Published:Updated:

மக்கள் கூட்டம்... பேருந்து நிலையத்தை சந்தையாக மாற்றிய ஆட்சியர்... நீலகிரியில் அதிரடி!

Ooty Market
Ooty Market

'கொரோனாவில் தீவிரம் காட்டிவருவதால், மற்ற சிகிச்சைக்கு முக்கியத்துவம் இல்லை என்று எண்ண வேண்டாம்'.

கொரோனா வைரஸ்தொற்று பரவலைத் தடுக்க, நாடு முழுவதும் 144 தடைச்சட்டம் அமலில் உள்ளது. இந்த தடைச் சட்டத்தின் மூலம் பொதுவெளிகளில் மக்கள் நடமாட்டம் குறையும். அதன் மூலம் இந்த பெருந்தொற்றுப் பரவலை எளிதாகத் தடுக்க முடியும் என மத்திய, மாநில அரசுகள் நினைத்தன.

Ooty
Ooty

ஆனால், கடந்த இரண்டு நாள்களில் மக்களின் செயல்பாடுகள் அதிருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, மக்களிடம் சுய விலகல் குறித்தும், சுகாதார இடைவெளி குறித்தும் விளக்கி, கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள்குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

The Niliris Collector
The Niliris Collector

அப்போது பேசிய அவர், "மக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்க சந்தைகளில் அதிக அளவு கூடுகின்றனர். இதனால் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இதைச் சரிசெய்யும் வகையில், தற்சமயம் பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ள ஊட்டி மத்திய பேருந்து நிலையமும், ஊட்டி ஏ.டி.பகுதியில் உள்ள காந்தி மைதானமும் தற்காலிக சந்தைகளாக, சுகாதாரத்தைப் பேணும் வகையில் இடைவெளிகள் விட்டு கடைகள் அமைக்கப்படும்.

இதை மக்கள் பயன்படுத்தி, கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். நீலகிரியில் அத்தியாவிசிய பொருள்களை விலை உயர்த்தி அதிக விலைக்கு விற்பனை செய்தால்,1077 என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம்.

Ooty Market
Ooty Market

144 தடை உத்தரவை மீறி பொது வெளிகளில் நடமாடிய 91 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் ஒத்துழைக்க மறுத்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைத்து இடங்களிலும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டுவருகிறது. வழிபாட்டுத் தளங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்படும்.

கொரோனாவில் தீவிரம் காட்டிவருவதால், மற்ற சிகிச்சைக்கு முக்கியத்துவம் இல்லை என்று எண்ண வேண்டாம். டயாலிசிஸ் சிகிச்சை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. மேலும், நீலகிரியில் அடுத்த 15 நாள்களுக்குள் மகப்பேறடைய உள்ள 143 கர்ப்பிணிகள் நல்ல முறையில் கண்காணிக்கப்பட்டுவருகிறார்கள். அவர்களின் மகப்பேறுக்கானா எல்லா மருத்துவ வசதிகளும் செய்துதரப்படும்.

Commercial
Commercial

108 சேவைக்கு தகவல் அளித்தால் போதும், 60-க்கும் அதிகமான தனியார் ஆம்புலன்ஸும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. அனைத்துஇடங்களிலும் சுகாதார இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். கடைகளிலும் இந்த முறையைப் பின்பற்ற வேண்டும். தவறும் பட்சத்தில், கடைகள் திறக்க அனுமதிக்கப்பட மாட்டாது.

நீலகிரியைப் பொறுத்தமட்டில் 732 நபர்கள் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். வீட்டுத் தனிமையில் கண்காணிக்கப்படுபவர்கள் வெளியில் நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் 7 நபர்களின் மாதிரிகள் அனுப்பப்பட்டன. இதில் யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

Ooty Market
Ooty Market

மலைக் கிராமங்களுக்கு வாகனங்கள் மூலம் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் கொண்டுசென்று, அந்தந்த தெருக்களில் கிடைக்க வழிவகை செய்யப்படும். கொரோனா தொற்றைத் தடுக்க, மக்கள் வீடுகளில் இருந்து ஒத்துழைப்பு தரவேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு