Published:Updated:

மோசடி சொத்துப் பதிவு... ஆவணங்களை ரத்து செய்ய யாருக்கு அதிகாரம்?

சென்னை உயர் நீதிமன்றம்

``கடந்த ஆகஸ்ட் மாதம், மோசடி ஆவணங்கள் என்று கண்டுபிடிக்கப்பட்ட ஆவணங்களை மாவட்டப் பதிவாளர் மற்றும் பதிவுத்துறை துணைத் தலைவர் ரத்து செய்யும் அதிகாரம் வழங்கி பதிவு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது."

மோசடி சொத்துப் பதிவு... ஆவணங்களை ரத்து செய்ய யாருக்கு அதிகாரம்?

``கடந்த ஆகஸ்ட் மாதம், மோசடி ஆவணங்கள் என்று கண்டுபிடிக்கப்பட்ட ஆவணங்களை மாவட்டப் பதிவாளர் மற்றும் பதிவுத்துறை துணைத் தலைவர் ரத்து செய்யும் அதிகாரம் வழங்கி பதிவு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது."

Published:Updated:
சென்னை உயர் நீதிமன்றம்

மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய மாவட்டப் பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ள சட்டத் திருத்தத்தை திறமையாக அமல்படுத்த வேண்டும். இந்த சட்டத் திருத்தத்தை தெரியப்படுத்தும் வகையில், அனைத்து மாவட்டப் பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று பதிவுத்துறை தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொத்துப் பத்திரம்
சொத்துப் பத்திரம்
விகடன்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில், மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்யக்கோரி மாவட்டப் பதிவாளருக்கு புகார் அளித்துள்ளனர்.

இந்தப் புகாரை விசாரித்த மாவட்டப் பதிவாளர், புகாரில் குறிப்பிட்ட அந்த ஆவணங்கள் மோசடியானவை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக உத்தரவு பிறப்பித்தார். ஆனால், அந்த மோசடி ஆவணத்தை அவர் ரத்து செய்யவில்லை. அதை `ரத்து செய்வதற்கு உரிமையியல் நீதிமன்றத்தை அணுகும்படி' உத்தரவிட்டுள்ளார்.

மனுதாரர் தரப்பில் இந்த உத்தரவை எதிர்த்து கோவையில் உள்ள பதிவுத்துறை துணைத் தலைவரிடம் மேல்முறையீடு செய்துள்ளனர். இதை விசாரித்த பதிவுத்துறை துணைத் தலைவர், `சென்னையில் உள்ள பதிவுத்துறை தலைவரிடம் முறையீடு செய்ய' உத்தரவிட்டுள்ளார்.

பத்திரப் பதிவுத்துறை
பத்திரப் பதிவுத்துறை

மனுதாரர் தரப்பில், இந்த இரு உத்தரவுகளையும் எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், ``கடந்த ஆகஸ்ட் மாதம் கொண்டுவந்த பதிவுச் சட்ட திருத்தத்தின் படி, மோசடியானவை எனக் கண்டறியப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய மாவட்டப் பதிவாளருக்கும், பதிவுத்துறை துணைத் தலைவருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது" என்று கூறி இருவரின் உத்தரவுகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், அரசின் இந்தச் சட்டத் திருத்தத்தை மாவட்டப் பதிவாளர் அறிந்துகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இதனால் அவர்களுக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோசடி சொத்துப் பதிவு... ஆவணங்களை ரத்து செய்ய யாருக்கு அதிகாரம்?

அடுத்ததாக, மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய மாவட்டப் பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ள சட்டத் திருத்தத்தை அமல்படுத்தும் வகையில் அனைத்து மாவட்டப் பதிவாளர்களுக்கும் பதிவுத்துறை தலைவர் இதுகுறித்த சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்" என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.