Published:Updated:

`மூணு வேளையும் வெறும் சுடுகஞ்சிதான் சாப்பாடு!' - பளியன்குடி கிராம மக்களின் பரிதாப நிலை

பளியன்குடி கிராமம்
பளியன்குடி கிராமம்

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பளியன்குடி. பளியர் இன மக்கள் வசிக்கும் இக்கிராமத்தில், அத்யாவசியப் பொருள்கள் கிடைப்பதில்லை என்ற தகவல் கிடைக்க, அது தொடர்பாக விசாரணையில் இறங்கினோம்.

`மதுரையை எரிக்கும் கண்ணகி, கோபத்தோடு மேற்கே நடந்து விண்ணோத்திப்பாறை என்ற இடத்தை அடைகிறாள். அங்கு குன்றக்குறவர்கள் குறவைக் கூத்து ஆடுகிறார்கள். அதைக் கண்டு சற்று கோபம் தணிகிறாள் கண்ணகி' என்கிறது சிலப்பதிகாரம். அந்தக் குன்றக்குறவர்கள்தான் இன்றைய பளியன்குடி பளியர் இன மக்கள். மிகவும் தொன்மையான வரலாற்றைக் கொண்ட இவர்கள், 35 குடும்பங்களாக, கூடலூர் மலை அடிவாரப்பகுதியில், மேகமலை வன உயிரின சரணாலயத்துக்கு உட்பட்ட பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வசிக்கின்றனர்.

பளியன்குடி கிராமம்
பளியன்குடி கிராமம்

பளியன்குடி கிராமத்தைச் சேர்ந்த ஒருவரிடம் பேசினோம். ``அரசாங்கம் கொடுத்த 1,000 ரூபாயும் அரிசியும் வாங்கிக்கொண்டு வந்துவிட்டோம். அதை வாங்க லோயர்கேம்ப் போகக்கூட முடியலை. ஆளுக்கு 50 ரூபாய் போட்டு வண்டி பிடிச்சுதான் அரிசியைக் கொண்டு வந்தோம்.

`18 பொருள்கள் இருக்கும் காய்கறிப் பை!' - தேனி உழவர் சந்தை நிர்வாகத்தின் `ஸ்மார்ட் ஐடியா’

சமைக்க காய்கறி, பருப்பு, மளிகைச் சாமான் வாங்க போக முடியலை. லோயர்கேம்ப் போனாலும், போலீஸ்காரங்க விரட்டுறாங்க. அங்கே கடைகளும் இல்லை. வெறும் சோற்றைத்தான் சுடுகஞ்சி வச்சு சாப்பிட்டு உயிர் வாழ்ந்துகிட்டு கிடக்குறோம். ஊறுகாய்கூட இல்லை. மூணு வேளையும் வெறும் சுடுகஞ்சிதான் சாப்பாடு. நாங்க சாப்பிடுவோம். பாவம் சின்ன பிள்ளைங்க என்ன செய்யும் சொல்லுங்க? `உங்களுக்கு ஏதாவது தேவை இருக்கா’னு சில பேர் போன் பண்ணுறாங்க. `ஆமா… பருப்பு, காய்கறி, மளிகைச் சாமான் இல்லை. வெறும் சோத்தைதான் சாப்ட்டுகிட்டு இருக்கோம்’னு சொல்றோம். ஆனால், யாருமே வரமாட்டேங்கிறாங்க. இப்படியே போனா, நாங்க என்ன செய்யுறதுனே தெரியலை” என்றார் தழுதழுத்த குரலில்.

பளியன்குடி கிராமம்
பளியன்குடி கிராமம்
`ஒரே நாளில் 12 பெண்கள் உட்பட 16 பேருக்குக் கொரோனா பாசிடிவ்!’ அதிர்ச்சியளிக்கும் தேனி நிலவரம்

இது தொடர்பாக கலெக்டர் அலுவலக அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``விரைவில் அவர்களுக்கான அத்யாவசியப் பொருள்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு