்யாவை எஸ்.பி அலுவலகத்துக்கு வரவழைத்து அவர் தவறவிட்ட 3.5 லட்சம் பணத்தைக் கொடுத்தார். மேலும் பணத்தை எடுத்துக் கொடுத்த டிரைவர் கர்ணணைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்ததுடன், அவரை ஊக்கப்படுத்தும் வகையில் சான்றிதழ் வழங்கினார்.