Published:Updated:

`15,579 காவல்நிலையங்களில் 4-ம் இடம்!' - தேசிய அளவில் சாதித்த தேனி மகளிர் காவல்நிலையம்

தேனி அனைத்து மகளிர் காவல்நிலையம்
தேனி அனைத்து மகளிர் காவல்நிலையம்

நாடு முழுவதும் 10 சிறந்த காவல்நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில் தேனி அனைத்து மகளிர் காவல்நிலையம் நான்காம் இடம் பிடித்துள்ளது.

தேசிய அளவில் சிறந்த காவல்நிலையங்களின் பட்டியலில் நான்காம் இடம் பிடித்தது, தேனி அனைத்துமகளிர் காவல்நிலையம்.

தேனி அனைத்து மகளிர் காவல்நிலையம்
தேனி அனைத்து மகளிர் காவல்நிலையம்

2019-ம் ஆண்டில் நாட்டின் சிறந்த டாப் 10 காவல்நிலையங்களுக்கான பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அந்தமான் & நிகோபர் தீவுகளின் அபர்தீன் காவல்நிலையம் முதலிடம் பிடித்துள்ள இந்தப் பட்டியலில் தேனி அனைத்து மகளிர் காவல்நிலையம் 4வது இடம் பிடித்து அசத்தியிருக்கிறது. இரண்டாவது இடத்தில் குஜராத்தின் பலாசினோர் காவல்நிலையமும் மூன்றாவது இடத்தில் மத்தியப் பிரதேசத்தின் அஜ்க் பஹ்ரென்பூர் காவல்நிலையமும் இருக்கின்றன.

மத்திய அரசு, நாடு முழுவதிலும் உள்ள 15,579 காவல்நிலையங்களில் நேரடியாக ஆய்வு செய்தது. காவல்நிலையத்தின் தூய்மை, புகார் கொடுக்க வரும் மக்களை காவலர்கள் எப்படி அணுகுகிறார்கள் என்பதில் தொடங்கி, புகாருக்கான தீர்வு வரை அனைத்தையும் ஆய்வு செய்து, நாடு முழுவதும் 10 சிறந்த காவல்நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில், தேனி அனைத்து மகளிர் காவல்நிலையம் நான்காம் இடம் பிடித்துள்ளது.

தேனி அனைத்து மகளிர் காவல்நிலையம்
தேனி அனைத்து மகளிர் காவல்நிலையம்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் மங்கையர் திலகம், ``உயர் அதிகாரிகளின் அறிவுரையின்படி செயல்பட்டதால்தான் இந்தச் சிறப்பு எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. ரொம்பவும் மகிழ்ச்சியாக உள்ளது. காவல்நிலையத்தில் உள்ள அனைவரின் ஒத்துழைப்பும்தான் இதற்குக் காரணம்.

`பாலியல் துன்புறுத்தல் இருபால் மாணவர்களுக்குமே இருக்கு!' - பள்ளிகளில் உரையாடும் காவல் துறையினர்

மேலும், எங்கள் காவல்நிலையத்தில் குழந்தைகளுக்கென தனியாக நட்புறவு அறை உள்ளது. பெண்களுக்கென கலந்துரையாட தனி அறை உள்ளது. அதேபோல, ஓய்வு அறை உள்ளது. மழை நீர் சேகரிப்பு தொட்டி என அனைத்தையும் சரியாக வைத்திருக்கிறோம். இதனால்தான் இவ்வளவு பெரிய அங்கீகாரம் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது” என்றார் மகிழ்ச்சியோடு.

தேனி அனைத்து மகளிர் காவல்நிலையம்
தேனி அனைத்து மகளிர் காவல்நிலையம்

ஒரு ஆய்வாளர், மூன்று சார்பு ஆய்வாளர், 4 தலைமைக் காவலர்கள், 7 கிரேடு 1 காவலர்கள், 12 காவலர்கள் என மொத்தம் 27 நபர்களைக் கொண்ட தேனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தை 1994 அன்று அன்றைய முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு, தேசிய அளவில் சிறந்த காவல்நிலையங்களின் பட்டியலில் எட்டாம் இடம் பிடித்தது பெரியகுளம் வடகரை காவல்நிலையம்.

அடுத்த கட்டுரைக்கு