Published:Updated:

`ஊரடங்கு முடிந்தால்தான் நிதியாம்!’ - ஓபிஎஸ்-க்கு கோரிக்கை வைக்கும் தேனி தோல் பாவைக்கூத்துக் கலைஞர்

தேனியைச் சேர்ந்த தோல்பாவைக் கூத்துக் கலைஞர் முத்து லெட்சுமண ராவ் நிலை குறித்து அறிய, அவரைத் தொடர்புகொண்டு பேசினோம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா, பலரது வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கியது மட்டுமல்ல, அவர்களை பசியால் வாடவும் வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். தேனியைச் சேர்ந்த தோல்பாவைக் கூத்துக் கலைஞர் முத்து லெட்சுமண ராவ் தமிழக அரசின் கலைமாமணி விருது (2019) பெற்றவர். இந்த கொரோனா ஊரடங்கில் அவரின் நிலை குறித்து அறிய, அவரைத் தொடர்புகொண்டு பேசினோம்.

முத்து லெட்சுமண ராவ்
முத்து லெட்சுமண ராவ்
`வெளி ஆட்களா... நோ என்ட்ரி; டிரம்களில் சோப்புத்தண்ணீர்!’ -தேனி கிராமங்களில் கடும் கட்டுப்பாடுகள்

``தோல்பாவைக் கூத்தில், நான் 5 வது தலைமுறை. இதனை விட்டால் எங்களுக்கு வேறு எதுவும் தெரியாது. 80-களோடு தோல்பாவைக் கூத்தின் வேகம் குறைந்துவிட்டது. திருமணம், திருவிழா, விழிப்புணர்வு நிகழ்ச்சி என எப்போதாவது அழைப்பார்கள்.

தோல் பாவைக் கூத்து
தோல் பாவைக் கூத்து

அதனை வைத்துதான் வீட்டிற்குத் தேவையான உணவு மற்ற தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். இந்தக் கொரோனா ஊரடங்கு போட்டதால், ஏற்கெனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்துவிட்டார்கள். மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது எங்களை மிகவும் சிரமத்திற்கு ஆளாக்கியிருக்கிறது.

`இதே நிலை நீடித்தால், மருந்துகள் தீர்ந்துவிடும்!' - புலம்பும் தேனி தனியார் மருந்தக உரிமையாளர்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காட்டுரோடு அருகே உள்ள ஸ்ரீராம் நகரில் மொத்தம் நான்கு குடும்பங்கள் இருக்கிறோம். அனைவரும் ரேஷன் பொருள்கள் வாங்கியிருக்கிறோம். ஆனால், காய்கறி, மளிகை சாமான்கள் இல்லாமல் குழந்தைகளோடு கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

முத்து லெட்சுமண ராவ்
முத்து லெட்சுமண ராவ்

கலை பண்பாட்டுத்துறையில் பதிவு செய்த நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு கொரோனா நிவாரணத்தொகை கொடுப்பதாகத் தகவல் கிடைத்தது. அது தொடர்பாக விசாரித்தேன். கொரோனா ஊரடங்கு முடிந்த பின்னர்தான் அது கிடைக்கும் என்கின்றார்கள்.

`ரேஷன் பொருள் வந்துருச்சு.. அதை வச்சு என்ன பண்றது?' -கலங்கும் தேனி பழங்குடியின கிராம மக்கள்

மதுரையில், நாட்டுப்புறக்கலைஞர்களுக்கு அங்குள்ள அமைச்சர்கள் செல்லூர் ராஜு மற்றும் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் உதவி செய்து வருகிறார்கள். அதேபோல, தேனி மாவட்டத்தில் உள்ள துணை முதல்வர் ஓ.பி.எஸ், அவர் மகன் தேனி எம்.பி ரவீந்திரநாத்குமார் ஆகியோர் எங்களைப் போன்ற நாட்டுப்புறக்கலைஞர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இது என்னுடைய வேண்டுகோள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேனி மாவட்ட நாட்டுப்புறக்கலைஞர்களின் கோரிக்கையாக நான் முன்வைக்கிறேன்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு