Published:Updated:

`கொரோனா வைரஸ்.. கேரள எல்லையான தேனியில் தீவிர கண்காணிப்பு!’ - தயார் நிலையில் மருத்துவக்குழு

Theni GH
Theni GH

சீனாவிலிருந்து கேரளா வந்துள்ள பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக வெளியான செய்தியால், கேரள எல்லையில் உள்ள தேனி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள தமிழக மாவட்டங்களில் தேனி மாவட்டமும் ஒன்று. தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள், தமிழக- கேரள எல்லையில் உள்ள காபி தோட்டங்களுக்கு வேலைக்குச் சென்று வருகின்றனர். மேலும், சுற்றுலாத்தலங்கள் அதிகமாக இருப்பதால், கேரளாவில் இருந்து தேனிக்கும், தேனியிலிருந்து கேரளாவுக்கும் தினம்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்றுவருகின்றன. இந்த நிலையில், சீனாவிலிருந்து கேரளா வந்துள்ள பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக வெளியான செய்தியால், கேரள எல்லையில் உள்ள தேனி மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆனால், மக்கள் அச்சப்படத்தேவையில்லை என மாவட்ட கலெக்டர் மரியம் பல்லவி பல்தேவ் கூறியுள்ளார்.

ரசாயனம் போடாத ஆர்கானிக் செங்கரும்பு... சாகுபடியில் அசத்தும் தேனி விவசாயி!
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தேனி மாவட்டத்தில் கேரள எல்லைப் பகுதியான போடி முந்தல், கம்பம் மெட்டு மற்றும் லோயர்கேம்ப் ஆகிய இடங்களில் மருத்துவக்குழு நியமிக்கப்பட்டு, தொடர் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, மக்கள் அச்சப்படத்தேவையில்லை.

காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடனடியாக வந்து சோதனை செய்துகொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Theni GH
Theni GH
குப்பைத்தொட்டியாகும் தேனி வால்கரடு!

இது தொடர்பாக கானாவிலக்கு அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி டீன் ராஜேந்திரன் கூறும்போது, ``தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில், வென்டிலேட்டர் உள்ளிட்ட அவசர சிகிச்சை உபகரணங்களுடன் கூடிய 8 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அடங்கிய மருத்துவக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் மற்றவர்களுக்குப் பரவாமல் இருக்க அவர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, மக்கள் அச்சப்படத் தேவையில்லை” என்றார்.

பின் செல்ல