Published:Updated:

டீ மொய் விருந்து: கஜா புயல், கொரோனா, இலங்கை மக்கள் பிரச்னை... கைகொடுக்கும் பகவான் டீக்கடை!

டீ மொய் விருந்து

"இந்தியாவோ இலங்கையோ மக்கள் எப்போதெல்லாம் சிரமப்படுகிறார்களோ அப்போதெல்லாம் கண்டிப்பாக நம்மால் முடிஞ்ச உதவிகளைச் செய்யணும். அதைதான் வாடிக்கையாளர்களோட இன்னைக்கு செஞ்சிக்கிட்டு இருக்கேன்." - சிவக்குமார்

டீ மொய் விருந்து: கஜா புயல், கொரோனா, இலங்கை மக்கள் பிரச்னை... கைகொடுக்கும் பகவான் டீக்கடை!

"இந்தியாவோ இலங்கையோ மக்கள் எப்போதெல்லாம் சிரமப்படுகிறார்களோ அப்போதெல்லாம் கண்டிப்பாக நம்மால் முடிஞ்ச உதவிகளைச் செய்யணும். அதைதான் வாடிக்கையாளர்களோட இன்னைக்கு செஞ்சிக்கிட்டு இருக்கேன்." - சிவக்குமார்

Published:Updated:
டீ மொய் விருந்து
புதுக்கோட்டை மாவட்டம், மாங்கனாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் வம்பன் 4 ரோடு பகுதியில் கடந்த பல வருடங்களாகவே 'பகவான் டீக்கடை' என்ற பெயரில் டீக்கடை நடத்தி வருகிறார்.

தற்போது, கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டை கேப்பறை பகுதியிலும் ஒரு டீக்கடையைத் தொடங்கி நடத்தி வருகிறார். 2018-ல் கஜா புயலால் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்த போது, யாருமே எதிர்பார்க்காத நிலையில், தனது கடையில் வாடிக்கையாளர்கள் வைத்திருந்த சுமார் ரூ.28,000 கடனைத் தள்ளுபடி செய்து அசத்தினார். கொரோனா பரவலின் துவக்கத்தில் மக்களுக்கு உதவி செய்ய வம்பன் 4 ரோட்டில் உள்ள தனது டீக்கடையில் 'டீ மொய் விருந்து' நடத்தினார்.

டீ மொய் விருந்து
டீ மொய் விருந்து

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதில் கிடைத்த ரூ.20,000-த்தினை அரசின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொண்டு சேர்த்தார். அந்த வகையில்தான், தற்போது இலங்கை மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்க மீண்டும் தனது மேட்டுப்பட்டி டீக்கடையில் 'டீ மொய் விருந்து' நடத்தியிருக்கிறார். அதில் சேர்ந்திருக்கும் நிதியை தமிழக அரசின் மூலம் இலங்கை மக்களுக்குக் கொண்டு சேர்க்க இருக்கிறார். மக்கள் துயரத்தில் வாடும்போது எல்லாம் உதவிக்கரம் நீட்டும் சிவக்குமாரை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிவக்குமாரிடம் பேசினோம், "என்னை வாழ வச்சிக்கிட்டு இருக்கறது என்னோட வாடிக்கையாளர்கள்தான். கஜா பாதிப்பால், வாடிக்கையாளர்கள் அன்னைக்குக் கலங்கி நின்னப்ப, எதைப்பத்தியும் யோசிக்காம அவங்க வச்சிருந்த கடன்களைத் தள்ளுபடி பண்ணேன். இன்னைக்கும் என்னை வாழ்த்துறாங்க. கொரோனா தொடக்கத்தில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தாங்க. அந்த நேரத்துல பலரும் அரசு நிவாரண நிதிக்கு நிதி அனுப்புனாங்க. குறிப்பாக, சின்னப் பிள்ளைங்க எல்லாம் உண்டியல் பணத்தை எல்லாம் கொண்டு போய் கொடுத்தாங்க. அப்பதான் நாமளும் நம்மாள முடிஞ்ச உதவியைச் செய்யணும்னு தோணுச்சு.

ஒரு நாள் டீக்கடையில கிடைக்கிற லாபத்தை அப்படியே கொடுத்திடுவோம்னு மொதல்ல முடிவு பண்ணேன். இது குறித்து வாடிக்கையாளர்கள் சிலர்கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன். அவங்க டீ குடிச்சிட்டு மீதமிருந்த காசை அவங்க சார்பா கொடுக்கச் சொல்லிட்டுப் போயிட்டாங்க.

டீ மொய் விருந்து
டீ மொய் விருந்து

என்னோட வாடிக்கையாளர்கள்தான் மொய் விருந்துக்கும் அடித்தளம் போட்டாங்க. அன்னைக்கு கொரோனாவால் கஷ்டப்படுகிற மக்களுக்கு உதவ டீ மொய் விருந்து நடத்தினோம். இன்னைக்கு, இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் கஷ்டப்படுறவங்களுக்கு உதவ டீ மொய் விருந்தை நடத்தியிருக்கிறோம். 22ம் தேதி இன்னைக்கு ஒரு நாள் மட்டும் ரூ.16,202 டீ மொய் விருந்து மூலமா கிடைச்சிருக்கு.

இதோட இன்னும் சேர்ற பணத்தை அப்படியே தமிழக அரசின் மூலமாக இலங்கை மக்களுக்குக் கொண்டு சேர்க்க இருக்கிறோம். இந்தியாவோ இலங்கையோ மக்கள் எப்போதெல்லாம் சிரமப்படுகிறார்களோ அப்போதெல்லாம் கண்டிப்பாக நம்மால் முடிஞ்ச உதவிகளைச் செய்யணும். அதைதான் வாடிக்கையாளர்களோட இன்னைக்கு செஞ்சிக்கிட்டு இருக்கேன். அப்படி செய்யும்போது மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு" என்று நெகிழ்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism