Published:Updated:

கொரோனா அச்சத்தில் தேனி மாவட்டச் சிறை! - என்ன காரணம்?

தேனி மாவட்டச் சிறைச்சாலை
தேனி மாவட்டச் சிறைச்சாலை

கொரோனா அச்சம் காரணமாக, தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தேக்கம்பட்டியில் உள்ள சிறைவாசிகள் அச்சமடைந்துள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

`டயட் கன்ட்ரோல், அசைவத்துக்கு குட்பை..!' - மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு என்ன செய்கிறார் ஓ.பி.எஸ்?

கடந்த வாரம், மதுரை திடீர் நகர் பகுதியில் இருதரப்பைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மோதிக்கொண்டனர். தகவலறிந்து விரைந்து சென்ற திடீர் நகர் போலீஸார், 12 இளைஞர்களைக் கைது செய்தனர். அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனைக்குப் பின்னர், 8 பேர் விருதுநகர் மாவட்டச் சிறைக்கும், 4 பேர் தேனி மாவட்டச் சிறைக்கும் அனுப்பப்பட்டனர்.

தேனி மாவட்டச் சிறைச்சாலை
தேனி மாவட்டச் சிறைச்சாலை

இந்த நிலையில், கடந்த மே 22-ம் தேதி, 12 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியானது. அதில், தேனி சிறையில் அடைக்கப்பட்ட 18 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனடியாக செயல்பட்ட மாவட்ட நிர்வாகத்தினர், சம்பந்தப்பட்ட இளைஞரை, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்புச் சிகிச்சை வார்டுக்கு அனுப்பி வைத்தனர். அந்த இளைஞருடன் தொடர்பில் இருந்தவர்கள் சிறையின் உள்ளே தனிமைப்படுத்தப்பட்டனர். அவர் தங்கியிருந்த அறை, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், சிறைச்சாலையில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்றுவருகிறது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட தகவலில், ``முதல்கட்டமாக, தேனி சிறையில் உள்ள பணியாளர்கள், கைதிகள் என 39 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

`தாராவி டு தேனி; 30 பயணிகள்; போலி இ-பாஸ்!’ - அதிரவைத்த ஆம்னி பேருந்து மோசடி

அதில், அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. மேலும், 145 நபர்களுக்கு நேற்றைய தினம் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முடிவுகள் விரைவில் வெளியாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

145 நபர்களின் பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சிறைவாசிகள் கலக்கமடைந்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு