Published:Updated:

`இழுத்து மூடு’ போராட்டம்... போதையில் உயிரிழந்த நபர்...- டாஸ்மாக் களேபரங்கள் #LiveUpdates

மதுப் பிரியர்கள்
மதுப் பிரியர்கள் ( எம்.விஜயகுமார். )

டாஸ்மாக் திறப்பு தொடர்பான அப்டேட்!

07 May 2020 9 PM

போராட்டம்...மரணம்! திருச்சி நிலவரம்

அரசு அறிவித்தபடி மார்ச் 24ம் தேதி முதல் மூடப்பட்டிருந்த திருச்சி டாஸ்மாக் கடைகளில் கொரோனா முன் தடுப்பு நடவடிக்கையாக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள காஞ்சனா டவர் எதிரிலுள்ள டாஸ்மாக் உள்ளிட்ட பலகடைகளில் குடிமகன்களுக்கு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.

டாஸ்மாக் கடை திறப்பு காரணமாக இன்று காலையிலிருந்தே, கூட்டம் களைகட்டியது. நீண்ட வரிசையில் காத்துக்கிடக்க அவர்களை போலீஸார் ஒழுங்குபடுத்தி வந்தனர். டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்து, இன்று காலை மக்கள் அதிகாரம் அமைப்பின் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் செழியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 டாஸ்மாக் கடை முன்பு
டாஸ்மாக் கடை முன்பு

ஊரடங்கையும் காவல்துறை தடையையும்மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழாதன், தந்தை பெரியார் திராவிடர் கழக மாநகர தலைவர் வின்சென்ட், ம.க.இ.க மாவட்டச் செயலாளர் ஜீவா, பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் முன்னாள் பொதுச் செயலர் சுந்தரராசு, அகில இந்திய மஜ்லிஸ் கட்சியைச் சேர்ந்த சம்சுதீன் உள்ளிட்டோர் மற்றும் அந்த அமைப்பினர் ஏராளமாக கலந்துகொண்டு பேசினர்.

டாஸ்மாக்கை இழுத்து மூடு" ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக்கை இழுத்து மூடு" ஆர்ப்பாட்டம்

தொடர்ந்து தகவலறிந்து அங்கு வந்த போலீஸார் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைது செய்து, திருச்சி புத்தூர் முகூர்த்தம் மண்டபத்தில் அடைத்தனர். தொடர்ந்து இன்று மாலை கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

நிலைமை இப்படியிருக்கத் திருச்சி டாஸ்மாக் கடை ஒன்றில் வாங்கிய மதுபானத்தை அருந்திய ஒருவர் மதுபானக் கடை அருகிலேயே மயங்கிவிழுந்து மரணமடைந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி பெரிய கடைவீதி பகுதியிலுள்ள டாஸ்மாக் மதுபானக்கடை இன்று காலை திறக்கப்பட்டது. நீண்ட வரிசையில் நின்று வாங்கிய மதுபானத்தை வாங்கிய நபர் ஒருவர், டாஸ்மாக் கடை அருகே அமர்ந்து காலை முதலே மதுபானம் அருந்தி வந்தார். தொடர்ந்து அவர், அப்பகுதியிலுள்ள சித்த மருத்துவக் கடை முன்பு மயங்கி விழுந்தவர் நீண்ட நேரமாகியும் எழவேயில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், அவரை எழுப்பியும் அவர் எழவே இல்லை. தொடர்ந்து அவர்கள், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக ஆம்புலன்ஸ் வரவழைத்தனர்.

டாஸ்மாக் மது குடித்து மரணமடைந்த நபர்
டாஸ்மாக் மது குடித்து மரணமடைந்த நபர்

தொடர்ந்து அங்குவந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், மயங்கிக் கிடந்தவரை பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். தகவலறிந்து அங்குவந்த போலீஸார் இறந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், இறந்தவர் திருச்சி பெரியகடை வீதியில் உள்ள இந்தியன் வங்கியின் அருகே இயங்கிவரும் ஒரு தனியார் ஓட்டலில் சப்ளையர் ஆக பணியாற்றி வந்தார் என்பதும் அவர் பெயர் சரவணன் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இறந்த சரவணன் காலாவதியான மதுபானத்தைக் குடித்ததாகவும், அதனால்தான் அவர் இறந்துபோனதாகவும் தகவல்கள் வெளியாகி திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-சி.ய.ஆனந்தகுமார்

படங்கள் - தே.தீட்ஷித்

07 May 2020 7 PM

டோக்கன், மது - இரண்டு வரிசை

நீலகிரியிலும் மதுபானக் கடைகள் திறக்க நேற்று காலை முதலே பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. எல்லாக் கடைகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டன.

nilgiri tasmac
nilgiri tasmac

இன்று காலை 10 மணிக்குக் கடைகள் திறக்கப்பட்டாலும்‌ காலை 7 மணி முதலே மதுக்கடைகள் முன்பு ஆண்கள் வரிசையில் நிற்க ஆரம்பித்தனர். டோக்கனுக்கு ஒரு வரிசை, மது வாங்க ஒரு வரிசை எனப் பல கடைகளில் இரண்டு வரிசைகள் கடைப்பிடிக்கப்பட்டன. மது வாங்க வந்த ஆண்கள் போலீஸாரின் கெடுபிடியால் சுகாதார இடைவெளியை முறையாகப் பின்பற்றி பொறுப்புள்ள குடிமகன் என்ற பெயரைப் பெற்றனர்.

nilgiri tasmac
nilgiri tasmac

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பல மதுக்கடைகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஊட்டியில் உள்ள ஒன்றிரண்டு மதுக்கடைகளுக்குள்ளேயே சென்று சுகாதார ஏற்பாடுகளை ஆய்வு செய்து, பாதுகாப்பை உறுதி செய்தார்.

- சதீஸ் ராமசாமி

படங்கள் - கே.அருண்

07 May 2020 7 PM

சேலத்தில் குவிந்த மதுப்பிரியர்கள்!

சேலத்தில் காலை முதலே டாஸ்மாக் கடைகள் முன்பு கூட்டம் அலைமோதுகிறது. போலீஸார் அவர்களை ஒழுங்குபடுத்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் சரக்கு வாங்க க்யூவில் நின்று கொண்டிருந்த மனோகரன், ``நான் செங்கல் சூளையில் வேலை பார்க்கும் கூலித் தொழிலாளி. வேலை அலுப்பிற்காகத் தினமும் கொஞ்சம் சரக்குப் போடுவது வழக்கம். கடந்த 40 நாள்களாக ஊரடங்கால் வேலை வெட்டி இல்லை. சரக்குக் கடையும் திறக்கவில்லை. வீட்டிலேயே இருந்தேன். குடிக்க வேண்டுமென்ற எண்ணமே வர்றல...குடிப் பழக்கமே மறந்து போச்சு.

வரிசை
வரிசை
எம்.விஜயகுமார்

ஆனால், இன்றைக்கு டாஸ்மாக் கடைகள் திறப்பதாகச் சொல்லி ரெண்டு நாளா விளம்பரம் செய்ததால் சரக்கு அடிக்க ஆசை வந்திருச்சி. என் மனைவி அரிசி வாங்க வைத்திருந்த 500 ரூபாயைத் தெரியாமல் எடுத்துவிட்டு வந்தேன். ஒரு குவாட்டர் வாங்கிக் குடிச்சிட்டு மீதிக் காசைக் கொண்டு போய் கொடுத்திடுவேன். அரசாங்கம் தான் நான் குடிப்பதற்குக் காரணம். இவ்வளவு நாளாகக் குடிக்காத இருந்த எங்களை இன்று கடையைத் திறந்து குடிக்க வச்சிட்டாங்க'' என்றார்.

- வீ.கே.ரமேஷ்

07 May 2020 6 PM

பொன்னான 40 நாள்கள்..மதுக் கடைகள் வெறிசோடட்டும் !

ஸ்பேரோ விருது பெற்ற பெண் எழுத்தாளரும் , லட்சுமி எனும் பயணி என்ற புத்தகத்தை எழுதியவருமான லட்சுமி அம்மாள், டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இவர் தலைவராக பொறுப்பு வகிக்கும் மகளிர் ஆயம் அமைப்பு, மது ஆலைகளையும் மதுக்கடைகளையும் மூடக்கோரி, பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். இந்நிலையில்தான் மதுப் பிரியர்களுக்கு இவர் உருக்கமான வார்த்தைகளில் ஓர் வேண்டுகோள் விடுக்கிறார். ``கொரோனாவால், ஒவ்வொரு விடியலுக்கு பின்பும் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரிவதில்லை. எனவே, ஒவ்வொருவரும் தீய பழக்கங்களை கைவிட்டு நல்லவராக வாழ்வதே நல்லது. தமிழக அரசு மதுக்கடைகளை திறந்து சவக் குழிக்கு மது பிரியர்களை அழைக்கிறது.

உங்களைக் காக்கும் காவல்துறையினர், மதுக் கடைக்கும் காவல் காத்து உயிர்வதைக்குத் தள்ளப்படப் போகிறார்கள். தூய்மைப் பணியாளர்கள் மது குப்பிகளை அள்ளி கொரோனாவைக் கையேந்தி ஏற்றுக்கொள்ளப் போகிறார்கள். உங்கள் குடும்பத்தினர் மேலும் மேலும் வறுமைக்கு தள்ளப்படுவார்கள். உங்கள் குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகப் போகிறார்கள். ஆக, மது என்னும் அரக்கன் கொரோனாவை கை நீட்டி அழைக்கிறான். இந்த அரக்கனை திறந்து விட்டது தமிழக அரசு. நம் வாழ்க்கையை பலி கொடுத்து வாழும் அரசு தேவையா? மதுவின் தீமையை கருத்தில்கொள்ளுங்கள்.

லட்சுமி அம்மாள்
லட்சுமி அம்மாள்

இன்றைய இளைய தலைமுறைகளே மதுக்கடைகளை நாடதீர்கள். தமிழகத்தில் என்றுமே திறக்கக் கூடாத கதவுகள் மது ஆலை கதவுகளும் மதுக்கடைகள் கதவுகளும். நீங்கள் கடந்து வந்த நாற்பது நாள்கள் பொன்னான நாள்கள். இத்தனை நாள்கள் மதுவை மறந்து மகிழ்ச்சியாகதானே வாழ்ந்தீர்கள். உங்கள் குடும்பம் எவ்வளவு நிம்மதியாக இருந்தது. நினைத்துப் பாருங்கள். `மதுவே வேண்டாம்’ என்ற ஒற்றை கருத்தில் தமிழக மக்கள் அனைவரும் ஒன்றாக இணைவோம். மதுப் பிரியர்கள், மதுவை முற்றிலுமாக தவிர்த்து, டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக தனிமைப்படுத்துங்கள். இனி தமிழ்நாட்டில் மதுக்கடைகள், ஆள் அரவம் இன்றி வெறிச்சோடி கிடக்கட்டும்” என உருக்கமான வேண்டுகோள் விடுக்கிறார்.

-கு.ராமகிருஷ்ணன்

07 May 2020 5 PM

திருவண்ணாமலை மூதாட்டியின் நடனம்!

44 நாள்களுக்கு பிறகு மது வாங்கிய ஆனந்தத்தில் 65 வயது மூதாட்டி பாட்டுப் பாடி நடமாடினார்.

மூதாட்டி
மூதாட்டி
கா.முரளி

திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 215 மதுபான கடைகள் உள்ளது. இதில், நகர் பகுதிகளின் கொரோனா பாதுகாப்பு கருதி 49 கடைகள் மூடப்பட்டு 166 கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை நடந்து வருகிறது. மதுப் பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர். இந்த நிலையில் ஆரணி அருகே மேல்சிசமங்களம் டாஸ்மாக் கடையில் மூதாட்டி ஒருவர் 44 நாள்களுக்கு பிறகு மது வாங்கிய ஆனந்தத்தில் டாஸ்மாக் முன்பாக பாட்டு பாடி ஆனந்தமானர்.

- கா.முரளி

07 May 2020 4 PM

செல்லூர் டாஸ்மாக் கடையின் ஷட்டரை இழுத்து மூடிய பெண்கள்!

பெண்கள்
பெண்கள்
ஈ.ஜெ.நந்தகுமார்

மதுரை செல்லூர் மதுக்கடையை பெண்கள் திரண்டு வந்து ஷட்டரை இழுத்து அடைத்தார்கள். இதனால் அங்கு பதற்றமானது. காவல்துறையினர் வந்து மீண்டும் கடையை திறந்தார்கள்.

- செ.சல்மான்

07 May 2020 1 PM

அருகருகே ரேஷன் கடை - டாஸ்மாக்!

குடிப்பதற்கும்,குடிமை பொருளுக்கும் எதிர் எதிர் வரிசை
குடிப்பதற்கும்,குடிமை பொருளுக்கும் எதிர் எதிர் வரிசை
உ.பாண்டி

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று திறக்கப்பட்ட அரசு மதுபான கடைகளில் அரசு அறிவித்த சமூக விலகல் உள்ளிட்ட எந்த கட்டுப்பாடுகளும் கடைபிடிக்கப்படவில்லை. பாம்பனில் ரேஷன் கடையும், டாஸ்மாக் கடையும் எதிர் எதிரே அமைந்திருந்த நிலையில் இரு கடைகள் முன்பும் மக்கள் வரிசையில் காத்துக்கிடந்தனர். இதனால் நோய் தொற்று அதிகம் பரவும் நிலை உருவாகியுள்ளது.

07 May 2020 1 PM
07 May 2020 1 PM

அர்ஜுன் சம்பத் கைது!

தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், இந்து மக்கள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழ் புலிகள் உள்ளிட்ட அமைப்புகள் டாஸ்மாக்குக்கு எதிராக போராட்டம் நடத்தினர். டாஸ்மாக்குக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டார். மேலும், தொண்டாமுத்தூர் புத்தூர் பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்க அந்த கிராம பெண்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அந்தக் கடை மூடப்பட்டது.

07 May 2020 1 PM

கோவை டாஸ்மாக் நிலவரம்!

கோவை டாஸ்மாக்
கோவை டாஸ்மாக்

கோவையில் கடந்த இரண்டு நாள்களாகவே டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்தன. மதுபாட்டில்கள் லாரிகளில் வந்து இறங்கின. தொண்டாமுத்தூர் அருகே ஒரு டாஸ்மாக் கடையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, வாழை மரம், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டது.

அந்தக் கடை தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகவே, ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதாக நேற்று மாலை அந்தக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் கோவையில் திறக்கப்பட்டன.

ஒரு சில பகுதிகளில் சாதாரணமாக இருக்க, சில பகுதிகளில் காலை 8 மணி முதலே மதுப்பிரியர்கள் வரிசையில் நிற்க தொடங்கினர். ஆவாரம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கோர்சே, பெர்பைன் என்ற இருவர் முதல் ஆளாக டோக்கன் வாங்கினர். பணி நிமத்தமாக கரூர் வந்த அவர்கள், ஊரடங்கு அமலானவுடன் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியால் கோவையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கிவிட்டன.

