Published:Updated:

`மூன்று நாள்களுக்கு ஒருமுறை; 3 மணி நேரம் மட்டுமே அனுமதி!' - தேனி கலெக்டர் அதிரடி

அனுமதி வாங்க எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை
அனுமதி வாங்க எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை

மக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்கக் கடும் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துள்ளது தேனி மாவட்ட நிர்வாகம். அவை நாளை முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

தேனி மாவட்டத்தில், ஆண்டிபட்டி மற்றும் கூடலூர் நகராட்சிகளில் ஊரடங்கு தளர்வு அமல்படுத்தப்பட்டது. அதைப் பயன்படுத்தி, தேனி, கம்பம், போடி, பெரியகுளம் பகுதிகளில் ஒரே நேரத்தில் மக்கள் கூட ஆரம்பித்தனர். சமூக இடைவெளி காற்றில் பறந்தது. சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படவே போலீஸார் திணறிப்போனார்கள்.

`குட்கா வாங்கப்போறேன்!’ - தேனி போலீஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த மதுரை நபர்
corona
corona

இதனால், மாவட்ட நிர்வாகத்தின் மீது கடுமையாக விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இதையடுத்து கடும் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துள்ளது மாவட்ட நிர்வாகம். அவை நாளை முதல் அமுல்படுத்தப்பட உள்ளது.

அத்தியாவசியப் பொருள்கள் வாங்க வெளியே வருபவர்கள், முன்னரே மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி வாங்க வேண்டும் என்றும், அப்படி அனுமதி அளிக்கப்படும் வாகனங்களில் மட்டுமே அத்தியாவசியப் பொருள்கள் வாங்க வெளியே வர வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``நாளை (06.05.20250) முதல், ஒரு நபர், மூன்று தினங்களுக்கு ஒருமுறை, அதிலும், மூன்று மணி நேரம் மட்டுமே வெளியே சென்றுவர அனுமதிக்கப்படுவர்.

Theni Police
Theni Police
`அரசுடன் தொடர்புடைய தொழிலைச் செய்ததில்லை!’-ஓ.பி.எஸ் மீதான குற்றச்சாட்டுக்கு மகன் சொல்வதென்ன?

இதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற, 9488056600 என்ற எண்ணிற்கு, தங்களது அலைபேசியிலிருந்து குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். அவ்வாறு குறுஞ்செய்தி அனுப்பும் போது, தங்களது வாகனத்தின் எண்ணை, (உதாரணத்திற்கு TN 60 AA 0000) பதிவிட்டு, அதன் அருகே என்ன காரணம் என டைப் செய்து, 9488056600 என்ற எண்ணிற்குக் குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். ``TN 60 AA 0000 அத்தியாவசியப் பொருள்கள் வாங்க” என அனுப்பினால் போதும். அதனை மாவட்ட நிர்வாகம் பரிசீலித்து, அனுமதி குறுஞ்செய்தி அனுப்பும். அதில், அத்தியாவசிப் பொருள்கள் வாங்க உங்களுக்கு அனுமதிக்கப்படும் நேரம் குறிப்பிடப்படும். அந்த நேரத்தில்தான் நீங்கள் வெளியே வர வேண்டும். இதைச் சாதாரண போன் வைத்திருப்பவர்களாலும் குறுஞ்செய்தி அனுப்பி அனுமதி பெற முடியும்.

Theni Collector Pallavi Baldev
Theni Collector Pallavi Baldev
`நடுரோட்டில் இறக்கிவிடப்பட்ட நிறைமாத கர்ப்பிணி' -தேனி காவல்துறையின் நடவடிக்கையால் சர்ச்சை

அனுமதியில்லாமல் வெளியே வருவது காவல்துறை மற்றும் வருவாய்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டால், வாகனம் பறிமுதல் செய்யப்படும். எனவே, மூன்று நாள்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கத் திட்டமிட்டு, அனுமதி பெற்று, மூன்று மணி நேரத்தில் வாங்கிக்கொண்டு பாதுகாப்பாக வீடுகளுக்குச் செல்வதால், கொரோனா நோய்ப் பரவலிலிருந்து தங்களையும், தங்கள் குடும்பத்தாரையும் பாதுகாக்க முடியும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு