Published:Updated:

"சிறையில் இருக்கும் அந்தப் பெண்ணின் வாழ்க்கை ஓர் உதாரணம்!” - நந்தினி வேதனை #BanTasmac

அரசே நடத்தும் மதுபோதைக் கூடங்கள் தனிநபர் வாழ்க்கையை எந்த அளவுக்குச் சீரழித்திருக்கிறது என்பதற்கு அந்தப் பெண்ணின் வாழ்க்கை ஓர் உதாரணம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவன் மின்விசிறியில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதுபோன்ற டாஸ்மாக் அடிமைத்தனத்தால் ஏற்படும் மரணங்கள் அண்மைக்காலமாக அதிகரித்தநிலையில் இருக்கிறது.

டாஸ்மாக்குக்கு எதிரான செயற்பாட்டாளர் நந்தினி
டாஸ்மாக்குக்கு எதிரான செயற்பாட்டாளர் நந்தினி

அண்மையில் சிறை சென்றுவந்த டாஸ்மாக்குக்கு எதிரான செயற்பாட்டாளர் நந்தினி, சிறையில் தாம் சந்தித்த பெண்களும் டாஸ்மாக் அவர்கள் வாழ்க்கையைப் பாதித்தது குறித்தும் முகநூலில் பகிர்ந்த வீடியோ மிக வைரலாகப் பரவியது. தொடரும் டாஸ்மாக் மரணங்கள் குறித்து நம்மிடம் சில கருத்துகளைப் பகிர்ந்தார் அவர்.

"தன் கணவன் திருமணம் ஆன நாள் முதல் தினமும் குடித்துவிட்டு வந்து தன்னை தொந்தரவுபடுத்தியதால், பொறுமை இழந்து கணவன் தலையில் அம்மிக்கல்லைப் போட்டு கொன்றுவிட்டு சிறைக்கு வந்ததாக ஒரு பெண் தனது கதையைக் கூறினார். இதுபோன்ற செய்திகளைச் செய்தித்தாள்களில் நாம் அன்றாட நிகழ்வாகக் கடந்துகொண்டிருக்கிறோம். ஆனால், இப்படியாக அரசே நடத்தும் மதுபோதைக் கூடங்கள் தனிநபர் வாழ்க்கையை எந்த அளவுக்குச் சீரழித்திருக்கிறது என்பதற்கு அந்தப் பெண்ணின் வாழ்க்கை ஓர் உதாரணம்.

ஒருபக்கம் ஜனநாயகம் என்று பேசும் அரசு, மறுபக்கம் டாஸ்மாக்குகளை நடத்தி குடும்பங்களை அழித்துக்கொண்டிருக்கிறது.
- நந்தினி

மேலும் ஒரு சோகக்கதையும் இருக்கிறது. குடித்துவிட்டு மது போதையில் வீட்டுக்கு வந்து அப்பா, தன் தாயைத் துன்புறுத்தியதில் ஆத்திரமடைந்த மகன் தந்தையைத் தட்டிக்கேட்டுள்ளான். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் தடுமாறி கீழே விழுந்து தந்தை, சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். தற்போது மகன் ஆண்கள் சிறையிலும் தாய் பெண்கள் சிறையிலும் இருக்கிறார்கள். விருத்தாசலத்தில் நடந்த சம்பவமும் இப்படித்தான். ஒருபக்கம் ஜனநாயகம் என்று பேசும் அரசு, மறுபக்கம் டாஸ்மாக்குகளை நடத்தி குடும்பங்களை அழித்துக்கொண்டிருக்கிறது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு