Published:Updated:

``3 சிமென்ட் சாலைகளைக் காணவில்லை" - ஊர் முழுக்க ஒட்டப்பட்ட போஸ்டர்; அரசின் நடவடிக்கை என்ன?

சுவர் பதாகை, நடவடிக்கை தகவல்

"புகாரில் சம்பந்தப்பட்ட மூன்று சாலைகள் போடப்பட்டது ரத்துசெய்யப்படுகிறது மற்றும் 1,25,569 ரூபாயைச் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமிருந்தே பெறுவதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன."

``3 சிமென்ட் சாலைகளைக் காணவில்லை" - ஊர் முழுக்க ஒட்டப்பட்ட போஸ்டர்; அரசின் நடவடிக்கை என்ன?

"புகாரில் சம்பந்தப்பட்ட மூன்று சாலைகள் போடப்பட்டது ரத்துசெய்யப்படுகிறது மற்றும் 1,25,569 ரூபாயைச் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமிருந்தே பெறுவதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன."

Published:Updated:
சுவர் பதாகை, நடவடிக்கை தகவல்

விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் பஞ்சாயத்திலுள்ள மாரியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட நான்கு தெருக்களுக்கு புதிதாக சிமென்ட் சாலை அமைப்பதற்காக ரூ.17,00,000 மதிப்பீட்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் 2021 - 2022 ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்தச் சாலைகள் அமைக்கப்படுவதற்கான ஒப்பந்தத்தை, அப்பகுதி தி.மு.க முக்கியப்புள்ளி ஒருவர் எடுத்ததாகக் கூறப்படுகிறது. அதில், ஒரு சாலை மட்டுமே அமைக்கப்பட்ட நிலையில், மூன்று தெருக்களில் சிமென்ட் சாலைகளைப் போடாமலேயே அந்தச் சாலைகள் போடப்பட்டதாகக் கூறி பணம் எடுக்கப்பட்டிருப்பதாகவும், அந்தப் பணிகள் முடிக்கப்பட்டுவிட்டதாகக் கூறி திட்ட மதிப்பீட்டு விவரங்கள் எழுதப்பட்ட சுவர் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

`சாலையைக் காணவில்லை’ என்று கூறி ஊர் மக்கள் ஒட்டிய போஸ்டர்
`சாலையைக் காணவில்லை’ என்று கூறி ஊர் மக்கள் ஒட்டிய போஸ்டர்

இந்த நிலையில், ``காணவில்லை! காணவில்லை... கோலியனூரில் மூன்று புதிய சிமென்ட் ரோட்டைக் காணவில்லை!" என்று பதிவிட்டு, பொதுமக்களால் ஊர் முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில்தான், இரு தரப்பு விளக்கத்தையும் பெற்று, "மூன்று புதிய சிமென்ட் சாலைகளைக் காணவில்லை..!" - ஊர் முழுக்க ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு... எனும் தலைப்பில், கடந்த ஏப்ரல் மாதம் விகடன் இணையதளத்திலும் செய்தி ஒன்றைப் பதிவிட்டிருந்தோம். அடுத்த இரு தினங்களில், இந்த முறைகேடு சம்பவம் குறித்து அப்பகுதி இளைஞர்கள் சிலரும் சம்பந்தப்பட்ட மாவட்ட மற்றும் மத்தியத்துறை அதிகாரிகளுக்குப் புகாரும் அளித்திருந்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில், சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வந்துள்ளனர். அந்த விசாரணையின் முடிவில், "புகாரில் சம்பந்தப்பட்ட, மூன்று சாலைகள் போடப்பட்டது ரத்து செய்யப்படுகிறது. 1,25,569 ரூபாயை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமிருந்தே பெறுவதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன" என்று அரசுத் தரப்பிலிருந்து பதில் அளிக்கப்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism