Published:Updated:

`பொருளாதாரம் உயரும்' : இந்தியா - ஆஸ்திரேலியா ஒப்பந்தம் குறித்து ஜவுளித் துறை நம்பிக்கை!

ஜவுளி துறை

இந்தியா - ஆஸ்திரேலியா இடையயான வர்த்தகம் ஒப்பந்தம் ஜவுளி துறைக்கு பெரிய பயனை கொடுக்கும் என அந்தத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

`பொருளாதாரம் உயரும்' : இந்தியா - ஆஸ்திரேலியா ஒப்பந்தம் குறித்து ஜவுளித் துறை நம்பிக்கை!

இந்தியா - ஆஸ்திரேலியா இடையயான வர்த்தகம் ஒப்பந்தம் ஜவுளி துறைக்கு பெரிய பயனை கொடுக்கும் என அந்தத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Published:Updated:
ஜவுளி துறை

இந்தியா – ஆஸ்திரேலியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது. இதனால் இரண்டு நாடுகளின் ஒப்பந்தமும் வளர்ச்சிஅ டையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இது குறித்து தென் இந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் தலைவர் ரவிசாம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ரவிசாம்
ரவிசாம்

“சமீப காலத்தில் ஒரு வளர்ந்த நாட்டுடன் இந்தியா உடன்பட்டுள்ள முதல் ஒப்பந்தம் இது. இதன் மூலம் அதிக தொழிலாளர்களை கொண்டுள்ள ஜவுளி,தொழில் மிகப் பெரிய பயனடையும் என எதிர்பார்க்கிறோம்.

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஆண்டுக்கு 51,000 மெட்ரிக் டன் நீண்ட இழை பருத்தியை வரியின்றி இறக்குமதி செய்து கொள்ளலாம். பருத்தி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், இந்த ஒப்பந்தம் மூலம் தரமான பருத்தி கிடைக்க வழிவகை செய்யவேண்டும். அப்படி நடந்தால் ஒட்டு மொத்த பருத்தி ஜவுளி மதிப்பு சங்கிலிக்கும் இது பயனளிக்கும்.

பருத்தி
பருத்தி

இந்த ஒப்பந்தம் தற்போதுள்ள சுமார் 8.5 பில்லியன் அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையை ஈடுகட்ட உதவும். மேலும், 25 பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தகத்தை, அடுத்த 5 ஆண்டுகளில் 50 பில்லியன் டாலர் வர்த்தகமாக உயர்த்த உதவும் என எதிர்பார்க்கிறோம்.

பருத்தி மீதான 11% இறக்குமதி வரி மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு இதுவரை இருந்த 10% சுங்க தடை நீக்கியது இந்திய ஜவுளி மற்றும் ஆடைத்துறையின் உலகளாவிய போட்டித் தன்மையை பெரிதும் உயர்த்தும்.

பஞ்சாலை
பஞ்சாலை

உலக அளவிலான பொருளாதார மந்தநிலை காரணமாக தற்போது பின்னடைவில் இருக்கும் ஜவுளி மற்றும் ஆடை தொழிலுக்கு அரசின் இந்த முயற்சி மிகப் பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது. இந்த ஒப்பந்தம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்” என்று கூறியுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தினால் நம் நாட்டில் உள்ள சிறு தொழில் நிறுவனங்களுக்கு நல்லது நடந்தார் சரிதான்!