Published:Updated:

`சோதனைக்காக வாகனத்தை நிறுத்திய போலீஸார்; பேரிகார்டில் முட்டிக்கொண்ட இளைஞர்!’- தேனி அதிர்ச்சி

பேரிகார்டில் முட்டும் இளைஞர்
பேரிகார்டில் முட்டும் இளைஞர்

ஊரடங்கு சூழலில், அநாவசியமாக வெளியே சுற்றும் நபர்களுக்கு நூதனத் தண்டனை கொடுத்தும், ட்ரோன் கேமராக்கள் வைத்து விரட்டியும் எச்சரிக்கை விடுத்து வரும் போலீஸாருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் தேனி இளைஞர் ஒருவர்.

தேனி மாவட்டம் அல்லிநகரம் அடுத்துள்ள பொம்மையகவுண்டன்பட்டியில் தேனி பெரியகுளம் சாலையில், பிள்ளையார் கோவில் அருகே போலீஸார் பேரிகார்டு அமைத்து, வாகன சோதனையில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். அப்போது, லெட்சுமிபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தேனியிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் சொந்த ஊரான லெட்சுமிபுரத்திற்குச் சென்றுகொண்டிருக்கிறார். பொம்மைய கவுண்டன்பட்டி சோதனைச் சாவடியில் அவரை போலீஸார் நிறுத்தியுள்ளனர்.

பேரிகார்டில் முட்டும் இளைஞர்
பேரிகார்டில் முட்டும் இளைஞர்

`எங்கே சென்றுவிட்டு வருகிறீர்கள்?’ என விசாரித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், அங்கே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டுள்ளார்.

`குட்கா வாங்கப்போறேன்!’ - தேனி போலீஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த மதுரை நபர்

இதைக்கண்டு அதிர்ந்துபோன போலீஸார், `ஏன் இப்படி செய்கிறீர்கள்? காரணம் இல்லாமல் இப்படி வெளியே சுற்றலாமா?’ எனக் கேட்டுள்ளனர். இதற்கு ஆத்திரமடைந்த அந்த இளைஞர், சாலையின் நடுவே போடப்பட்டிருந்த பேரிகார்டை தனது தலையால் முட்டிக் கீழே தள்ளிவிட்டு, பக்கத்தில் இருந்த பேரிகார்டில் தனது தலையை முட்டிக் காயம் ஏற்படுத்த முயன்றுள்ளார். இதை, வீடியோவாகப் பதிவு செய்த அக்கம் பக்கத்தினர், சமூக வலைதளங்களில் வெளியிடவே தற்போது அந்த வீடியோ வைரலாகியுள்ளது.

தினகரன்
தினகரன்
`நடுரோட்டில் இறக்கிவிடப்பட்ட நிறைமாத கர்ப்பிணி' -தேனி காவல்துறையின் நடவடிக்கையால் சர்ச்சை

இது தொடர்பாக அல்லிநகரம் போலீஸாரிடம் பேசிய போது, ``அந்த இளைஞர் பெயர் தினகரன். வயது 26. லெட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர். கடந்த நான்கு நாள்களுக்கு முன்னர் ஊர் சுற்றியபோது தேனி போலீஸார் அவரது இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்துள்ளனர். இப்போது வேறு வாகனத்தில் வந்துள்ளார். பொம்மைய கவுண்டன்பட்டியில் போலீஸார் வாகனத்தை நிறுத்தியுள்ளனர். அதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், பேரிகார்டில் தலையைக் கடுமையாக இடித்து காயம் ஏற்படுத்த முயன்றார். அவர் மீது ஊரடங்கை மீறி வெளியே சுற்றுதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு