Published:Updated:

சாத்தான்குளம்: `அப்செட்' எஸ்.ஐ; தனித்தனி பிளாக்! - சிறைக் கெடுபிடியால் தவிக்கும் இன்ஸ்பெக்டர்

கைது செய்யப்பட்ட ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள்
கைது செய்யப்பட்ட ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள்

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ராஜாவாக வலம்வந்த ரகு கணேஷ் சிறைச்சாலைக்குச் சென்றதும் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளாராம். ஆடையை அவிழ்த்து உடல் பரிசோதனை செய்தபோது மிகுந்த அப்செட் ஆகியுள்ளார். 

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தாக்குதலுக்கு உள்ளான ஜெயராஜ், பென்னிக்ஸ் சர்ச்சை மரணம், நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. அரசியல்ரீதியாகவும் இந்தச் சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

உயிரிழந்த பென்னிக்ஸ், ஜெயராஜ்
உயிரிழந்த பென்னிக்ஸ், ஜெயராஜ்

இருவரின் மரணத்துக்குக் காரணமான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்களான ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு பேரூரணியில் உள்ள தூத்துக்குடி மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சாத்தான்குளம்:`எதிர்காலத்தை நினைத்து பயப்படுகிறேன்' - கதறிய எஸ்ஐ பாலகிருஷ்ணன்

ரகு கணேஷ்:

சிறைக்குள் நான்கு பேரும் எப்படி இருக்கிறார்கள் என்பது குறித்து சிறைச்சாலை வட்டாரத்தில் விசாரித்தோம். ``இந்த வழக்கில் முதலாவதாக 1-ம் தேதி கைதான ரகு கணேஷ், நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அன்றைய தினமே சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்ட சிறைச்சாலை
தூத்துக்குடி மாவட்ட சிறைச்சாலை

ரகு கணேஷ் சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பாக அவரது உடலை சிறைக் காவலர்கள் பரிசோதனை செய்துள்ளனர். வழக்கமான நடைமுறைப்படி உடைகளை அவிழ்க்கச் சொல்லி, உடலில் காயங்கள் இருக்கிறதா எனப் பரிசோதனை நடந்திருக்கிறது. டிரெஸ்ஸை அவிழ்க்கச் சொன்னதும் ரொம்பவே அப்செட் ஆகியிருக்கிறார்.

உடலில் சோதனை செய்யப்பட்ட பின்னர், ரகு கணேஷ் இடுப்பில் இருந்த அரைஞாண் கயிற்றைக் கழற்றுமாறு சிறைத்துறையினர் சொன்னதும் 1 நிமிடம் அப்படியே நின்றுள்ளார். சிறைக் காவலர்கள், `நீங்கள் அவிழ்த்து எறியாவிட்டால் நாங்கள் அறுக்க வேண்டியதிருக்கும்’ என்று சொன்ன பிறகே அவிழ்த்துள்ளார். 

சிறையில் அடைக்கப்பட்ட ரகு கணேஷ்
சிறையில் அடைக்கப்பட்ட ரகு கணேஷ்

1-ம் தேதி இரவு முழுவதும் ரகு கணேஷ் தூங்கவே இல்லையாம். போலீஸாரால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்து மூச்சு விடக்கூட இயலாமல் இருந்த பென்னிக்ஸ் இரவு முழுவதும் கோவில்பட்டி கிளைச் சிறையில் நின்றுகொண்டிருந்ததைப் போலவே எஸ்.ஐ ரகு கணேஷ் தூக்கம் வராமல் நின்றுகொண்டே இருந்திருக்கிறார். பகலில் சரியாகச் சாப்பிடவும் இல்லை" என்கிறார்கள் சிறைத்துறையினர்.

சாத்தான்குளம்: `ஊர் ஊராக இடம் மாறிய ஆய்வாளர் ஸ்ரீதர்’ -நள்ளிரவில் நடந்த சேஸிங்!

இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்:

இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், காவலர் முருகன் ஆகியோர் மறுநாள் (2-ம் தேதி) இரவு அதே சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்களைப் பார்த்த பிறகே ரகு கணேஷ் முகத்தில் சற்று மலர்ச்சி தெரிந்திருக்கிறது. அதன் பின்னரே சகஜ நிலைக்கு வந்திருக்கிறார்.

இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்
இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்

சிறையில் இன்று (3-ம் தேதி) காலையில் கஞ்சியும் புளித் துவையலும் கொடுத்திருக்கிறார்கள். மற்றவர்கள் சரியாகச் சாப்பிடாத நிலையில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் நன்றாகச் சாப்பிட்டுள்ளார். மதிய உணவாகச் சாதம் சாம்பாருடன் ஒரு காய் கூட்டு கொடுக்கப்பட்டுள்ளது. ’ஒரு கூட்டு மட்டும்தானா...’ என்று கேட்டபடியே ஸ்ரீதர் நன்றாகச் சாப்பிட்டிருக்கிறார்.

காலையில் வழக்கமாக பேப்பர் கொடுக்கப்படுவது வழக்கமாக இருந்தபோதிலும், இவர்கள் நால்வருக்கும் பேப்பர் கொடுக்கப்படவில்லை. எல்லா பேப்பரிலும் சாத்தான்குளம் சம்பவம் அதிகமாக இடம்பெற்றிருப்பதால் கொடுக்கப்படவில்லை. 

சாத்தான்குளம்: `பெண் காவலரின் துணிச்சல்...!’ - ஜெயராஜ் குடும்பத்தினர் நெகிழ்ச்சி

மாவட்ட சிறையில் உள்ள ஒரே பிளாக்கில் நான்கு பேருமே அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த பிளாக்கில் 12 அறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு அறையிலும் நான்கு பேர் அடைக்கப்பட முடியும். ஆனால் இவர்கள் நான்கு பேரும் தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் கடும் அப்செட்டில் இருக்கிறார் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்.

காலையில் குளிக்கும்போது, பாத்ரூம் செல்லும்போது மற்றும் உணவுக்குச் செல்லும்போது மட்டுமே நான்கு பேரும் பேசிக் கொள்ள இயலும். இன்று காலை குளிக்கும்போதும் சாப்பிடும்போதும் நால்வரும் பேசியிருக்கிறார்கள். ஆனால், இவர்கள் அனைவரையும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என மதுரை சிறைத்துறை டி.ஐ.ஜி-யான பழனி உத்தரவிட்டிருக்கிறார். 

காவல்துறையைச் சேர்ந்த நான்கு பேரும் தனித்தனியாக அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் அவர்கள் பேசிக்கொள்ளும் வாய்ப்பு குறைவு.
சிறைத்துறையினர்

அதனால், சிறையில் உள்ள காவலர்கள் யாரும் இவர்களுடன் அநாவசியமாகப் பேசுவதில்லை. இவர்களுக்கு எந்தச் சலுகைகளும் கொடுக்கப்படுவதும் இல்லை. அதனால் நான்கு பேரும் தனித்தனி அறைகளில் அடைந்துகிடக்கிறார்கள் என்கிற தகவல் சிறைத்துறையினரிடம் விசாரித்தபோது தெரியவந்தது.

அடுத்த கட்டுரைக்கு