Election bannerElection banner
Published:Updated:

கொரோனா கட்டுப்பாடு அறையில் பணியாற்றிய மருத்துவருக்குத் தொற்று! - கலக்கத்தில் தேனி

மூடப்பட்ட கட்டுப்பாட்டு அறை
மூடப்பட்ட கட்டுப்பாட்டு அறை

தேனி கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வந்த கொரோனா கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருந்த மருத்துவர் ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

`30 நாளில் அரசு வேலை; இல்லைன்னா பணம் வாபஸ்' - அதிர்ச்சி கொடுத்த தேனி அரசுப்பள்ளி தலைமையாசியர்

தேனி கலெக்டர் அலுவலகத்தில், கொரோனா கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இங்கு, வருவாய்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை போன்ற துறைகளின் அலுவலர்கள் 8 பேர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில், கடந்த 20-ம் தேதி இரவு பணிக்கு வந்திருந்த தேனி கானாவிலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவர் காய்ச்சலுடன் இருந்துள்ளார்.

தேனி கலெக்டர் அலுவலகம்
தேனி கலெக்டர் அலுவலகம்

அதனை அடுத்து, நேற்று காலை, அரசு மருத்துவமனைக்குச் சென்று, தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தவே, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, அவருடன், இரவு பணியாற்றிய நபர்கள் அனைவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால், கலெக்டர் அலுவலக ஊழியர்கள், அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

தேனி: `வங்கியில் எடுக்கப்பட்ட ரூ. 22 லட்சம்’ -தனியார் நிறுவன மேலாளருக்கு நேர்ந்த கொடூரம்

நம்மிடம் பேசிய கலெக்டர் அலுவலக அதிகாரி ஒருவர், ``25 வயதாகும் பயிற்சி மருத்துவர் அவர். நேற்று அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதும், அவர் பணியாற்றிய கொரோனா கட்டுப்பாட்டு அறை மூடப்பட்டது. மதியத்திற்கு மேல் அரசு அலுவலர்கள் அனைவரும் வீட்டிற்குச் சென்றுவிட்டனர். நாளை, கலெக்டர் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட உள்ளது” என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு