Published:Updated:

`ரூ.10 கோடி மதிப்பிலான வேட்டி, சேலைகள் தேக்கம்!’ -ஜவுளிச்சந்தையை எதிர்நோக்கும் ஆண்டிபட்டி நெசவாளர்கள்

சேலைகள்
சேலைகள்

ஊரடங்கு காரணமாக, விற்பனைக்குத் தயார் நிலையில் உள்ள ரூ. 10 கோடி மதிப்பிலான வேட்டி, சேலைகள் தேக்கமடைந்திருப்பதாக வருத்தம் தெரிவிக்கின்றனர் நெசவாளர்கள்.

வேட்டி சேலைக்குப் பெயர் பெற்றது ஆண்டிபட்டிதான். நாட்டின் பல பகுதிகள் மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கும், இங்குள்ள நெசவாளர்களால் நெய்யப்பட்ட சேலை, வேட்டிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் ஊரடங்கு காரணமாக விற்பனைக்குத் தயார் நிலையில் உள்ள ரூ.10 கோடி மதிப்பிலான வேட்டி, சேலைகள் தேக்கமடைந்திருப்பதாக வருத்தம் தெரிவிக்கின்றனர் நெசவாளர்கள்.

ஆண்டிபட்டி
ஆண்டிபட்டி
`ரேஷன் பொருள் வந்துருச்சு.. அதை வச்சு என்ன பண்றது?' -கலங்கும் தேனி பழங்குடியின கிராம மக்கள்

இது தொடர்பாக டி.சுப்புலாபுரத்தைச் சேர்ந்த நெசவாளர் ஒருவர் நம்மிடையே பேசும் போது, “ ஆண்டிபட்டி, சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம், சண்முகசுந்தராபுரம், கொப்பையம்பட்டி, முத்துகிருஷ்ணாபுரம் ஆகிய ஊர்களில் வசிக்கும் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், இந்த நெசவுத்தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள். இங்கு உற்பத்தி செய்யப்படும் உயர் ரக காட்டன் சேலைகள், வெள்ளை மற்றும் கலர் வேட்டிகள் உலக அளவில் பிரபலம். ஒரு நாளைக்கு 25 லட்சம் முதல் 30 லட்சம் மதிப்பிலான சேலைகள் தயார் செய்யப்படுகின்றன. இவை, ஒவ்வொரு வாரமும், ஈரோட்டில் உள்ள ஜவுளி மார்க்கெட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டு, நாட்டின் பல பகுதிகளுக்கு விற்பனை செய்யப்படும். சிலர், நேரடியாகவும் எங்களிடம் கொள்முதல் செய்வர். இவை இரண்டும், கொரோனா ஊரடங்கிற்குப் பின்னர் நின்றுவிட்டது. ஜவுளி மார்க்கெட் மூடப்பட்டது. வெளி ஊர்களிலிருந்து வியாபாரிகள் இங்கே வர வாகன வசதி ஏதுமில்லை.

சேலைகள்
சேலைகள்
`இதே நிலை நீடித்தால், மருந்துகள் தீர்ந்துவிடும்!' - புலம்பும் தேனி தனியார் மருந்தக உரிமையாளர்கள்

ஊரடங்கு விளைவாக, தறிக்கூடங்களை அடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இருந்தபோதும், வீட்டில் உள்ள தறிகளில் சேலை, வேட்டி உற்பத்தி தொடர்ந்து நடைபெற்றது. தற்போது சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான வேட்டி, சேலைகள் விற்பனைக்குத் தயார் நிலையில் உள்ளன. ஆனால், அவற்றை விற்கத்தான் இடம் இல்லை. இதே நிலை நீடித்தால், நெசவாளர்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நிலை ஏற்படும். 20 -ம் தேதிக்குப் பின்னர் ஊரடங்கில் கொண்டுவரப்படும் தளர்வில், ஈரோட்டில் செயல்படும் ஜவுளிச்சந்தையைக் கட்டுப்பாடுகளுடன் திறந்தால், எங்களிடம் உள்ள வேட்டி, சேலைகளை விற்பனைக்குக் கொண்டுசெல்வோம். தமிழக அரசு, நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு நல்ல முடிவினை எடுக்க வேண்டும்.!” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு