Published:Updated:

`1 லட்ச ரூபாய் பரிசு.. உடனே டெலிவரி!' -பிளிப்கார்ட்டுக்கே அதிர்ச்சி கொடுத்த தென்காசி கும்பல்

காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம்
காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம்

முன்பெல்லாம் வங்கியிலிருந்து பேசுவதாகச் சொல்லி ஏ.டி.எம் தகவல்களைத் திருட்டுத்தனமாகப் பெற்ற கும்பல், இப்போது நூதனமாகப் பல பெரிய நிறுவனங்களின் பெயரைச் சொல்லி ஏமாற்றத் தொடங்கியிருக்கிறார்கள்.

நெல்லையிலிருந்து புதிதாகப் பிரிந்த தென்காசி மாவட்டத்தின் முதல் காவல்துறை கண்காணிப்பாளராக சுகுணாசிங் நியமிக்கப்பட்டிருக்கிறார். மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகள் நிரம்பிய இந்த மாவட்டத்தில் குற்றச் செயல்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காவல்துறை
காவல்துறை

ஆன்லைன் மூலமாகவும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியிலும் தென்காசி மாவட்ட காவல்துறை இறங்கியிருக்கிறது. முகநூலில் காவல்துறைக்காகத் தொடங்கப்பட்டிருக்கும் பிரத்யேக பக்கத்தில் சாலைப் போக்குவரத்து குறித்தும் குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டக் கூடாது என்பது பற்றியும் மீம்ஸ் மூலம் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

தென்காசி மாவட்ட காவல்துறையினரின் மீம்ஸ்களை பொதுமக்கள் வெகுவாக ரசிக்கிறார்கள். திரைப்பட நடிகர்கள் படத்துடனும் மீம்ஸ்கள் வெளியாகின்றன. அவற்றின் மூலம் எளிமையாக மக்களிடம் தங்கள் கருத்துகளைக் கொண்டுசெல்ல முடிவதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

காவல்துறை வெளியிட்ட மீம்ஸ்
காவல்துறை வெளியிட்ட மீம்ஸ்

இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் பெயரில் ஒரு கும்பல் மோசடியில் ஈடுபடுவதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அந்த நிறுவனத்தின் பெயரில் மோசடிக் கும்பல் பல்வேறு வங்கித் தகவல்களைச் சேகரித்து மோசடியில் ஈடுபடுவதாகக் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து தென்காசி மாவட்ட காவல்துறையினரிடம் பேசியபோது, ``சமீபத்தில் ஒருவருக்கு ஆன்லைன் சேவை நிறுவனத்திலிருந்து வருவதுபோல தபால் ஒன்று வந்துள்ளது. அதில், அவருக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு கிடைத்திருப்பதாகவும் தேவையான தகவல்களைக் கொடுத்தால் பணம் உடனடியாக வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது.

இது மக்களை ஏமாற்றும் திட்டமாக இருக்கும் என்கிற சந்தேகம் ஏற்பட்டதால் பிளிப்கார்ட் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு பேசினோம்.
தென்காசி போலீஸார்

பரிசைப் பெறுவதற்காக அவரது வங்கிக் கணக்கு எண், ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு பற்றிய தகவல்கள் ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவருக்குச் சந்தேகம் எழுந்ததால் எங்களிடம் புகார் செய்தார்.

Vikatan

இது மக்களை ஏமாற்றும் திட்டமாக இருக்கும் என்கிற சந்தேகம் ஏற்பட்டதால் பிளிப்கார்ட் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு பேசினோம். அவர்கள், `நாங்கள் அதுபோல எந்தப் பரிசுத் தொகையையும் யாருக்கும் கொடுக்கவில்லை. நாங்கள் வாடிக்கையாளர்களிடம் இதுபோன்று எந்தத் தகவலையும் கேட்பதில்லை’ என்று தெரிவித்தார்கள்.

மோசடியான அறிவிப்பு
மோசடியான அறிவிப்பு

அதனால் அந்த நபரை உஷார்படுத்தியதுடன் பொதுமக்களும் இதுபோன்ற பொய்யான கும்பலிடம் சிக்கித் தங்களின் வங்கித் தகவல்கள் உள்ளிட்டவற்றைக் கொடுத்து ஏமாந்துவிடக் கூடாது என எச்சரித்து வருகிறோம். அந்த மோசடிக் கும்பலைப் பிடிக்கவும் ரகசியமாக கண்காணித்துக் கொண்டிருக்கிறோம்.

பொதுமக்களின் ஆசையைத் தூண்டும் வகையில் பரிசு விழுந்துள்ளது எனத் தெரிவித்து மோசடி செய்யும் முயற்சியில் சிலர் இறங்கியிருக்கிறார்கள். அதனால் இதுபோன்ற மோசடிகளை அறிவிப்புகளை நம்ப வேண்டாம். பொதுமக்கள் தங்களின் வங்கி விவரங்கள், ஆதார் கார்டு எண் போன்றவற்றைக் கொடுத்தால் வங்கியிலிருந்து அந்தக் கும்பல் பணத்தை எடுத்துக்கொள்ளும்.

எஸ்.பி அலுவலகம்
எஸ்.பி அலுவலகம்

அதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சந்தேகப்படும் வகையில் நேரிலோ, போனிலோ பேசும் நபர்கள் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளிக்க வேண்டும் என மக்களை வலியுறுத்தி வருகிறோம்’’ என்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு