Published:Updated:

தேனி: `தாமதமான ஆம்புலன்ஸ்!’ - தள்ளுவண்டியில் மூதாட்டி உடலை எடுத்துச் சென்ற அவலம்

தள்ளுவண்டியில் கொண்டு செல்லப்பட்ட மூதாட்டியின் உடல்
தள்ளுவண்டியில் கொண்டு செல்லப்பட்ட மூதாட்டியின் உடல்

ஆம்புலன்ஸ் வராத நிலையில், இறந்த பெண்ணின் உடலை, தள்ளுவண்டியில் எடுத்துச் செல்லப்பட்ட அவலம் தேனியில் நடந்துள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கூடலூர் பகுதியில் வசிக்கும் மூதாட்டி, கடந்த சில நாள்களுக்கு முன்னர், வயிற்றுப்போக்கு காரணமாக அருகே உள்ள கூடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கே சிகிச்சை அளிக்கப்பட்டு, குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். சிகிச்சையில் இருந்தபோது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தள்ளுவண்டியில் கொண்டு செல்லப்பட்ட மூதாட்டியின் உடல்
தள்ளுவண்டியில் கொண்டு செல்லப்பட்ட மூதாட்டியின் உடல்
தேனி: `ஒரே தெருவில் 46 பேருக்கு கொரோனா!’ - அதிர்ச்சி கொடுத்த துக்க நிகழ்ச்சி

மூதாட்டி வீடு திரும்பிய நிலையில், இரு தினங்களுக்கு முன்னர், அவரை தொடர்புகொண்ட சுகாதாரத்துறையினர், அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாகக் கூறியுள்ளனர். மேலும், வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், அந்த மூதாட்டி, நேற்று உயிரிழந்தார்.

தேனி: `பலமணி நேரக் காத்திருப்பு; வராத ஆம்புலன்ஸ்’ - கொரோனா பாதித்தவரை விரட்டிய மக்கள்!
தள்ளுவண்டியில் கொண்டு செல்லப்பட்ட மூதாட்டியின் உடல்
தள்ளுவண்டியில் கொண்டு செல்லப்பட்ட மூதாட்டியின் உடல்

இச்சம்பவம் அறிந்த அக்கம் பக்கத்தினர், விரைவாக உடலை அடக்கம் செய்ய அறிவுறுத்தியுள்ளனர். நகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், சுமார் 12 மணி நேரம் கடந்தும் ஆம்புலன்ஸ் வராததால், அக்கம் பக்கத்தினர் கொடுத்த அழுத்தம் காரணமாக, வேறு வழியின்றி, மூதாட்டியின் உடல், தள்ளுவண்டியில் வைத்து, கூடலூர் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. முக்கிய வீதிகளின் வழியே தள்ளுவண்டியில் சடலத்தை வைத்துக்கொண்டு செல்லப்பட்டது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

இதே போல, சில தினங்களுக்கு முன்னர், கொடுவிலார்பட்டியில், கொரோனா பாதித்த நபரை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வராத்தால், ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு