Published:Updated:

`தாராவி டு தேனி; 30 பயணிகள்; போலி இ-பாஸ்!’ - அதிரவைத்த ஆம்னி பேருந்து மோசடி

பறிமுதல் செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள்
பறிமுதல் செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள்

போலி இ-பாஸ் அச்சடித்து, மகாராஷ்டிரா மாநிலத்தின் தாராவியிலிருந்து தேனிக்கு பயணிகளை ஏற்றிவந்த இரண்டு ஆம்னி பஸ்களை, தேனி போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கணவாய் சோதனைச்சாவடியில் நேற்று இரவு வாகன சோதனையில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மதுரையிலிருந்து இரண்டு ஆம்னி பஸ்கள், தேனி நோக்கி வந்துகொண்டிருந்தன. பஸ்ஸை மறித்து போலீஸார் விசாரித்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம், தாராவியிலிருந்து பயணிகளை ஏற்றி வருவதாகவும், இதற்கு தமிழ்நாடு அரசின் இ-பாஸ் வைத்துள்ளதாகவும் டிரைவர்கள் கூறியுள்ளனர்.

``குழந்தைகளுக்கு கொரோனா பற்றி தெரியணும்…” - விழிப்புணர்வு சுவர் ஓவியம் வரையும் தேனி இளைஞர்

அதையடுத்து, அவர்களிடம் இருந்த இ-பாஸை பெற்ற போலீஸார், அதை சோதித்துப் பார்த்துள்ளனர். அப்போது அந்த பாஸ் போலியானது என தெரியவந்தது. அதையடுத்து, பேருந்தை பறிமுதல் செய்து ஆண்டிபட்டி காவல்நிலையத்துக்கு கொண்டுவந்தனர். தொடர்ந்து, பேருந்து உரிமையாளர், டிரைவர்கள் என நால்வர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக போலீஸார் கூறும்போது, ``போலி இ-பாஸ் அடித்து பயணித்துள்ளனர். இரண்டு பேருந்துகளையும் பறிமுதல் செய்துள்ளோம். பேருந்தில் இருந்த 30 பயணிகள், கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர், தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பப்பட்டனர். பேருந்தின் உரிமையாளர் சண்முகநாதன், மேலாளர் செந்தில்குமரன், டிரைவர்கள் ராமையா, பிச்சைமணி ஆகிய நால்வரை கைது செய்துள்ளோம். ஏற்கெனவே இதுபோன்ற ஒரு மோசடியில் ஈடுபட்டு மகாராஷ்டிரா டு தேனி வந்திருப்பதாக தெரியவந்துள்ளது. அது தொடர்பாக விசாரணை நடக்கிறது” என்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள்
பறிமுதல் செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள்
`மனசு அவ்வளவு வலியா இருக்கு...!' -கருகும் கோழிக்கொண்டைப் பூக்களால் கலங்கும் தேனி விவசாயிகள்

வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களால்தான் தேனியில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்துவருகிறது. இந்த நிலையில், முறைகேடாக, போலி இ-பாஸ் மூலம் வெளிமாநிலங்களில் இருந்து ஆட்களை ஏற்றிவந்து தேனியில் இறக்கி விடும் கும்பல் தற்போது கைதாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு