Published:Updated:

`மருத்துவக் கல்லூரி கமிட்டியை விசாரிக்காதது ஏன்?' - நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் நீதிபதி கேள்வி

நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் கைதான நால்வரின் ஜாமீன் மனு மீதான விசாரணை தேனி குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

நீட் விவகாரம்
நீட் விவகாரம்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாகக் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சென்னையைச் சேர்ந்த பிரவீன் அவரின் தந்தை சரவணன், ராகுல் அவரின் தந்தை டேவிஸ் ஆகியோர் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

தேனி நீதிமன்றம்
தேனி நீதிமன்றம்

அந்த மனு மீதான விசாரணை, தேனி குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

சென்னை எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மாணவர் ராகுல் அவரின் தந்தை டேவிஸ், பாலாஜி மருத்துவக் கல்லூரி மாணவர் பிரவீன் அவரின் தந்தை சரவணன் ஆகியோரது நீதிமன்றக் காவல் இன்றோடு முடிந்தது.

`தேனிக்கு அழைத்துவரப்படும் இர்ஃபான்!' - மீண்டும் சூடுபிடிக்கும் நீட் விவகாரம்
கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

இதைத்தொடந்து தேனி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களது நீதிமன்றக் காவலை வரும் 25-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார் நீதிபதி. தொடர்ந்து நால்வரின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது.

`தேனிக்கு அழைத்துவரப்படும் இர்ஃபான்!' - மீண்டும் சூடுபிடிக்கும் நீட் விவகாரம்

நால்வர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ``பிரவீன் மற்றும் ராகுல் ஆகியோர் எந்தத் தவறும் செய்யவில்லை. நீட் தேர்வு முறையாக எழுதி கலந்தாய்வில் அரசுக் கல்லூரி கிடைக்காத காரணத்தால் தனியார் கல்லூரியில், அக்கல்லூரி முதல்வர் முன்னிலையில்தான் மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று சேர்க்கையும் நடந்திருக்கிறது.

நீதிமன்றத்தில் ஆஜர்
நீதிமன்றத்தில் ஆஜர்

நீட் தேர்வு ஆள்மாறாட்டத்துக்கும் இவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று வாதிட்டார்.

அதைக் கேட்டுக்கொண்ட நீதிபதி, ``மாணவர்களின் கல்லூரி சேர்க்கையின்போது கல்லூரி நிர்வாகம் சார்பாக அமைக்கப்பட்ட கமிட்டிதான் சான்றிதழ்களை சரிபார்த்திருக்கிறது. அந்த கமிட்டியிடம் ஏன் விசாரணை செய்யவில்லை” என சி.பி.சி.ஐ.டி தரப்பிடம் கேள்வி எழுப்பினார்.

அதிரவைக்கும் ஆள்மாறாட்டம்... கடந்த ஆண்டுகளில் நீட் தேர்வு நேர்மையாக நடந்ததா? #DoubtOfCommonMan  

அதற்கு, சி.பி.சி.ஐ.டி தரப்பில், ``அக்கமிட்டியை விசாரிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் விசாரணை முடிந்து அறிக்கை தாக்கல் செய்யப்படும்” என பதிலளித்தனர். நால்வரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 14-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.