இதனிடையே, டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக வந்தத் தகவலை தெரிந்து மது வாங்க வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். கடை திறந்தவுடன் முதல் ஆளாக அவர்கள் மது வாங்கி சென்றனர். பல இடங்களிலும் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வரிசையில் நின்று மது வாங்கினர்.

சில இடங்களில் தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை. அதேபோல சில இடங்களில் வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்துத் தரப்பு ஆண்களும் நின்று கொண்டிருந்தனர்.

-குருபிரசாத்

07 May 2020 1 PM

டாஸ்மாக்கில் கலெக்டர் ஆய்வு!

`இழுத்து மூடு’ போராட்டம்... போதையில் உயிரிழந்த நபர்...- டாஸ்மாக் களேபரங்கள் #LiveUpdates

நீலகிரியில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.முறையான சுகாதார இடைவெளியை கடைபிடிக்கிறார்களா என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நேரடியாக மதுக்கடைகளுக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

- ர.சதீஸ்குமார்

07 May 2020 1 PM

திருச்சியில் மதுபிரியர்களுக்கு தனி கவனிப்பு!

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையின் அருகே நாற்காலிகள் போடப்பட்டு அமர வைக்கப்பட்டு மதுப்பிரியர்கள் மது வாங்க அனுமதிக்கப்பட்டனர்.

-சி.ய.ஆனந்தகுமார்

படங்கள் - தே.தீட்ஷித்

07 May 2020 1 PM

டாஸ்மாக் க்யூவில் மூதாட்டிகள்!

`இழுத்து மூடு’ போராட்டம்... போதையில் உயிரிழந்த நபர்...- டாஸ்மாக் களேபரங்கள் #LiveUpdates

வேலூர் மாவட்டத்தில், டோக்கன் சிஸ்டம் முறையில் மது விற்பனை செய்யப்படுகிறது. மது வாங்க வரிசையில் நிற்கும் நபர்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது. பெரும்பாலானோர் மாஸ்க் அணியவில்லை. புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வைத்திருந்தால்தான் டோக்கன் வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது. 

ஆனால், அடையாள அட்டையை எடுத்துவராத பலருக்கு டோக்கன் வழங்கப்பட்டது. மதுக்கடைக்கு அருகிலேயே மது அருந்துகிறார்கள். குறிப்பாக, காகிதப்பட்டறை, மூலக்கொல்லை ஆகிய குடியிருப்பு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளதால் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். காகிதப்பட்டறையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்க மூதாட்டி ஒருவர் வரிசையில் நின்றிருந்தார்.

-லோகேஸ்வரன்

07 May 2020 1 PM

துடைப்பத்துடன் போராடிய பெண்கள்!

`இழுத்து மூடு’ போராட்டம்... போதையில் உயிரிழந்த நபர்...- டாஸ்மாக் களேபரங்கள் #LiveUpdates

விழுப்புரம் அருகே கானை கிராமத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி செருப்பு, துடைப்பம், முறம் ஆகியவற்றை கையில் ஏந்தி பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

07 May 2020 1 PM

முகவரி பதிந்த பின்னரே மதுபாட்டில்கள்!

நெல்லை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை தொடங்கியது. ஆதார் கார்டு மற்றும் முழு முகவரி பதிந்த பின்னர் மதுபாட்டில்கள் வாங்குவதற்கு டோக்கன்கள் கொடுக்கப்படுகிறது.

07 May 2020 1 PM

மதுபிரியர்கள் ஏமாற்றம்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை தவிர 121 மதுக்கடைகள் இன்று திறக்கப்பட இருந்தன. இதற்கென அனைத்து மது கடைகள் முன்பும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டதுடன், மது வாங்க வருபவர்களுக்கு கிருமி நாசினியும் கைகளில் தெளிக்கப்பட்டது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள தினைக்குளம் கிராம மக்கள் அங்குள்ள டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினைக்குளம் கிராமத்தில் உள்ள மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தினைக்குளம் மற்றும் களிமண்குண்டு ஆகிய பஞ்சாயத்துக்களை சேர்ந்த மக்கள் முற்றுகை போரட்டத்தில் ஈடுபட்டனர். தினைக்குளத்தில் உள்ள மதுக்கடைக்கு எதிரில் சமூக இடைவெளியை கடைபிடித்தபடி முற்றுகை போராட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதனால் மதுக்கடையை திறக்க வந்த ஊழியர்களும் பாதுகாப்புக்கு வந்த போலீஸாரும் மதுக்கடையை திறக்க முடியாமல் தவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த கீழக்கரை வட்டாட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கூடியிருந்த மக்கள் அதனை ஏற்கவில்லை. இதையடுத்து மதுபானக்கடையை நிரந்தரமாக மூடுவது தொடர்பாக டாஸ்மாக் பொது மேலாளரிடம் முறையிடுமாறும், அதுவரை மதுபானக் கடையை திறக்க மாட்டோம் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கிராம மக்களின் இந்த விடாப்பிடி போராட்டத்தினால் பல்வேறு பகுதிகளில் இருந்து மதுவாங்க ஆவலுடன் வந்திருந்த மதுபிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

-ஆர்.மோகன்

07 May 2020 1 PM

காலை 6 மணியில் இருந்தே போலீஸ் பாதுகாப்பு!

`இழுத்து மூடு’ போராட்டம்... போதையில் உயிரிழந்த நபர்...- டாஸ்மாக் களேபரங்கள் #LiveUpdates

மதுரையில் ஒரு டாஸ்மாக் கடை திறக்க இருந்த நிலையில் இன்று காலை 6 மணியிலிருந்து கடைக்கு முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுனர் காவல்துறையினர்.

07 May 2020 1 PM

போராட்டத்தால் திறக்காத டாஸ்மாக்!

இராமநாதபுரம் மாவட்டம் திணைக்குளம் கிராமத்தில் டாஸ்மாக் கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மதியம் வரை கடை திறக்கப்படவில்லை.

`இழுத்து மூடு’ போராட்டம்... போதையில் உயிரிழந்த நபர்...- டாஸ்மாக் களேபரங்கள் #LiveUpdates
உ.பாண்டி
`இழுத்து மூடு’ போராட்டம்... போதையில் உயிரிழந்த நபர்...- டாஸ்மாக் களேபரங்கள் #LiveUpdates
`இழுத்து மூடு’ போராட்டம்... போதையில் உயிரிழந்த நபர்...- டாஸ்மாக் களேபரங்கள் #LiveUpdates
`இழுத்து மூடு’ போராட்டம்... போதையில் உயிரிழந்த நபர்...- டாஸ்மாக் களேபரங்கள் #LiveUpdates
07 May 2020 1 PM

கொரோனா நிதிக்காக கையேந்திய இளைஞர்!

இடம்: புதிய பேருந்து நிலையம் வேலூர் டாஸ்மாகில் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கிச் செல்லும் மக்களிடம் கொரோனா நிதிக்கு பிச்சை எடுக்கும் சமூக ஆர்வலர் ராஜேஷ் வீடியோ.ச.வெங்கடேசன்

Posted by Vikatan EMagazine on Wednesday, May 6, 2020

சென்னை தவிர தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இன்று காலை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. நீண்ட நாள்களுக்கு பிறகு டாஸ்மாக் திறந்துள்ள நிலையில் மாநிலங்களில் பல இடங்களில் டாஸ்மாக் முன்பு கூட்டம் குவிந்துள்ளது. இதற்கிடையே, வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக்கில் மதுவாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த நபர்களிடம் 'கொரோனா' லாக்டெளனில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி வசூலிக்கும் சமூக ஆர்வலர் நரேஷ்குமார் ராஜேந்திரன்.

அடுத்த கட்டுரைக்கு