Published:Updated:

கொள்ளிடம் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற 90 வயது மூதாட்டி... விரைந்து காப்பாற்றிய காவலர்!

மூதாட்டியைக் காப்பாற்றிய காவலர்

மகள் திட்டியதால் மனமுடைந்து கொள்ளிடம் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை,  மீனவர் உதவியுடன் ஆயுதப்படைக் காவலர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த முதலைமேடுதிட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சலை (90). மகள் வீட்டில் வசித்து வந்த அஞ்சலை, குடும்பப் பிரச்னை காரணமாக  மகள் திட்டியதால் மனமுடைந்து, 28.09.2022 அன்று கொள்ளிடம்  பாலத்திலிருந்து ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அப்போது நாகை ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றும் தனஞ்ஜெயன் என்பவர் பணியை முடித்துவிட்டு, டூ வீலரில் கடலூர் மாவட்டத்திலுள்ள தனது வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார். மூதாட்டி ஆற்றில் குதித்தைக் கண்ட தனஞ்செயன் சற்றும் தாமதிக்காமல் ஆற்றில் குதித்து, தண்ணீரில் நீந்திச் சென்று, மூதாட்டியை மீட்டு அந்தப் பகுதி மீனவர் சேகர் உதவியுடன் படகில் ஏற்றி கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தார். 

மூதாட்டியைக் காப்பாற்றிய காவலர்
மூதாட்டியைக் காப்பாற்றிய காவலர்

இதையடுத்து அஞ்சலையின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களிடம்  அஞ்சலை பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டார்.  துரிதமாகச் செயல்பட்டு ஆயுதப்படை காவலர், மீனவர் உதவியுடன் தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை காப்பாற்றிய சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகிவருகிறது.

கொள்ளிடம் ஆறு
கொள்ளிடம் ஆறு

தன்னுயிரைப் பற்றிக் கவலைப்படாமல் மூதாட்டியைக் காப்பாற்றிய ஆயுதப்படைக் காவலர் தனஞ்செயனுக்கும் மீனவருக்கும் பாராட்டுகள் குவிகின்றன.