Published:Updated:

ஆட்டோவில் தொலைத்த 74,000 ரூபாய்! - முதியவரிடம் ஒப்படைத்த தேனி ஆட்டோ டிரைவர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அம்மாவாசியிடம் பணம் ஒப்படைக்கப்படுகிறது.
அம்மாவாசியிடம் பணம் ஒப்படைக்கப்படுகிறது.

மகன்கள் கைவிட்ட நிலையில், உழைத்து சம்பாதித்த முதியவர், தன்னுடைய பணம் கிடைத்ததில் பெருமகிழ்ச்சியடைந்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

குற்றச்செயல்களின் கூடாரமா தேனி..?! அச்சத்தில் ஓ.பி.எஸ். ஊர் மக்கள் #TamilnaduCrimeDiary

சாலை ஓரத்தில் வசித்துவரும் முதியவர் ஒருவர், வீடு ஒத்திக்கு பிடிக்க, தான் சேமித்துவைத்த பணத்தை ஆட்டோவில் தவறவிட்டுள்ளார். அந்தப் பணத்தை, சம்பந்தப்பட்ட ஆட்டோ டிரைவர் எடுத்துச்சென்று, இன்று உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நடந்துள்ளது.

அம்மாவாசி தொலைத்த பணம் மற்றும் வங்கி ஆவணங்கள்.
அம்மாவாசி தொலைத்த பணம் மற்றும் வங்கி ஆவணங்கள்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ளது மாயாண்டிபட்டி கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த அம்மாவாசி என்பவர் வயது 60. இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். ஆனாலும், அம்மாவாசியை கவனிக்க மகன்கள் முன்வராததால், தனித்து விடப்பட்டுள்ளார். சாலை ஓரத்தில் சிறிய குடிசை அமைத்து வாழ்ந்துவரும் அம்மாவாசி, மதுபாட்டில்களைச் சேகரித்து விற்று, அதில் வரும் பணத்தில், தன் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறார். மிச்சமாகும் பணத்தை சிறுகச்சிறுக சேமித்து, கன்னியப்பிள்ளை பட்டியில் உள்ள கூட்டுறவு வங்கியில் தனது பெயரில் நிரந்தர வைப்புத்தொகையாக வைத்துவிட்டு, அதற்கான பாண்டுகளை மட்டும் தன்னுடன் வைத்திருக்கிறார்.

5,000 பேர்… ரூ.100 கோடி… தேனி மக்களை ஏமாற்றிய போலி நிறுவனம்!

குடிசை வீட்டில் வாழ்ந்துவந்த அம்மாவாசி, ஒத்திக்கு வீடு பார்த்து குடியிருக்க நினைத்து, வங்கியில் உள்ள தனது பணத்தில் 74,000 ரூபாயை மட்டும் எடுத்துக்கொண்டு வீடு தேடியிருக்கிறார். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை அன்று, ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்குச் செல்ல ஆட்டோவில் ஏறியவர், ரூ.74,000 பணம் மற்றும் வங்கி பாண்டுகளை ஆட்டோவில் மறந்து வைத்துவிட்டு, மருத்துவனைக்குச் சென்றுவிட்டார். சிறுது நேரம் கழித்து தனது பையைக் காணவில்லை என அறிந்து, ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கிறார்.

அழகர்சாமியைப் பாராட்டிய ஆண்டிபட்டி போலீஸார்.
அழகர்சாமியைப் பாராட்டிய ஆண்டிபட்டி போலீஸார்.

ஆண்டிபட்டி டிஎஸ்பி சீனிவாசன் உத்தரவில், ஆய்வாளர் சரவண தெய்வேந்திரன், உதவி ஆய்வாளர் கோதண்டராமன், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் துரைராஜ் ஆகியோர் விசாரணையில் இறங்கினர். இந்நிலையில் இன்று, சம்பந்தப்பட்ட ஆட்டோ டிரைவர் அழகர்சாமி (வயது 32), அம்மாவாசியின் பையை எடுத்துக்கொண்டு ஆண்டிபட்டி காவல்நிலையத்திற்கு வந்தார். அதில், அம்மாவாசியின் ரூபாய் 74,000 பணம் மற்றும் வங்கி பாண்டுகள் இருந்தன. உடனே, அம்மாவாசிக்குத் தகவல் தெரிவித்து வரவழைத்த போலீஸார், அவரிடம் பணத்தை ஒப்படைத்தனர்.

`சீனாவிலிருந்து திரும்பினர்; கொரோனா அச்சம்!'- தேனி  மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட இருவர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுதொடர்பாகப் பேசிய ஆட்டோ டிரைவர் அழகர்சாமி, `தினமும் நிறையப் பேர் ஆட்டோவில் ஏறி இறங்குகிறார்கள். யார் இதை விட்டுச்சென்றது என்று தெரியாமல் தேடிக்கொண்டிருந்தேன். `யாராவது பணத்தைக் கேட்டு ஆட்டோ ஸ்டாண்டுக்கு வந்தால் சொல்லுங்கள்' என்று நண்பர்களிடம் கூறியிருந்தேன். என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், இன்று காவல்நிலையத்தில் பணத்தை ஒப்படைத்துவிடலாம் என்று வந்தேன். நல்லவேளையாக, முதியவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அதனால், எளிதாக அவரைக் கண்டுபிடிக்க முடிந்தது” என்றார்.

`நம்மள மாதிரிதான அவங்களும் கஷ்டப்படுவாங்க!'- கோவை பெண்ணை நெகிழவைத்த ஆட்டோ ஓட்டுநர்

மகன்கள் கைவிட்ட நிலையில் உழைத்து சம்பாதித்த முதியவர், தன்னுடைய பணம் கிடைத்ததில் பெருமகிழ்ச்சியடைந்தார். ``உழைத்த பணம் எப்பவும் கையை விட்டுப் போகாது” என்றார். அழகர்சாமியின் நேர்மையைப் பாராட்டி, ஆய்வாளர் சரவண தெய்வேந்திரன், அவருக்குப் பரிசளித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு