Published:Updated:

மண்டபம்: முகாமிலிருந்து வெளியேற்றம்; பச்சிளம் குழந்தையுடன் விடிய விடிய சாலையோரத்தில் தவித்த அகதிகள்!

போராட்டத்தில் ஈடுபட்ட அகதிகள்

வெளியே அனுப்பப்பட்ட அவர்கள் அந்த நள்ளிரவில் எங்கே செல்வது என தெரியாமல் முகாமின் அருகில் சாலையோரம் பூட்டி இருந்த கடையின் வாசலில் விடிய விடிய கடும் குளிரில் பச்சிளம் குழந்தையை வைத்துக்கொண்டு தவித்தனர்.

மண்டபம்: முகாமிலிருந்து வெளியேற்றம்; பச்சிளம் குழந்தையுடன் விடிய விடிய சாலையோரத்தில் தவித்த அகதிகள்!

வெளியே அனுப்பப்பட்ட அவர்கள் அந்த நள்ளிரவில் எங்கே செல்வது என தெரியாமல் முகாமின் அருகில் சாலையோரம் பூட்டி இருந்த கடையின் வாசலில் விடிய விடிய கடும் குளிரில் பச்சிளம் குழந்தையை வைத்துக்கொண்டு தவித்தனர்.

Published:Updated:
போராட்டத்தில் ஈடுபட்ட அகதிகள்

இலங்கையில் ஈழப் போரின் போது அகதிகளாக வந்தவர்கள் ராமேஸ்வரம் மண்டபம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள மறுவாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். போரின் போது தஞ்சமடைந்தவர்கள் அகதிகளாக பதிவு செய்யப்பட்டு இருப்பிடம், உணவு, வேலை வாய்ப்பு உள்ளிட்ட வசதிகள் தமிழக அரசு சார்பில் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது பொருளாதார நெருக்கடி காரணமாக தஞ்சம் புகுந்து வரும் இலங்கை தமிழர்கள் அகதிகளாக பதிவு செய்யப்படாமல் , முகாம்களில் மட்டுமே தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், மண்டப முகாமில் ஈழப் போரின் போது தஞ்சம் அடைந்த நிர்மலா ரோஸ்மேரி (60) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய இளைய மகள் துர்கா, அவருடைய கணவர் தன்ராஜ் மற்றும் மூன்று குழந்தைகளுடன் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு முகாமிற்கு தன்னுடைய தாயான நிர்மலா ரோஸ்மேரியை பார்க்க வந்து, இங்கேயே தங்கி விட்டதாக சொல்லப்படுகிறது. அதன் காரணமாக இவர் அகதியாக பதிவு செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

பச்சிளங்குழந்தையுடன் சினேகா மற்றும் இலங்கை அகதிகள்
பச்சிளங்குழந்தையுடன் சினேகா மற்றும் இலங்கை அகதிகள்

இந்த நிலையில், தன்ராஜின் தம்பி சரண்ராஜ் சென்னை கும்மிடிப்பூண்டி முகாமில் மனைவியுடன் வசித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியான தன்னுடைய மனைவி சினேகாவை அழைத்துக்கொண்டு மண்டபம் அகதிகள் முகாமிற்கு அண்ணன் தன்ராஜை பார்ப்பதற்காக சரண்ராஜ் வந்திருக்கிறார்.

கடந்த 20 நாட்களாக இங்கேயே தங்கி இருந்த நிலையில், திடீரென சினேகாவிற்கு பிரசவ வலி ஏற்படவே, முகாமிலேயே அவருக்கு குழந்தை பிறந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த முகாம் அதிகாரிகள் பதிவு செய்யாமல் தங்கி இருந்ததாக சரண்ராஜ், சினேகா தம்பதி, பிறந்த நான்கு நாட்களே ஆன பச்சிளம் குழந்தை மற்றும் தன்ராஜ் அவருடைய மனைவி துர்கா, அவர்களின் மூன்று குழந்தைகள் ஆகியோரை முகாமை விட்டு நேற்று முந்தினம் இரவு பத்து மணிக்கு வெளியே அனுப்பியதாக சொல்லப்படுகிறது.

பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் மற்றும் போலீசார்
பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் மற்றும் போலீசார்

வெளியே அனுப்பப்பட்ட அவர்கள் அந்த நள்ளிரவில் எங்கே செல்வது என தெரியாமல் முகாமின் அருகில் சாலையோரம் பூட்டி இருந்த கடையின் வாசலில் விடிய விடிய கடும் குளிரில் பச்சிளம் குழந்தையை வைத்துக்கொண்டு தவித்தனர். அவர்கள் படும் துயரத்தை முகாமின் உள்ளே இருந்து பார்த்த அகதிகள் நேற்று இந்த மனிதாபிமானமற்ற செயலை கண்டித்து வெளியேற்றப்பட்ட தம்பதிகளுடன், முகாம் வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அவர்கள் முகாமில் இரவு தங்க அனுமதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.