Published:Updated:

15 நாள் தீவிர சிகிச்சை... தமிழகத்தில் கொரோனாவுக்குப் பலியான முதல் நபரின் குடும்பத்தினர் குணமடைந்தனர்!

கொரோனா
கொரோனா

மதுரை அரசு மருத்துவமனை சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், அவர்கள் குணமடைந்ததால் நேற்று வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த கொரோனாவுக்கு தமிழகத்தில் பலியான முதல் நபரின் குடும்பத்தினர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக மதுரை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனை
மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனை
ஈ.ஜெ.நந்தகுமார்

மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 24 பேருக்கு அரசு மருத்துவமனை சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள செய்தி மதுரை மக்களை கொஞ்சம் நிம்மதியடைய வைத்துள்ளது.

கொரோனா தாக்குதலால் மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர், கடந்த 24- ம் தேதி பலியானார். கொரோனா பாதிப்பில் தமிழகத்தில் ஏற்பட்ட முதல் மரணம் என்பதால் தமிழகமே பதறியது. அதைத்தொடர்ந்து, மதுரையில் இறந்தவர் வசித்த பகுதி முழுதும் தீவிர கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டது.

கொரோனா
கொரோனா

இறந்தவரின் வீட்டைச் சுற்றி இருந்த 350-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். அது மட்டுமில்லாமல், மதுரையின் குறிப்பிட்ட பகுதிகளில் வசித்த 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சுகாதரத்துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தார்கள்.

பலியானவரின் மனைவி மற்றும் இரண்டு மகன்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு, அவர்களுக்கும் மதுரை அரசு மருத்துவமனை சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர்கள் குணமடைந்ததால் நேற்று வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனை
மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனை
ஈ.ஜெ.நந்தகுமார்

ஆனாலும், வீட்டில் இருக்கும் அவர்கள் இன்னும் 15 நாள்களுக்கு தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு