Published:Updated:

`பாறைக்கு வைக்கப்பட்ட வெடி; அறியாத கோயில் காவலாளிகள்’ - தேனிக்கு அதிர்ச்சி கொடுத்த ரயில்வே பணி

ஆண்டிபட்டி கணவாய்
ஆண்டிபட்டி கணவாய்

மதுரை தேனி மாவட்ட எல்லையான ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் மலையைக் குடைந்து ரயில்வே பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. பாறையை உடைக்க வைக்கப்பட்ட வெடியால், கணவாய் அருகே உள்ள சாஸ்தா கோயில் காவலாளி உயிரிழந்தார்.

மதுரை - போடி அகல ரயில் பாதைப் பணிகள் வேகமாக நடைபெற்றுவருகின்றன. முதல் கட்டமாக மதுரை - உசிலம்பட்டி வரையிலான பணிகள் முடிக்கப்பட்டு, சோதனை ஓட்டமும் நடைபெற்று முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட பணியாக, உசிலம்பட்டி முதல் தேனி வரையிலான பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்த நிலையில், ஆண்டிபட்டி கணவாய் மலைப்பகுதியில் உள்ள பாறைகளை உடைக்கும் பணிகள் கடந்த சில நாள்களாக நடைபெற்றுவருகிறது.

`கடைசியில் அவன காப்பாத்த முடியலையே..!' - கிணற்றில் விழுந்த சிறுவனால் கலங்கிய தேனி கிராமம்
படுகாயமடைந்த ஆண்டி
படுகாயமடைந்த ஆண்டி

நேற்றுமுன்தினம் மாலை, பாறைகளை உடைக்க வெடி வைத்துள்ளனர். அதை அறியாத கணவாய் சாஸ்தா கோயில் காவலாளிகளான சிவராமன் (வயது 40) மற்றும் ஆண்டி (வயது 37) ஆகியோர் இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்காக அங்கு சென்றுள்ளனர். எதிர்பாராத விதமாக வெடித்த வெடியால் பாறைகள் பறந்துவந்து இருவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளது. இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு தேனி கானாவிலக்கு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தலையில் பலத்த காயமடைந்த ஆண்டி, மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி ஆண்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

`தண்ணீர்த் திருட்டுக்காக நடந்த கொலை!' -வீடியோ கான்ஃபரன்ஸில் ஆயுள் தண்டனை விதித்த தேனி நீதிபதி

இது குறித்து பேசிய ஆண்டிபட்டி போலீஸார், ``எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் செய்யாமல் பாறைக்கு வெடி வைத்துள்ளனர். இதில், சிவராமனுக்கு காலில் காயமும், ஆண்டிக்கு தலையில் காயமும் ஏற்பட்டது. ஆண்டி உயிரிழந்துள்ளார். திம்மரசநாயக்கனூரைச் சேர்ந்த இருவரும் சாஸ்தா கோயிலில் காவலாளியாக வேலை பார்த்துவந்துள்ளனர். அகல ரயில்பாதை ஒப்பந்தப்பணிகளை மேற்கொண்ட சேலம் மாவட்டம் திருச்செங்கோடு ஈகில் எர்த் மூவின் உரிமையாளர் உட்பட நால்வர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் நால்வரும் கைது செய்யப்படுவார்கள்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு