Election bannerElection banner
Published:Updated:

ஈமு கோழி மோசடி வழக்கு: 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம்... தலைமறைவான உரிமையாளர்கள்!

ஈமு கோழி
ஈமு கோழி

ஈமு கோழி மோசடி செய்தவருக்கு 10 ஆண்டு சிறை 15 லட்சம் அபராதம் விதித்து கோவை டான்பிட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொங்கு மண்டலத்தை அதிர்ச்சியடைய வைத்த மெகா மோசடிகளில் ஒன்று ஈமு கோழி. கவர்ச்சிகர திட்டங்கள், பிரபலங்களை வைத்து விளம்பரம் போன்றவற்றின் மூலம் ஏழை மக்கள் மற்றும் விவசாயிகள் கிட்டத்தட்ட ரூ.1,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து ஏமாந்தனர். அந்த நிறுவனங்களை நம்பிய பலர் நிற்கதியான நிலையில், சிலர் உயிருடன் இல்லை.

இப்படி ஸ்கெட்ச் போட்டு மக்களை ஏமாற்றிய ஈமு கோழி மோசடி வழக்குகள் கோவை டான்பிட் நீதிமன்றத்தில் (முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நீதிமன்றம்) நடந்து வருகிறது. கடந்தாண்டுகூட, கோவை கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த ஜே.பி.ஆர் ஈமு அக்ரி பார்ம்ஸ் இந்தியா நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கு நீதிமன்றம் 10 ஆண்டு சிறை விதித்து உத்தரவிட்டது.

ஈமு கோழி
ஈமு கோழி
Ramesh.K
ஈமு மோசடி: 10 ஆண்டுகள் சிறை...  ரூ.58 லட்சம் அபராதம்! - கோவை டான்பிட் நீதிமன்றம் அதிரடி

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி. இவர், திருப்பூர் மாவட்டத்தில் சபரி ஆண்டவர் ஈமு கோழி வளர்ப்பு என்ற நிறுவனத்தை 2011-ம் ஆண்டு தொடங்கினார். அந்த நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், ஈமு பண்ணை அமைப்பதுடன் மாதம் ரூ.8,000 வழங்குவதுடன், 2 ஆண்டுகள் கழித்து முதலீட்டுப் பணத்தை திருப்பி அளிப்பதாக உறுதியளித்துள்ளார்.

வி.ஐ.பி என்று மற்றொரு திட்டத்தில் ரூ.1.5 லட்சம் முதலீடு செய்தால், ஈமு பண்ணை அமைப்பதுடன் மாதம் ரூ.12,000, ஆண்டு போனஸ் ரூ.20,000 வழங்குவதுடன் 2 ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டு பணம் முழுவதையும் திருப்பி அளிப்பதாகக் கூறியுள்ளார்.

அதை நம்பி திருப்பூர் மூகாம்பிகை நகர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் உள்பட 11 பேர், ஈஸ்வரமூர்த்தி நிறுவனத்தில் ரூ.15,58,800 முதலீடு செய்துள்ளனர். ஆனால், சொன்னபடி ஈஸ்வரமூர்த்தி எந்தத் தொகையும் வழங்கவில்லை. இதுகுறித்து சக்திவேல் போலீஸில் புகாரளித்தார். அவர் மீது மோசடி மற்றும் முதலீட்டாளர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஈமு கோழி
ஈமு கோழி
Ramesh.K

இந்த வழக்கு கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, ஈஸ்வரமூர்த்திக்கு 10 ஆண்டு சிறை மற்றும் ரூ.15,00,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். ஈஸ்வரமூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவரை பிடிக்க பிடிவாரன்ட் பிறக்கப்பட்டுள்ளது. ஈஸ்வரமூர்த்தி ஜோதிடர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் பிரகாஷ், மகேஷ் சாரு பார்ம்ஸ் என்ற பெயரில் நாட்டுக் கோழி வளர்ப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர். இவர்களிடம் ரூ.1.50 முதலீடு செய்தால், 350 நாட்டுக் கோழிக் குஞ்சுகள் கொடுக்கப்படும்.

அவற்றைப் பராமரிக்க கூரை அமைத்து தீவனம் வழங்கப்படும். இவற்றுக்கு மாதம் ரூ.10,000 போனஸ் வழங்குவதுடன், 3 ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டுத் தொகை வழங்கப்படும் எனக் கூறியுள்ளனர். இதை நம்பி 16 பேர் சுமார் ரூ.40 லட்சம் முதலீடு செய்துள்ளனர். ஆனால், சொன்னபடி நடக்காததால் அவர்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகாரளிக்கப்பட்டிருந்தது.

Court (Representational Image)
Court (Representational Image)

இந்த வழக்கும் கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிமன்றம் கடந்த வாரம், பிரகாஷ்க்கு 10 ஆண்டு சிறையும், ரூ.21 லட்சம் விதித்து தீர்ப்பளித்தது. ஆனால், பிரகாஷ் நீதிமன்றத்தில் ஆஜராகததால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, சகோதரர்களில் ஒருவரான மகேஷ் என்பவரை பிடிக்கவும் வாரன்ட் பிறக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பெருந்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட மகேஷ் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு பிறகு சிறையில் அடைக்கப்பட்டார். பிரகாஷ் தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு