Published:Updated:

6 பேர் விடுதலை: ``ஆட்சியாளர்கள் செய்யத் தவறியதை, நீதித்துறை செய்திருக்கிறது”- சுப்புலட்சுமி ஜெகதீசன்

சுப்புலட்சுமி ஜெகதீசன்

``இந்த 6 பேருக்கும், ராஜீவ் காந்தி கொலை வழக்குக்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை என்பது நன்றாகத் தெரியும்” - சுப்புலட்சுமி ஜெகதீசன்.

6 பேர் விடுதலை: ``ஆட்சியாளர்கள் செய்யத் தவறியதை, நீதித்துறை செய்திருக்கிறது”- சுப்புலட்சுமி ஜெகதீசன்

``இந்த 6 பேருக்கும், ராஜீவ் காந்தி கொலை வழக்குக்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை என்பது நன்றாகத் தெரியும்” - சுப்புலட்சுமி ஜெகதீசன்.

Published:Updated:
சுப்புலட்சுமி ஜெகதீசன்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஆறு பேருக்கும் நேற்று விடுதலை உத்தரவு வெளியானது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் எதிரொலியாக நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஆறு பேரும் விடுதலை செய்யப்படவிருக்கும் நிலையில் இது குறித்து பல்வேறு விமர்சனங்களும் கருத்துகளும் அரசியல் கட்சியினரிடையே நிலவிவருகின்றன. இது குறித்து முன்னாள் அமைச்சரும், திமுக முன்னாள் துணை பொதுச்செயலாளருமான சுப்புலட்சுமி ஜெகதீசனிடம் பேசினோம்.

அவர் கூறியதாவது, ``ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளைக் கைதுசெய்யத் தவறிய தமிழக சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்ஐடி) விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற கூட்டங்களில் பங்கேற்றவர்கள், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டவர்கள் ஆகியோர்மீது பொய் வழக்கு போட்டு அவர்களைக் கைதுசெய்தது. தேசிய அளவில் காங்கிரஸ் தலைவராகவும், முன்னாள் பிரதமராகவும் இருந்த ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டால் அவப்பெயர் உண்டாகும் என்று கருதியே இத்தனை நாள்களாக அவர்களை விடுதலை செய்ய ஆட்சியாளர்கள் மறுத்துவந்தனர்.

சுப்புலட்சுமி ஜெகதீசன்
சுப்புலட்சுமி ஜெகதீசன்

ஆட்சியாளர்கள் செய்யத் தவறியதை தற்போது நீதித்துறை செய்திருக்கிறது. அந்த ஆறு பேரையும் விடுதலை செய்து நல்ல தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இதை நான் வரவேற்கிறேன். இந்த ஆறு பேருக்கும், ராஜீவ் காந்தி கொலை வழக்குக்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை என்பது எனக்கு நன்கு தெரியும். ஏற்கெனவே, பேரறிவாளன் கைதுசெய்யப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்புதான் விடுதலை செய்யப்பட்டார். வெறுமனே பேட்டரி வாங்கித் தந்ததாகத்தான் அவர்மீது புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. 18 வயதில் கைதுசெய்யப்பட்ட அவர், 30 ஆண்டுகள் கழித்துத்தான் விடுதலை செய்யப்பட்டார். இப்போதாவது ஆறு பேரும் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்களே என்று மகிழ்ச்சி அடைகிறேன். நீதித்துறை நீதியை நிலைநாட்டியிருக்கிறது” என்றார்.