Published:Updated:

`கண்டக்டரும் வங்கிகளும் வாங்குவதில்லை!'- நீலகிரியில் 10 ரூபாய் நாணயத்துக்கு வந்த சோதனை

RBI
RBI ( Arun.K )

``பயணிகளிடம் கேட்டால், நடத்துநர் வாங்குவதில்லை... நடத்துநரிடம் கேட்டால், காசாளர் வாங்குவதில்லை... காசாளரிடம் கேட்டால், வங்கியில் வாங்குவதில்லை... வங்கியில் கேட்டால் பதிலே இல்லை. இதுதான் 10 ரூபாய் நாணயத்தின் இன்றைய நிலை.''

இந்திய ரிசர்வ் வங்கி, கடந்த 2005 -ம் ஆண்டு முதன் முதலாக 10 ரூபாய் நாணயத்தை வெளியிட்டது. பின்னர், 2009 மற்றும் 2011ல் அதன் வடிவத்தில் சில மாற்றங்களைச் செய்து மீண்டும் புழக்கத்தில் விட்டது. செம்பு, அலுமினியம், நிக்கல் ஆகிய பொருள்களைக்கொண்டு 7.71 கிராம் எடையில் வடிவமைக்கப்பட்டது.

Indian Rupee
Indian Rupee

இந்த நாணயத்தில், இந்திய ரூபாயின் புதிய குறியீடும் இடம் பெற்றிருந்தது. கடந்த 2016-ல் பரப்பப்பட்ட வதந்தியால் புழக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டது. பல இடங்களில் வாங்க மறுத்தனர். 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்ததால், நடவடிக்கை எடுக்க நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்தது. இருந்தும் பயனில்லை. வங்கிகள்கூட 10 ரூபாய் நாணயத்தை வாங்குவதில்லை என நுகர்வோர் அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

நீலகிரி மாவட்டத்தில், வங்கிகள் மற்றும் அரசுப் பேருந்துகளில், 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதைக் காரணம் காட்டி, கடைகளிலும் 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதில்லை. இதனால் இந்த நாணயங்கள் புழக்கத்தில் இல்லாததால், மக்களிடம் ஏராளமான 10 ரூபாய் நாணயங்கள் இருந்தும் அவற்றைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

Consumer Awareness
Consumer Awareness

இந்நிலையில், குன்னுார் நுகர்வோர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் 10 ரூபாய் நாணயங்களை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும்,' என வலியுறுத்தி, துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

சங்கத் தலைவர் மனோகரன் கூறுகையில், "அரசுப் பேருந்துகளிலும் வங்கிகளிலும் இந்த நாணயத்தை வாங்காததே முதல் காரணம். என்னிடமே 100-க்கும் அதிகான காயின்கள் உள்ளன. பேருந்துகளில் நடத்துநர்கள் வாங்குவதில்லை. ஏன் என்று கேட்டால், போக்குவரத்து காசாளர் வாங்குவதில்லை என்கிறார். காசாளரிடம் கேட்டால், வங்கிகளில் வாங்குவதில்லை என்கிறார். வங்கிகளில் கேட்டால் எந்தப் பதிலும் இல்லை.

Manogaran
Manogaran

இதனால் 10 ரூபாய் காயின்களை ரிசர்வ் வாங்கி திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்திவருகிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு