Election bannerElection banner
Published:Updated:

தேனி: பன்றி தழுவும் போட்டி - மிருகவதைத் தடுப்புச் சட்டத்தில் 17 நாள்களுக்குப் பிறகு வழக்கு!

பன்றி தழுவும் போட்டி
பன்றி தழுவும் போட்டி

பொங்கல் பண்டிகையை ஒட்டி, தேனி நகர்ப் பகுதியில் பன்றி தழுவும் போட்டி நடந்தது. இந்தப் போட்டியை நடத்திய நால்வர்மீது மிருகவதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

ஜல்லிக்கட்டுப் போட்டிபோலவே, பல்வேறு கட்டுப்பாடுகளுடன், விதிமுறைகளுடன் தேனி நகரின், குறமகள் வள்ளி நகர் பகுதியில் பன்றி தழுவும் போட்டி கடந்த ஜனவரி 16-ம் தேதி நடைபெற்றது. இதை வன வேங்கைக் கட்சியினர் ஒருங்கிணைத்திருந்தனர்.

பன்றி தழுவும் போட்டி
பன்றி தழுவும் போட்டி

`சங்ககால குறிஞ்சி நிலத்தில், உழவுப் பணிக்கு பன்றிகள் பயன்பட்டன என்பதற்கான சான்றுகள் புறநானூற்றில் உள்ளன. அதனால், பன்றி தழுவும் போட்டி நடத்துகிறோம்’ என வன வேங்கைக் கட்சியினர் கூறினர்.

`பன்றி தழுவும் போட்டி!' - தேனியில் ஒரு சுவாரஸ்ய நிகழ்ச்சி

70 முதல் 100 கிலோ எடைகொண்ட பன்றிகள் மட்டுமே போட்டியில் கலந்துகொள்ள முடியும். பன்றியை ஒருவர் மட்டுமே பிடிக்க வேண்டும். அதன் பின்னங்காலைப் பிடித்து எல்லைக் கோட்டை கடக்காவண்ணம் நிறுத்த வேண்டும் போன்ற விதிகளுடன் போட்டி நடந்தது.

பன்றி தழுவும் போட்டி
பன்றி தழுவும் போட்டி

இந்தப் போட்டியில், திண்டுக்கல், மதுரை போன்ற பகுதிகளிலிருந்து வரவழைக்கப்பட்ட 11 பன்றிகள் கலந்துகொண்டன. சிறந்த பன்றிக்கும், சிறந்த பன்றிபிடி வீரருக்கும் பரிசுகள் கொடுக்கப்பட்டன.

இந்தநிலையில், பன்றி தழுவும் போட்டி நடந்து கிட்டத்தட்ட 17 நாள்கள் கடந்தநிலையில், போட்டியை நடத்திய வன வேங்கைக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் உலகநாதன், தேவதானப்பட்டி பரமசிவம், சக்தீஸ்வரன், அல்லிநகரம் செல்வி மற்றும் பலர் மீது அல்லிநகரம் சார்பு ஆய்வாளர் கெளதமன் புகாரின் பேரில் மிருகவதைத் தடுப்புச் சட்டம் 1960-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

தேனி: சசிகலா போஸ்டர்மீது ரவீந்திரநாத் போஸ்டர்! - நள்ளிரவில் அ.தி.மு.க - அ.ம.மு.க வாக்குவாதம்
பன்றி தழுவும் போட்டி
பன்றி தழுவும் போட்டி

முதல் தகவல் அறிக்கையில், `கொண்டாட்டம் என்ற பெயரில், பன்றிகளைவைத்துப் போட்டி நடத்தி, பன்றிகள் கடித்தால் மனித உயிருக்குத் தீங்கு நேரிடும் எனத் தெரிந்தும், பன்றிகளை மைதானத்தில்விட்டு அதைப் பிடிக்கும் போட்டியை நடத்தியிருக்கிறார்கள். மேலும், பன்றியின் வால் மற்றும் பின்னங்கால் பகுதியைப் பிடித்து இழுத்து, பன்றிகளை கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு