Published:Updated:

சென்னை பெருநகர மாநகராட்சியின் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் - என்னென்ன பயன்கள்?

சென்னை மாநகராட்சி

18 முதல் 60 வயது வரை இருக்கும் மக்கள் தங்களுடைய சுற்றுவட்டாரப் பகுதிகளின் சிறு வேலைகளைச் செய்து தாங்களும் பயனடையும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது இத்திட்டம்.

தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தைத் திரு.வி.கா நகர் மற்றும் தண்டையார்பேட்டை மண்டலங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது சென்னை பெருநகர மாநகராட்சி. வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களுக்கான குறைந்தபட்ச ஊதிய திட்டமாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரூபாய் 10 கோடி பட்ஜெட்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்தப்படப்போவதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

18 முதல் 60 வயது வரை இருக்கும் மக்கள் தங்களுடைய சுற்றுவட்டாரப் பகுதிகளின் சிறு வேலைகளைச் செய்து தாங்களும் பயனடையும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது இத்திட்டம்.

குளங்கள் மற்றும் கால்வாய்களைச் சீரமைத்தல், வழித்தடங்கள் மற்றும் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடுதல், நீர்நிலைகளை ஆழப்படுத்துதல், மழைநீர் வடிகால்களைத் தூர்வாருதல், இணைப்பு வடிகால்கள் மற்றும் வடிகால்கள் அமைத்தல் போன்ற வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட அடிப்படை சுத்திகரிப்பு பணிகள் இத்திட்டத்தினுள் அடங்கும். மேலும் அப்பகுதியின் உர மையங்கள், சிறு வடிகால் குழிகள் மற்றும் குப்பைக் கூடங்களின் பராமரிப்பு வேலைகளும் இதனுள் அடங்கும்.

மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி
மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“தண்டையார்பேட்டை மற்றும் கொளத்தூர் ஆகிய இரு மண்டலங்களிலும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் அதிகம் என்பதால் முதல் முனைப்பாக இப்பகுதிகளில் இத்திட்டத்தைச் செயல்படுத்துகிறோம். மழைநீர் வடிகால் போன்ற அவசரப் பணிகளை இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே செய்துமுடித்தால் வடகிழக்கு பருவமழைக்கு இது ஒரு முன்னேற்பாடாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார் மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி.

ஒவ்வொரு மண்டலத்திலும் இதுவரை 50-100 பேர் பதிவு செய்துள்ளதாகவும் மேலும் 500 பேர் பயனடையும்படி இதனை விரிவுபடுத்தப் போவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் பேடி. பெண் பயனாளர்களுக்கான வேலை வாய்ப்பு ஏற்படுவது இதில் ஒரு முக்கிய நன்மை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ரூபாய் 85 கோடி செலவில் மாநிலம் முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

- சுபஸ்ரீ, பயிற்சிப் பத்திரிகையாளர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism