Published:Updated:

`760 அடி நீளம், 11 வளைவுகள், 177 வயது!' - தமிழரின் முயற்சியால் நிமிர்ந்த தாமிரபரணி பாலம்

பாலம்
பாலம்

இரட்டை நகரங்களான நெல்லை, பாளையங்கோட்டையைப் பிரிக்கும் வகையில் அமைந்திருக்கும் ஆற்றுப் பாலம் கட்டப்பட்டு இன்றுடன் 177 ஆண்டுகள் ஆகின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நெல்லை மாவட்டத்தின் அடையாளங்களாகத் திகழும் நெல்லையப்பர் கோயில், ஈரடுக்கு மேம்பாலம் உள்ளிட்டவற்றுக்கு இணையாகத் தாமிரபரணி ஆற்றுப் பாலமும் விளங்குகிறது. இரட்டை நகரங்களான நெல்லை, பாளையங்கோட்டையைப் பிரிக்கும் வகையில் அமைந்திருக்கும் ஆற்றுப் பாலம் கட்டப்பட்டு இன்றுடன் 177 ஆண்டுகள் ஆகின்றன.

தாமிரபரணி ஆறு
தாமிரபரணி ஆறு

நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 128 கி.மீ தூரம் பயணிக்கும் தாமிரபரணி ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்களால் ஆற்றைக் கடப்பதில் சிக்கல் நிலவிவந்தது. அதனால் ஆற்றைக் கடக்க அப்போது பரிசல்களைப் பயன்படுத்தியுள்ளனர். அதற்காக அமைக்கப்பட்ட படகுத்துறையில் பொதுமக்கள் காத்துக் கிடக்க வேண்டியதிருந்தால் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டதுடன் கொலைகளும் நடந்திருக்கின்றன.

தாமிரபரணி ஆற்றில் புதிய பாலம்! - 90 சதவிகிதம் பணிகள் நிறைவு 

ஆற்றைக் கடப்பதில் இருக்கும் பிரச்னைகளைக் களைய விரும்பிய அப்போதைய ஆங்கிலேய கலெக்டரான ஈ.பி.தாம்சன், இங்கிலாந்து அரசுக்குக் கடிதம் எழுதியும் பலன் கிடைக்கவில்லை. அதனால் வருத்தப்பட்ட கலெக்டர் தாம்சன் தன்னிடம் பணியாற்றிய கேப்டன் ஃபேபர், பொறியாளரான டபிள்யூ.ஹெச்.ஹார்ஸ்லே, மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிய சிரஸ்தாரான சுலோச்சன முதலியார் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

ஆற்றுப் பாலம்
ஆற்றுப் பாலம்

அதன்படி 760 அடி நீளத்துக்கு 21.5 அடி அகலத்தில் 60 அடி விட்டத்தில் 11 வளைவுகள் கொண்டதாகப் பாலம் அமைக்க அமைக்க வரைபடம் ஒன்றைத் தயாரித்திருக்கிறார்கள். அந்தப் பாலம், லண்டன் நகரில் ஓடக்கூடிய தேம்ஸ் நதியின்மீது கட்டப்பட்டுள்ள வெஸ்ட் மினிஸ்டர் பாலம் போன்று கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதற்காக 50,000 ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டதால், அந்தத் தொகையைப் பொதுமக்களிடம் இருந்து வசூல் செய்வதென கலெக்டர் தாம்சன் முடிவு செய்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொதுமக்களிடம் பணம் திரட்டுவதை விரும்பாத சுலோச்சன முதலியார், தானே சொந்தப் பணத்தில் பாலத்தைக் கட்ட முடிவு செய்திருக்கிறார். இதுபற்றித் தன் துணைவியான வடிவாம்பாள் அம்மையாரிடம் சொன்னதும், அவர் தனது நகைகளைக் கழட்டிக் கொடுத்திருக்கிறார். அதன் பின்னர் கலெக்டரின் ஒப்புதலுடன் பாலம் கட்டும் பணி நடந்திருக்கிறது. அப்போது சிறையிலிருந்த 100 கைதிகள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

எழுத்தாளர் நாறும்பூநாதன்
எழுத்தாளர் நாறும்பூநாதன்

சுலோச்சன முதலியாரின் முன்முயற்சியால் இந்தப் பாலம் மக்களின் பயன்பாட்டுக்குள் வந்தது. இதுகுறித்து, எழுத்தாளர் நாறும்பூநாதனிடம் பேசினோம். ``தமிழகத்தின் அனைத்துப் பாலங்களும் அரசாங்கத்தால் கட்டப்பட்டதாகவே இருக்கிறது. ஆனால், தாமிரபரணி ஆற்றில் அமைக்கப்பட்ட பாலம் மட்டுமே சுலோச்சன முதலியார் என்ற கொடையாளியின் சொந்தப் பணத்திலிருந்து கட்டப்பட்டிருக்கிறது. அந்தப் பாலம் இப்போது வரை உறுதி குலையாமல் இருப்பது கூடுதல் சிறப்பு.

வைகையைத் தொடர்ந்து தாமிரபரணி நதிக்கரையிலும் அகழ்வாராய்ச்சி - களமிறங்கும் தொல்லியல் துறை!

அந்தக் காலத்தில், ரூ.50,000 என்பது மிகப்பெரிய தொகை. பொது விஷயத்துக்காக மிகப்பெரிய தொகையைச் செலவிட முன்வந்தவரான சுலோச்சன முதலியார் குறித்து தற்போதைய தலைமுறைக்குத் தெரிவிக்க வேண்டியது அவசியம். ஆனால், இது தொடர்பாக மாவட்ட நிர்வாகமோ மாநகராட்சி அதிகாரிகளோ எதையும் செய்யாமல் இருப்பது வருத்தமளிக்கிறது.

தாமிரபரணி ஆற்றுப் பாலம்
தாமிரபரணி ஆற்றுப் பாலம்

பாலத்தின் இருபகுதியிலும் சிறிய போர்டுகளை வைத்து, '177 வயதுப் பாலம்’ என்பதைச் சுட்டிக் காட்டியிருக்கலாம். பாலத்தின் மீது சீரியல் பல்புகளை எரிய விட்டிருந்தால், பொதுமக்கள் என்னவென்று விசாரிப்பார்கள். அப்போது சுலோச்சன முதலியார் குறித்து அறிந்து கொள்ளும் வாய்ப்பு உருவாகும். இனியாவது இதுபோன்ற கொடையாளிகளைக் கௌரவிக்க அரசு முன்வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்’’ என்றார் ஆதங்கக் குரலில்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு