Published:Updated:

சிதம்பரம்: பத்தாம் வகுப்பு சிறுமிக்குத் திருமணம்; தீட்சிதர் உள்ளிட்ட 3 பேர் கைது! - என்ன நடந்தது?

கைது

சிதம்பரத்தில் 14 வயது சிறுமிக்குத் திருமணம் செய்துவைத்த தீட்சிதர் உட்பட 3 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

சிதம்பரம்: பத்தாம் வகுப்பு சிறுமிக்குத் திருமணம்; தீட்சிதர் உள்ளிட்ட 3 பேர் கைது! - என்ன நடந்தது?

சிதம்பரத்தில் 14 வயது சிறுமிக்குத் திருமணம் செய்துவைத்த தீட்சிதர் உட்பட 3 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
கைது

கடலூர் மாவட்டம், சிதம்பரம் வடக்கு வீதியைச் சேர்ந்தவர் தீட்சிதர் சோமசேகர். இவரின் 14 வயது மகள் தற்போது 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு, அதே பகுதியைச் சேர்ந்த 24 வயது தீட்சிதர் ஒருவர், அந்தச் சிறுமியை திருமணம் செய்துகொண்டதாக புகார் எழுந்தது.

இது குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினர், கடலூர் மாவட்ட எஸ்.பி-யிடம் புகார் அளித்தனர். அதன் பேரில் திருமணமான சிறுமி, அவர் தந்தையை நேற்று முன்தினம் கடலூர் மாவட்ட டெல்டா பிரிவு போலீஸார் கடலூர் அழைத்து வந்தனர். பின்னர் அந்தச் சிறுமியிடம் கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்கள் விசாரித்தனர்.

கடலூர் மாவட்டம்
கடலூர் மாவட்டம்

அப்போது அந்தச் சிறுமி தனக்கு திருமணம் நடந்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் இது பற்றி சமூக நலத்துறையின் மகளிர் ஊர் நல அலுவலர் தவமணி, கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். சிறுமி தனக்கு நடந்த திருமணத்தை ஒப்புக் கொண்டதால், குழந்தை திருமணம் செய்து வைத்ததற்காக சிறுமியின் தந்தை சோமசேகர் தீட்சிதர்(46), மேலும், சிறுமியை திருமணம் செய்த பசுபதி தீட்சிதர் அவர் தந்தை கணபதி தீட்சிதர் ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.