Published:Updated:

``நான் மேயர் ஆகணும்னு நெனச்ச அம்மா இப்போ எங்கூட இல்ல!'' - உருகிய தஞ்சாவூர் மேயர்

தி.மு.க துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ( ம.அரவிந்த் )

மேயருக்கான அங்கி, செயினை அணிந்தபடி,செங்கோலுடன் மேயருக்காக ஒதுக்கப்பட்ட காரில் தனது வீட்டிற்கு சென்ற தஞ்சாவூர் தி.மு.க மேயர் சண். இராமநாதன் மறைந்த தன் அம்மா நீலாம்பாள் போட்டோ முன் வெற்றிக்கான சான்றிதழை வைத்து வணங்கினார்.

``நான் மேயர் ஆகணும்னு நெனச்ச அம்மா இப்போ எங்கூட இல்ல!'' - உருகிய தஞ்சாவூர் மேயர்

மேயருக்கான அங்கி, செயினை அணிந்தபடி,செங்கோலுடன் மேயருக்காக ஒதுக்கப்பட்ட காரில் தனது வீட்டிற்கு சென்ற தஞ்சாவூர் தி.மு.க மேயர் சண். இராமநாதன் மறைந்த தன் அம்மா நீலாம்பாள் போட்டோ முன் வெற்றிக்கான சான்றிதழை வைத்து வணங்கினார்.

Published:Updated:
தி.மு.க துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ( ம.அரவிந்த் )

தஞ்சாவூர் மாநகராட்சி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.கவை சேர்ந்த சண். இராமநாதன் மேயர் அங்கி, தங்க செயின் அணிந்தபடி செங்கோலுடன் தனது வீட்டுக்குச் சென்று மறைந்த தன் அம்மா போட்டோ முன் மண்டியிட்டு கண்கள் கலங்க வணங்கி மரியாதை செய்தார். இதேபோல் துணை மேயராக பொறுப்பேற்ற டாக்டர் அஞ்சுகம் பூபதி, ``என் தந்தை 15 வருடங்களுக்கு முன்பு துணை நகர்மன்றத் தலைவராக இருந்தபோது உயிரிழந்தார். அவர் இருந்த அதே இடத்தில் இப்போது நான் துணை மேயராக நிற்கிறேன்" என்று கூறி உருகியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஆணையருடன் திமுகவை சேர்ந்த அஞ்சுகம் பூபதி, சண்.இராமநாதன்
ஆணையருடன் திமுகவை சேர்ந்த அஞ்சுகம் பூபதி, சண்.இராமநாதன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் வேட்பாளர் சீட்டை பிடிக்க தி.மு.கவில் சண். இராமநாதன், டாக்டர் அஞ்சுகம் பூபதியிடையே கடும் போட்டி நிலவி வந்தது. இந்நிலையில் மேயர் வேட்பாளராக சண். இராமநாதன், துணை மேயர் வேட்பாளராக டாக்டர் அஞ்சுகம் பூபதியை அறிவித்தது தி.மு.க தலைமை. இதையடுத்து நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் இருவரும் வெற்றி பெற்றனர். பின்னர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாமன்ற கூட்ட அரங்குக்கு வந்தார். அப்போது, மேயராகத் தேர்வு செய்யப்பட்ட சண். ராமநாதனுக்கு 108 பவுனால் ஆன தங்க சங்கிலியை அணிவித்தார். அதனை தொடர்ந்து ஆணையர் வெள்ளி செங்கோலை மேயரிடம் வழங்கினார். அப்போது சண். இராமநாதனின் கண்கள் கலங்கின.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேயருக்கான அங்கி, செயினை அணிந்தபடி, செங்கோலுடன் மேயருக்காக ஒதுக்கப்பட்ட காரில் தனது வீட்டிற்குச் சென்ற சண். இராமநாதன் மறைந்த தன் அம்மா நீலாம்பாள் போட்டோ முன் வெற்றி பெற்றதற்காகத் தரப்பட்ட சான்றிதழை வைத்து வணங்கினார். ``என் அம்மா நான் மேயர் ஆகணும், எம்.எல்.ஏ ஆகணுமுனு ரொம்பவே ஆசைப்பட்டாங்க. ஆனா அவங்க இருக்குறவரை அதற்கான வாய்ப்பு கைகூடல. கொரோனா ரெண்டாவது அலையின்போது நான் கட்சிப் பணிகள்ல தீவிரமா இருந்ததில் என் மூலமா என் அம்மா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துட்டாங்க.

அம்மா  நினைவில் கலங்கிய திமுக மேயர் சண்.இராமநாதன்
அம்மா நினைவில் கலங்கிய திமுக மேயர் சண்.இராமநாதன்

இப்போது நான் மேயராகப் பதவியேற்றிருக்கேன். ஆனால் இதற்கெல்லாம் ஆசைப்பட்ட என் அம்மா இன்னைக்கு எங்கூட இல்லை. அதனாலதான் மேயருக்கான உடை உள்ளிட்ட அனைத்துடனும் வந்து அம்மா போட்டோ முன்னாடி மண்டியிட்டு ஆசீர்வாதம் வாங்குறேன்'' என்று சொல்ல, உடன் இருந்த உறவினர்கள் மற்றும் கட்சியினர் அனைவரும் நெகிழ்ந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதே போல் துணை மேயராக டாக்டர் அஞ்சுகம் பூபதி பொறுப்பேற்றுக்கொண்டார். மாமன்ற உறுப்பினர்களான அ.தி.மு.கவை சேர்ந்தவர்கள் கூட மறைந்த அஞ்சுகத்தின் தந்தை பூபதி குறித்துப் பாராட்டிப் பேசினர். அப்போது அஞ்சுகத்தின் கண்கள் கலங்கின. பின்னர் பேசிய அஞ்சுகம், ``என் தந்தை இதே மன்றத்தில் தனது 53-வது வயதில் நகர்மன்றத் துணைத் தலைவராக இருந்தபோது உயிரிழந்தார்.

அப்பா நினைவில் கலங்கிய துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி
அப்பா நினைவில் கலங்கிய துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி

இன்று எனக்குக் கட்சி தலைமை மீண்டும் சீட் வழங்கி வெற்றிபெறச் செய்து துணை மேயர் பொறுப்பையும் வழங்கியிருக்கிறது. 15 வருடங்களுக்குப் பிறகு அப்பா இருந்த அதே இடத்தில் நான் துணை மேயராக இருக்கிறேன். இதை அப்பா பார்த்திருந்தால் ரொம்பவே சந்தோஷப்பட்டிருப்பார்'' என உருகியது மாமன்றத்தைக் கலங்க வைத்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism