Published:Updated:

`70 கிலோமீட்டர் சுற்றி வருகிறோம்!’ - கொரோனா கண்காணிப்பால் அவதிப்படும் தேனி மக்கள்

காட்டுரோடு சோதனைச் சாவடி
காட்டுரோடு சோதனைச் சாவடி

தேனிக்குள் வரும் வாகனங்கள், ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் நிறுத்தப்பட்டு, `காட்டுரோடு சென்று கொரோனா பரிசோதனை செய்துவிட்டுதான் தேனிக்குள் வரவேண்டும்’ எனத் திருப்பிவிடப்படுகின்றன.

தேனி மாவட்டத்தில், இதுவரை 59 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதில், 42 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பெண் ஒருவர் உயிரிழந்தார். தற்போது கானாவிலக்கு அரசு மருத்துவமனையில் 16 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். 12 நாள்களாக கொரோனா தொற்று ஏதும் தேனியில் கண்டறியப்படாத நிலையில், கோயம்பேடு டிராவல் ஹிஸ்ட்ரி மூலம், தேனியில் அடுத்தடுத்து கொரோனா தொற்றுக்கு மக்கள் ஆளானார்கள்.

நாட்டுக் கடுகுச் சாகுபடியில் அசத்தும் தேனி இளைஞர்கள்!
தேவதானப்பட்டி தனியார் பள்ளியில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்.
தேவதானப்பட்டி தனியார் பள்ளியில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்.

இதனால், வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்களைக் கண்காணிக்க, மருத்துவப் பரிசோதனை செய்ய தேனி - திண்டுக்கல் மாவட்ட எல்லையான காட்டுரோடு பகுதியில், சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது.

காட்டுரோடு சோதனைச்சாவடியில் நிறுத்தப்படும் வாகனங்கள், எங்கிருந்து வருகின்றன, என்ன காரணம், ஏன் தேனி மாவட்டத்திற்குள் செல்ல வேண்டும் என விசாரிக்கப்படுகிறது. தொடர்ந்து, தேவதானப்பட்டி ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு அவர்களை அழைத்துச் சென்று, கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனை முடிவுகள் வரும் வரை, தேவதானப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் அவர்கள் தங்கவைக்கப்படுகின்றனர். கொரோனா தொற்று இல்லை என உறுதியான பின்னரே, அவர்கள், தேனி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். தினந் தோறும், நூற்றுக்கணக்கான நபர்கள், இவ்வாறு பரிசோதிக்கப்படுகின்றனர். சென்னை, திண்டுக்கல், திருச்சி ஆகிய மத்திய மற்றும் வட மாவட்டங்களில் இருந்து தேனி மாவட்டத்திற்கு வருபவர்களுக்கே இது எளிமையாக இருக்கும்.

டாஸ்மாக் சென்ற கொரோனா நோயாளி.. அதிர்ச்சிகொடுத்த டிராவல் ஹிஸ்ட்ரி.. அச்சத்தில் தேனி மக்கள்!
கொரொனா வைரஸ்
கொரொனா வைரஸ்

மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி எனத் தென் மாவட்டங்களிலிருந்து தேனிக்குள் வரும் வாகனங்கள், ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் நிறுத்தப்பட்டு, `காட்டுரோடு சென்று கொரோனா பரிசோதனை செய்துவிட்டுதான் தேனிக்குள் வரவேண்டும்’ எனத் திருப்பி விடப்படுகின்றன.

மக்கள் பெரும் சிரமத்தைச் சந்திக்கின்றனர். தொடர் புகார்களும் வந்தவண்ணம் உள்ளன. நேற்று, இது தொடர்பாக தேனி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வெங்கடேசன், அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இது தொடர்பாக தனது அனுபவத்தை நம்மிடையே பகிர்ந்துகொண்ட நபர், ``மதுரையிலிருந்து தேனி வந்து கொண்டிருந்தேன். ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் நிறுத்தி விசாரித்தது போலீஸ். விவரத்தைக் கூறினேன். `இந்த வழியாகச் செல்ல முடியாது. நீங்க வத்தலகுண்டு சென்று, அங்கிருந்து காட்டுரோடு வழியாக தேனிக்குள் போங்க’ எனத் திருப்பிவிட்டார்கள். அந்தப் பாதையில் இதுவரை நான் சென்றதே இல்லை. கிராமங்கள் வழியாக செல்லும் சாலையில் 70 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் சென்று காட்டுரோடு அடைந்தால், அங்கிருந்து தேவதானப்பட்டிக்குக் கூட்டிச் சென்று, அங்கே பரிசோதனை செய்கின்றார்கள். 5 முதல் 7 மணி நேரம் வரை காத்திருந்து, முடிவுகள் வந்த பின்னரே அனுப்புகிறார்கள். இதற்கு, ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் ஒரு மருத்துவக்குழுவை நியமித்து கொரோனா பரிசோதனை செய்தால், 70 கிலோமீட்டர் சுற்றிவந்தது மட்டுமல்லாமல், பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலையைத் தவிர்த்திருக்கலாம். இதனால் மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்” என்றார் வருத்தத்தோடு.

`கொலை… சாலை மறியல்… முற்றுகை!’ - தேனி டாஸ்மாக் களேபரங்கள்

சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசிய போது, ``ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் வரும் அனைத்து வாகனங்களும் திருப்பிவிடப்படவில்லை. அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிவரும் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. பயணிகள் வாகனத்தை மட்டுமே, காட்டுரோடு செல்ல அறிவுறுத்தப்படுகிறது. ஆண்டிபட்டியில், கொரோனா பரிசோதனை மையம் ஏற்படுத்தினால்தான் இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கும். அதனை கலெக்டர்தான் முடிவெடுக்க வேண்டும்” என்றார்

அடுத்த கட்டுரைக்கு