Published:Updated:

`தாம்பூலப் பைக்கான செலவைவிடவும் குறைவு!' - வாழ்த்த வந்தவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தேனி மணமக்கள்

மணமக்கள்
மணமக்கள்

மணமக்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க விரும்புவோர், தேனி ஓடைத்தெருவில் உள்ள மணமகனின் வீட்டிற்கு வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, மணமக்களை வாழ்த்த உற்றார் உறவினர்கள், மணமகனின் வீட்டிற்குச் சென்றனர்.

தேனியைச் சேர்ந்த ராமலிங்கம் மற்றும் மதுமிதா இருவருக்கும் பெற்றோர்களால், கடந்த வருடம் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக, திருமணம் நடைபெறுவது குறித்து பெற்றோர்கள் அச்சமடைந்தனர்.

தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், தேனி பெத்தாச்சி விநாயகர் கோயிலில், பெற்றோர்கள், உறவினர்கள் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. மிக எளிமையாக திருமணம் நடந்ததால், மணமக்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க விரும்புவோர், தேனி ஓடைத்தெருவில் உள்ள மணமகனின் வீட்டிற்கு வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, மணமக்களை வாழ்த்த உற்றார் உறவினர்கள், மணமகனின் வீட்டிற்குச் சென்றனர்.

சானிடைசர் உட்பட பொருள்கள்
சானிடைசர் உட்பட பொருள்கள்

அப்போது, மணமக்கள் இருவரும், தங்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் இலவச மாஸ்க், சானிடைசர் கொடுத்தனர். கூடவே, ஐந்து கிலோ அரிசி, காய்கறி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களையும் கொடுத்து அசத்தினர். இதனால், அங்கு வந்திருந்த அனைவரும் மகிழ்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்தனர்.

`ஜூன் மாதமும் ஒற்றை யானை தாக்குதலும்!’ -கலக்கத்தில் தேனி, தேவாரம் மக்கள்

இது தொடர்பாக பேசிய மணமக்கள், ``வழக்கமாக, திருமணத்திற்கு வருபவர்களுக்கு தாம்பூலப் பை கொடுப்பது வழக்கம். தற்போது கொரோனா காலமாக இருப்பதால், மக்களுக்கு அத்தியாவசியமான சானிடைசர், மாஸ்க் கொடுக்கலாம் எனத் திட்டமிட்டோம். தாம்பூலப் பைக்கு ஆகும் செலவைவிட இது குறைவுதான். அதன்படி எங்களை வாழ்த்த வந்திருப்பவர்களுக்கு மாஸ்க், சானிடைசர் கொடுத்தோம். இது எங்களுக்கு சந்தோசமாகவும் நிறைவாகவும் இருந்தது” என்றனர் ஒருமித்த குரலில்.

அடுத்த கட்டுரைக்கு