Published:Updated:

`தண்ணீர் தொட்டிக்கு கீழே விளையாட்டு!'- சிமென்ட் கல்வெட்டால் தேனி சிறுமிக்கு நேர்ந்த சோகம்

சிமென்ட் கல்வெட்டு
சிமென்ட் கல்வெட்டு

கால்நடைகளுக்கான தண்ணீர் தொட்டி அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமி ஒருவரின் மீது, தண்ணீர் தொட்டி கட்டியதற்கான சிமென்ட் கல்வெட்டு விழுந்ததில், அவர் பலத்த காயமடைந்தார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ளது டி.சுப்புலாபுரம் கிராமம். இங்கு கூலிவேலை செய்துவருபவர் காளிராஜ். மனைவி பழனியம்மாள். இந்தத் தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். ஆறு வயதாகும் அச்சிறுமி, வீட்டுக்கு அருகே உள்ள அரசுப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்துவருகிறார். இந்த நிலையில், கடந்த 6-ம் தேதி, வீட்டின் அருகே உள்ள இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அங்கே, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்பில், கால்நடைகளுக்குத் தண்ணீர் கொடுக்க கட்டப்பட்டிருந்த தொட்டியின் அருகே விளையாடியுள்ளார்.

`தண்ணீர் தொட்டிக்கு கீழே விளையாட்டு!'- சிமென்ட் கல்வெட்டால் தேனி சிறுமிக்கு நேர்ந்த சோகம்

அப்போது தொட்டியின் மேல்புறம் இருந்த சிமென்ட் கல்வெட்டு, சிறுமியின் மீது விழுந்துள்ளது. இதில், சிறுமிக்கு இடது கால் எலும்பு முறிந்தது. தலையின் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் பெரிய வெட்டுக்காயம் ஏற்பட்டது.

`சிறுமிக்கு நேர்ந்த துயரம்' - தேனி இளைஞருக்கு 30 ஆண்டு சிறைத் தண்டனை #TamilnaduCrimeDiary

சிறுமியின் அலரல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், சிறுமியை மீட்டு, கானாவிலக்கு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில், சிறுமிக்கு தொடர் சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனை மறுப்பதாகக் கூறி, தாய் பழனியம்மாள் மற்றும் தந்தை காளிராஜ் இருவரும், சிறுமியைத் தூக்கிக்கொண்டு, நேற்று (17.2.2020) தேனி மாவட்ட கலெக்டர் மரியம் பல்லவி பல்தேவைச் சந்திக்க வந்தனர்.

பழனியம்மாள்
பழனியம்மாள்

முன்னதாக நம்மிடம் பேசிய பழனியம்மாள், ``எப்போதும் போல, அன்னைக்கும் என் மகள் விளையாடிக்கொண்டிருந்தாள். அந்த தொட்டியின் மேலே, கனமான சிமென்ட் கல்வெட்டு வைத்துள்ளார்கள். அதை முறையாக சிமென்ட் வைத்து பூசாமல், தொட்டி மீது நிற்கவைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். அதனால்தான் என் மகள் மீது கல்வெட்டு விழுந்தது. தலையில் மட்டும் 32 தையல்கள் போட்டிருக்கிறோம். அந்த இடத்தில் என் மகளின் ரத்தக்கறை கூட இன்னும் இருக்கிறது. இதுவரை எந்த அதிகாரிகளும் இப்படி ஒரு சம்பவம் பற்றி வந்து விசாரிக்கவில்லை. பேசவில்லை.

சம்பவம் நடந்த இடத்தைக் காட்டும் பழனியம்மாள்
சம்பவம் நடந்த இடத்தைக் காட்டும் பழனியம்மாள்

சம்பவத்தன்று, கானாவிலக்கு போலீஸாரிடம் புகார் கொடுத்தோம். ஆனால், அவர்கள் புகாரை வாங்க மறுத்துவிட்டார்கள். புகார் இல்லாததால், என் மகள் குணமாவதற்குள், அரசு மருத்துவமனையிலிருந்து வெளியேறச் சொல்லிவிட்டார்கள். அன்றாடம் கூலி வேலைக்குச் செல்லும் எங்களால், தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை கொடுக்க முடியவில்லை. எங்கு போவது என்றே தெரியவில்லை. அதனால்தான் கலெக்டரை பார்க்க வந்தோம்” என்றார் கண்ணீரோடு.

தொடர்ந்து கலெக்டரை சந்தித்த மனு கொடுத்தனர். அவர்களிடம், ``நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கிறேன்” என்று கலெக்டர் உறுதியளித்தார்.

அடுத்த கட்டுரைக்கு