Published:Updated:

தமிழின் தொன்மையையும் பெருமையையும் காத்த தமிழ்த் தாத்தா!

உவேசா

சாதியும் மதமும் இப்பணியில் குறுக்கிட உவேசா அனுமதிக்கவில்லை. சீவக சிந்தாமணி சமண நூல் ஆயிற்றே என்று சிலர் ஆட்சேபித்தபோது, ’அதனால் என்ன... இனிய தமிழும் சொற்சுவையும் பொருட்சுவையும்தான் முக்கியம்’ என்று சொல்லி விட்டார்.

தமிழின் தொன்மையையும் பெருமையையும் காத்த தமிழ்த் தாத்தா!

சாதியும் மதமும் இப்பணியில் குறுக்கிட உவேசா அனுமதிக்கவில்லை. சீவக சிந்தாமணி சமண நூல் ஆயிற்றே என்று சிலர் ஆட்சேபித்தபோது, ’அதனால் என்ன... இனிய தமிழும் சொற்சுவையும் பொருட்சுவையும்தான் முக்கியம்’ என்று சொல்லி விட்டார்.

Published:Updated:
உவேசா

தமிழ்த் தாத்தா உவேசா அவர்கள் பற்றி அனைவரும் அறிவோம். எத்தனையோ விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டாலும் தமிழர்களைப் பொறுத்தவரை தமிழ்த் தாத்தா என்ற பட்டம்தான் மிகப் பொருத்தம்..

தமிழ்மொழியின் அற்புதமான பழந்தமிழ் இலக்கியங்களை நமக்கு மீட்டுக் கொடுத்தவர். சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள் என பலவகைப்பட்ட 90-க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளுக்கு நூல் வடிவம் தந்து அவற்றை அழிவில் இருந்து காத்ததோடு, அடுத்த தலைமுறையினர் அறியத் தந்தார்.

சங்ககாலத் தமிழும் பிற்காலத் தமிழும், புதியதும் பழையதும், நல்லுரைக் கோவை போன்ற பல உரைநடை நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். என் சரித்திரம் என்ற தலைப்பில் தனது சுயசரிதையை ஆனந்தவிகடனில் 1940-ம் ஆண்டு முதல் 1942 வரை தான் இறக்கும்வரை எழுதினார். இது 1950-ம் ஆண்டில் புத்தகமாக வந்தது. இப்புத்தகம் மட்டுமின்றி இவரைப் பற்றிய ஏராளமான புத்தகங்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இவர் சந்தித்த சவால்களும் தமிழ் மீதுள்ள பற்றினால் இவர் மேற்கொண்ட முயற்சிகளும் பிரமிக்க வைக்கின்றன.

உவேசா
உவேசா

1855 பிப்ரவரி 19 அன்று திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். சிறுவயதில் இருந்தே தமிழ் மீதுள்ள ஆர்வத்தால் தமிழ் ஆசிரியர்களை தேடி தேடிச் சென்று தமிழ் கற்றார். இளமையில் திண்ணைப் பள்ளியில் தொடங்கியது அவரது கல்வி. பிறகு மாயவரத்தில் திருவாவடுதுறை ஆதீன வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் தமிழ் பயின்றார். கும்பகோணத்திலும், பின் சென்னையிலும் கல்லூரியில் தமிழ்ப் பணியாற்றினார். திருவாடுதுறை ஆதீனம் தமிழ்பணியில் இவருக்கு பக்கபலமாக நின்றார்.

இவர் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் கும்பகோணத்தில் முன்சீப் ஆக பணியாற்றிய சேலம் ராமசாமி முதலியார். அவரை சந்திக்க நேர்ந்தபோது என்னென்ன நூல்களைப் படித்து இருக்கிறீர்கள் எனக் கேட்க, உவேசா திருவிளையாடல் புராணம், கம்பராமாயணம் போன்றவை எனப் பதில் அளித்தார். அதைக் கேட்ட முதலியார், சீவக சிந்தாமணி, மணிமேகலை, தொல்காப்பியம் போன்றவற்றை படிக்கும்படி அறிவறுத்தினாராம். இது உவேசாவின் தமிழ்ப்பணியில் ஒரு திருப்புமுனையை உண்டாக்கியது. அதன் பின் முந்தைய இவக்கியச் சுவடிகளை தேடும்பணியைத் தொடங்கினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எத்தனையோ தமிழ் அறிஞர்கள் அவருக்கு இந்த பெரும்பணியில் உதவி செய்து இருக்கிறார்கள். அவர்களிடம் கேட்ட தகவல்களைக் கொண்டு தமிழ்நாட்டில் ஊர் ஊராக சுவடிகளைத் தேடிச் சென்று சேகரித்தார். வாய்த்த இடத்தில் தங்கிக் கிடைத்ததைச் சாப்பிட்டார்.

சாதியும் மதமும் இப்பணியில் குறுக்கிட அவர் அனுமதிக்கவில்லை. சீவக சிந்தாமணி சமண நூல் ஆயிற்றே என்று சிலர் ஆட்சேபித்தபோது, ’அதனால் என்ன... இனிய தமிழும் சொற்சுவையும் பொருட்சுவையும்தான் முக்கியம்’ என்று சொல்லி விட்டார் உவேசா.

அதேபோல நன்றி மிக்கவர் இவர். ஆரம்ப காலங்களில் கும்பகோணம் கல்லூரியில் தமக்கு தமிழாசிரியர் பணி கிடைக்க காரணமாயிருந்த தியாகராச செட்டியாரின் பெயரை பின்னாளில் தாம் வாங்கிய வீட்டுக்கு "தியாகராச விலாசம்" என்று வைத்தார்.

புத்தகங்களை எடுத்து வரவில்லை என்று அறிந்து வற்புறுத்தி எல்லா தமிழ் புத்தகங்களையும் மாட்டு வண்டியில் கொண்டு வந்தபின்னரே நிம்மதி அடைந்தாராம் உவேசா.
என் சரித்திரம்
என் சரித்திரம்
உவேசா இல்லையேல் புறநானூறு இல்லை. அகநானூறு இல்லை. சீவக சிந்தாமணி இல்லை. மணிமேகலை இல்லை. ஏனைய தமிழ் நூல்கள் இல்லை.

அவர் இறுதிநாட்களில் மாடிப்படியில் தவறி விழுந்து உடல் நலம் இன்றி இருந்தார். அச்சமயத்தில்தான் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக்கொண்டு இருந்தது. ஏராளமானோர் சென்னையை விட்டு வெளியூர் சென்றனர். உவேசாவின் குடும்பத்தினரும் அவரை திருக்கழுக்குன்றம் கொண்டு சென்றனர். அங்கு சென்றவுடன் தமது புத்தகங்களை எடுத்து வரவில்லை என்று அறிந்து வற்புறுத்தி எல்லா தமிழ் புத்தகங்களையும் மாட்டு வண்டியில் கொண்டு வந்தபின்னரே நிம்மதி அடைந்தாராம்.

தள்ளாத வயதிலும் தமிழ்ப்பணியாற்றி 1942 ஏப்ரல் 28 அன்று தமது 88-வது வயதில் காலமானார். அவர் இல்லையேல் புறநானூறு இல்லை. அகநானூறு இல்லை. சீவக சிந்தாமணி இல்லை. மணிமேகலை இல்லை. ஏனைய தமிழ் நூல்கள் இல்லை. அவர் எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் தமிழ் மீதுள்ள பற்றினால் இப்பெருஞ்செயலைச் செய்தார். எனினும் அவரைச் சிறப்பிக்க வேண்டியது நம் கடமை.

இன்று தமிழ் தாத்தாவின் நினைவு நாள். இந்நாளில் ராஜராஜன் என்ற மாபெரும் தமிழ் மன்னன் ஆண்ட தஞ்சையில் உள்ள தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு தமிழ்த் தாத்தாவின் பெயரை சூட்டுமாறு தமிழக முதல்வரை வேண்டுகிறேன்.
எஸ். சங்கரநாராயணன், மதுரை

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism