Published:Updated:

``தஞ்சையின் அனைத்து கிராமங்களிலும் செந்தமிழ் நகர் திட்டம்!” -ஆட்சியர்... நெகிழும் குடும்பங்கள்

நாடோடி சமூகத்தினருடன் தஞ்சாவூர் கலெக்டர் ( ம.அரவிந்த் )

``இதை செஞ்ச கலெக்டர், `நீங்களும் சமுதாயத்துல உயர்ந்த இடத்துக்கு வரணும்'னு வாழ்த்தினார். `சரிங்க சாமி’னு எல்லோரும் ஒரே குரலுல சொன்னோம். எங்க கண்ணீரைத் துடைத்த கலெக்டருக்கு நாங்க பாசி மணி போட்டுவிட்டோம். அவரும் அதை ஏற்றுக்கொண்டார்” என்றனர்.

``தஞ்சையின் அனைத்து கிராமங்களிலும் செந்தமிழ் நகர் திட்டம்!” -ஆட்சியர்... நெகிழும் குடும்பங்கள்

``இதை செஞ்ச கலெக்டர், `நீங்களும் சமுதாயத்துல உயர்ந்த இடத்துக்கு வரணும்'னு வாழ்த்தினார். `சரிங்க சாமி’னு எல்லோரும் ஒரே குரலுல சொன்னோம். எங்க கண்ணீரைத் துடைத்த கலெக்டருக்கு நாங்க பாசி மணி போட்டுவிட்டோம். அவரும் அதை ஏற்றுக்கொண்டார்” என்றனர்.

Published:Updated:
நாடோடி சமூகத்தினருடன் தஞ்சாவூர் கலெக்டர் ( ம.அரவிந்த் )

தஞ்சாவூர் கலெக்டர், `செந்தமிழ் நகர்' என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி செயல்படுத்திவருகிறார். அதன் மூலம் பல்லாண்டு காலமாக இருக்க வீடின்றி புறம்போக்கு நிலத்தில் இருக்கும் விளிம்புநிலை மக்களைக் கண்டறிந்து இலவச வீட்டுமனைப் பட்டா கொடுத்து, அதில் வீடு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறார். பேராவூரணி அருகே உள்ள நாட்டாணிக் கோட்டை கிராமத்தில் இந்தத் திட்டத்தை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார். ``30 வருடங்களாக நடப்பதற்குச் சாலைகூட இல்லாமல் இருந்தோம். சாலை அமைத்துக் கொடுத்ததுடன் அனைத்து வசதிகளையும் செய்து தரவிருக்கும் கலெக்டரின் செயல் நாடோடிச் சமூகத்தினரான எங்களை நெகிழச்சியில் ஆழ்த்தியுள்ளது” எனத் தெரிவித்தனர் அம்மக்கள்.

செந்தமிழ் நகர் திட்ட தொடக்கவிழாவில் அமைச்சர், கலெக்டர்
செந்தமிழ் நகர் திட்ட தொடக்கவிழாவில் அமைச்சர், கலெக்டர்

பல்லாண்டு காலமாக புறம்போக்கு நிலத்தில் குடிசைகளில், எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் துயரங்களுடன் வாழ்ந்துவரும் அன்றாடக் கூலிகள் ஏராளம். இது போன்ற விளிம்புநிலை மக்களைக் கண்டறிந்து, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கியதுடன் குடிநீர், மின்சாரம், சாலை, கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துகொடுத்திருக்கிறார், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். இந்தத் திட்டத்துக்கு 'செந்தமிழ் நகர்' எனப் பெயரிட்டு செயல்படுத்திவரும் மாவட்ட ஆட்சியருக்குப் பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள நாட்டாணிக்கோட்டை கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட நாடோடி சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். செந்தமிழ் நகர் திட்டத்தின் மூலம் 31 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குவதுடன் வீடு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தருவதற்கான தொடக்கவிழா நடைபெற்றது. கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டாவை வழங்கினார். அரசுத் தலைமை கொறடா கோவி செழியன், எம்.எல்.ஏ-க்கள் அசோக்குமார், சந்திரசேகரன், நீலமேகம் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

இலவச வீட்டு மனைப் பட்டாவை பெற்றுக்கொண்ட நாடோடி சமூகத்தைச் சேர்ந்த விளிம்புநிலை மக்கள் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் கழுத்தில் தாங்களே செய்த பாசி மணியை அணிவித்து அன்பை வெளிப்படுத்தினர். அடிப்படை வசதிகள் ஏதுமின்றி வாழ்ந்துவந்தவர்களுக்கு இன்று வீட்டு மனைப் பட்டா தொடங்கி அனைத்தும் கிடைக்கவிருப்பதற்குக் காரணமான கலெக்டரைப் பலரும் பாராட்டி நெகிழ்ந்தனர்.

பயனாளிகள் சிலரிடம் பேசினோம். ``40 வருடங்களுக்கும் மேலாக குடிசை அமைத்து இந்த இடத்தில் வசிக்கிறோம். அப்போதிலிருந்தே எங்க வீடுகளுக்கு செல்வதற்கு ரோடு இல்லை. கோயில் இடத்துல இருக்குற ஒத்தயடிப் பாதையில நடந்து வீட்டுக்குப் போவோம். ரோடு இல்லாததுனால அவசர ஆத்தரத்துக்குக்கூட எந்த காரும் எங்க ஏரியாவுக்குள்ள வர முடியாது. யாருக்கும் உடம்புக்கு முடியலைன்னா ஆளும் பேருமா சேர்ந்து தூக்கிட்டு போய்தான் ஆம்புலன்ஸில ஏத்துவோம். 30 வருடங்களுக்கும் மேலாக இந்தத் துயருடன் வாழ்ந்துவந்தோம்.

அமைச்சர் அன்பில்.மகேஷ் பொய்யாமொழி
அமைச்சர் அன்பில்.மகேஷ் பொய்யாமொழி

எங்க ஊருக்கு வந்த கலெக்டர் சார்கிட்ட ரோடு இல்லை சார்... ரோடு போட்டு கொடுங்கனு கேட்டோம். அடுத்த வாரமே இடத்துக்கான பிரச்னைகளைத் தீர்த்து ரோடு போட்டுக் கொடுத்தார். இப்ப இலவச வீட்டு மனைப் பட்டா கொடுத்திருக்கார். அத்துடன் வீடுகட்டி அதில் அனைத்து வசதிகளையும் செய்து தரவிருக்கிறார். இதை செஞ்ச கலெக்டர், `நீங்களும் சமுதாயத்துல உயர்ந்த இடத்துக்கு வரணும்’னு வாழ்த்தினார். சரிங்க சாமினு எல்லோரும் ஒரே குரலுல சொன்னோம். எங்க கண்ணீரை துடைத்த கலெக்டருக்கு நாங்க பாசி மணி போட்டுவிட்டோம். அவரும் அதை ஏற்றுக்கொண்டார்” என்றனர்.

``தஞ்சையின் அனைத்து கிராமங்களிலும் `செந்தமிழ் நகர்’ இருக்க வேண்டும். அதன் மூலம் விளிம்புநிலை மக்கள் பயன் பெற வேண்டும். அதற்காகவே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்திவருகிறேன்” எனக் கூறும் கலெக்டர், ``இது என் ஆசை மட்டுமல்ல... இலக்கும்கூட’’ எனப் புன்னகைத்தபடி கூறுகிறார்.