Published:Updated:

டாஸ்மாக்: ஜனவரி 12-ல் ரூ.155 கோடி; 13-ல் ரூ.203 கோடி... பொங்கல் அன்று?! - மது விற்பனை விவரங்கள்

தமிழ்நாடு டாஸ்மாக்
News
தமிழ்நாடு டாஸ்மாக்

பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று ஒரு நாளில் மட்டும் 317 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக்கில் மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கின் காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பொங்கல் பண்டிகை சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின்போது டாஸ்மாக்கில் இதுவரை எத்தனை கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன. இதில் அதிகபட்சமாக நேற்று ஒரு நாளில் மட்டும் 317 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. திருவள்ளுவர் தினம், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என அடுத்தடுத்து இரண்டு நாள்கள் விடுமுறை என்பதால், நேற்றைக்கு விற்பனை சூடுபிடித்திருக்கிறது.

டாஸ்மாக்
டாஸ்மாக்
நக்கீரன்

மேலும் ஜனவரி 12-ம் தேதி ரூ.155 கோடிக்கும், 13-ம் தேதி ரூ.203 கோடிக்கும் டாஸ்மாக்கில் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது, இந்த மூன்று நாள்களில் மொத்தம் 675 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது என டாஸ்மாக் நிர்வாகம் கூறியுள்ளது. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது ஜனவரி 14, 15 ஆகிய தேதிகளில் 417 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz