Published:Updated:

`இடுக்கியில் கொரோனா கண்காணிப்பில் 54 பேர்..!' - அச்சத்தில் தேனி மக்கள் #corona

சாலையில் குளோரின் பவுடர் போடப்படுகிறது
சாலையில் குளோரின் பவுடர் போடப்படுகிறது

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் கொரோனா வேகமாகப் பரவி வருவதால், அதன் அருகே உள்ள தமிழகத்தின் தேனி மாவட்ட மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கொரோனா அச்சம் இந்தியாவை சுழற்றிக்கொண்டிருக்கையில், தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சுற்றுலாத்தலங்கள் மூடப்படுவது என அடுத்தடுத்து நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திவருகிறது கேரள அரசு.

வாகனங்களில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது
வாகனங்களில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது

இந்நிலையில், தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள இடுக்கி மாவட்டத்தில், 54 பேர் அம்மாநில சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால், எல்லையில் அமைந்துள்ள தமிழக மாவட்டமான தேனி மக்கள், கொரோனா குறித்து அச்சமடைந்துள்ளனர்.

`உயர் அதிகாரிகள் என்னை பழிவாங்குகிறார்கள்!'- தேனி 
 ஆட்சியரிடம் கலங்கிய நெடுஞ்சாலைத்துறை ஊழியர்

தேனி மாவட்டத்தையும் இடுக்கி மாவட்டத்தையும் இணைக்கும் கம்பம் மெட்டு, குமுளி, போடி மெட்டு ஆகிய இடங்களில் மாவட்ட பொது சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம் அமைத்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகிறார்கள். மேலும், வாகனங்களில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது.

இதெல்லாம் ஒருபுறம் என்றால், பால், முட்டை, காய்கறி எனக் கேரள மக்களின் அன்றாடப் பொருள்கள் அனைத்தும் தேனி வழியாகத்தான் சென்றாக வேண்டும். மேலும், இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான தேயிலைத் தோட்டங்களில், தேனியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வேலைபார்த்துவருகிறார்கள். தினமும் அவர்கள் அங்கு சென்றுவருகிறார்கள். இப்படி அன்றாடத் தொடர்பில் உள்ள கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் கொரோனோ பாதிப்பு அதிகரித்துவருவது, தேனி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் தேனி கலெக்டர்
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் தேனி கலெக்டர்

இதுகுறித்து மக்கள் அச்சப்பட தேவை இல்லை எனவும், போதிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துள்ளோம் என்றும் மாவட்ட நிர்வாகம் மக்களுக்குத் தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு