Published:Updated:

நீலகிரி: இந்த ஆண்டின் முதல் `0’ டிகிரி செல்சியஸ் நாள் - ஊட்டியில் மீண்டும் உறைபனி!

ஊட்டி உறைபனி
ஊட்டி உறைபனி

``லேட்டா இருந்தாலும் பனி ரொம்பக் கடுமையா இருக்கு. வீட்டுக்கு வெளிய இருந்த தண்ணீர் காலைல பனிக்கட்டியா மாறியிருக்கு" - ஊட்டி மக்கள்.

நீலகிரியில் வழக்கமாக அக்டோபர் மாத இறுதியில் பனிக்காலம் தொடச்ங்கும். அதன் பிறகு நவம்பரில் உறைபனி சீஸன் தொடங்கி, மார்ச் முதல் வாரம் வரை உறைபனியின் தாக்கம் நீடிக்கும்.

ஊட்டி உறைபனி
ஊட்டி உறைபனி

இந்தக் காலங்களில் வெப்பநிலை அளவு செல்சியஸில் பூஜ்ஜியத்தைத் தொட்டு, சில நாள்களில் மைனஸுக்கும் கீழ் இறங்கும். உறைபனியின் தாக்கத்தால் புல்வெளிகள், தேயிலை, மலைக் காய்கறிப் பயிர்கள் போன்றவை கருகிக் காணப்படும்.

இந்த ஆண்டு பருவம் தவறி அவ்வப்போது பெய்துவந்த மழையின் காரணமாக உறைபனி தள்ளிப்போனது. இருப்பினும் நவம்பர் மாதத்தில் ஒரு சில நாள்கள் உறைபனி நிலவியது.

ஊட்டி உறைபனி
ஊட்டி உறைபனி

இந்தநிலையில்,கடந்த வாரம் முதல் நீலகிரியில் பனியின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

இன்று காலை ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் குறைந்தபட்சம் `1’ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா

தலைகுந்தா, பைக்காரா, கிளன்மார்கன், எமரால்டு, அவலாஞ்சி, அப்பர்பவானி, கோரகுந்தா, கேத்தி பாலாடா போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை `0’ டிகிரி செல்சியஸாகப் பதிவாகியிருக்கிறது.

பனிப்பொழிவால், மலர் தொட்டிகளில் காலை நேரங்களில் பனிக் கட்டிகள் காட்சியளித்தன. மேலும், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா புல் மைதானம் வெள்ளைக் கம்பளம் விரித்தாற்போல் காட்சியளித்தது.

ஊட்டி உறைபனி
ஊட்டி உறைபனி

பெரும்பாலான தேயிலைத் தோட்டங்களில் செடிகள் கருகத் தொடங்கயிருக்கின்றன. அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கடுமையான குளிர் நிலவுகிறது.

 `தாமதம்தான்... ஆனா, தாக்கம் அதிகம்!' - ஊட்டியை உறையவைக்கும் உறைபனி

உறைபனியின் தாக்கம் குறித்து நம்மிடம் பேசிய கேத்தி பாலாடா மணி, ``இந்த வருஷம் பனி ரொம்ப தள்ளிப்போனது. இனிமேல் பனி இருக்காது, இனி அடுத்த வருஷம்தான் இருக்கும்னு நெனைச்சோம்.

மணி
மணி

ஆனா லேட்டா இருந்தாலும் பனி ரொம்பக் கடுமையா இருக்கு. வீட்டுக்கு வெளியேயிருந்த தண்ணீர் காலையில பனிக்கட்டியா மாறியிருக்கு. ஜீரோ டிகிரிலதான் தண்ணி பனிக்கட்டியா மாறும். இந்த வருஷத்துல இதுதான் முதல் நாள் உறைபனி நாள்" என பனிக்கட்டியை கையில்வைத்துக்கொண்டு நடுங்கியபடியே பேசினார்.

அடுத்த கட்டுரைக்கு